என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.1 கோடியில் மருந்தக கட்டிடம்
- அரசு கால்நடை மருந்தகத்தில் ரூ.1 கோடியில் புதிய மருந்தக கட்டிடம் கட்டப்படுகிறது.
- கட்டுமான பணிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அரசு கால்நடை மருந்தகத்தில் ரூ.1 கோடியில் புதிய மருந்தக கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜபாளையம் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் சேத்தூரை தலைமை இடமாக கொண்டு கால்நடைகளுக்கு ஆண்டாண்டு காலமாக மருத்துவம் பார்த்து கால்நடைகளின் பெருக்கத்திற்கு பெரிதும் உதவியது சேத்தூர் கால்நடை மருத்துவமனை ஆகும்.
இந்த மருத்துவமனை குறித்து கால்நடைத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தி மருத்துவமனை வளாகம் முழுவதும் பேவர் பிளாக் தளம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை உதவி இயக்குநர் ராஜராஜேசுவரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவிப் பொறியாளர் பால சுப்பிரமணியன், பேரூர் சேர்மன் பால சுப்பிர மணியன், பேரூர் செய லாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி மாரிச் செல்வம் மற்றும் பேரூர் கவுன்சி லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






