என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உள்பட 7 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியக்குடி தெருவை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது43). இவரது 2-வது மகள் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இவர் தனது உறவினரான மவுலி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 9-ந்தேதி திருமணம் நடக்க உள்ளது.

    இந்த நிைலயில் அவர் திடீரென மாயமானார். எங்கு சென்றார்? என தெரியவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கண்ணம்மாள் புகார் கொடுத்தார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ்(33). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு திரும்பி வந்தபோது வீடு பூட்டி இருந்தது. குழந்தைகளுடன் மனைவி எங்கு சென்றார் என தெரியவில்லை.

    இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி கோபாலன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம்(31). இவரது மனைவி அருணா. இவர்க ளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடைக்கு செல்வதாக கூறி சென்ற அருணா மாயமானார். எங்கு சென்றார்? என தெரியவில்லை. இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் முத்தாள் நகரை சேர்ந்தவர் வல்லவராஜ். இவரது மனைவி அங்காளஈஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் குழந்தை களுடன் மாயமானார். அருகில் வசிக்கும் அன்னக்கிளி என்பவர் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்காளஈஸ்வரியின் சகோதரி கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன்நகர் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி ஆசாரி காலனியை சேர்்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ேஜாதிலட்சுமி(23). அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். இரவில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்தவர் அதிகாலையில் மாய மானார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி டவுன் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி சீனிவாச நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(40). இவரது மகன் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். வீட்டில் உள்ள உண்டியல் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. எங்கு சென்றார்? என தெரியவில்லை. இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் மேட்டமலையை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் காமாட்சி பட்டாசு ஆலையில் வேலை பார்்த்து வருகிறார். அங்கு அவருக்கு விக்கி என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் திடீரென மாய மானார். உறவினர்கள் விசாரித்ததில் விக்கியும் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மாணிக்கவாசகரின் சிறப்புகள் குறித்து முத்துச்சாமி, தனலட்சுமி பக்தி சொற்பொழிவு ஆற்றினர்.

    மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி சப்பரத்தில் வீதி உலா வந்தார். பஞ்ச வாத்தியங்கள், சங்க நாதம் முழங்கி, திருவாசகம் பாடி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • விபத்தில் வாலிபர் பலியானார்.
    • மாரனேரி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் சக்திவேல். உறவினர் இவரது வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் ைசக்கிளில் வெளியே சென்றார்.

    உவர்குளம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் படுகாயமடைந்த சக்திவேலை காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் எ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள நரிக்குடியை சேர்ந்தவர் வைரமுத்து(வயது45), கட்டிடத்தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    அங்குள்ள ஒரு கிணற்றின் சுவற்றில் அமர்ந்திருந்தபோது தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து மனைவி முத்து கணபதி கொடுத்த புகாரின்பேரில் மாரனேரி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபய தாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டு கள் பழமையானதும், 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற வைணவ கோவிலா கும். வைணவ - சைவ சமய வழிபாட்டிற்கு முன்னு தாரணமாக விளங்கும் இந்த கோவிலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் வளாகத்தில், சிவபெருமான் கருநெல்லிநாதர் சுவாமியாக அருள் பாலிக்கும் சிவன் கோவிலும் அமைந்துள்ளது மிகச் சிறப்பானதாகும். மேலும் மலை உச்சியில் முருகப்பெருமான் கோவிலும் அமைந்துள்ளது.

    இத்தனை சிறப்பு மிக்க இந்த கோவிலில், ஆனி பிரமோற்சவ திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. முன்னதாக ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் சுவாமி க்கும், ஸ்ரீசெங்க மலத்தாயார் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க ஆனி பிரமோற்சவ திருவிழா கொடி யேற்றப்பட்டது. அப்போது சிறப்பு அலங் காரத்தில் எழுந்த ருளிய ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆனி பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் வருகிற 5-ந் தேதி (புதன் கிழமை) நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபய தாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • முன்னாள் படைவீரர்கள், தியாகிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது/
    • அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படை வீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர் களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நாளை (28ந்தேதி) காலை 11 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படை வீரர்கள், படைவீரர் கள் மற்றும் சார்ந்தோர் குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
    • பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ (1-ந் தேதி) வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதன்படி வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்து உள்ளது.

    சனி பிரதோஷத்தை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.

    • ஊராட்சி நிர்வாக பொறுப்பை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
    • ஊராட்சி நிர்வாக பொறுப்பை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வெம்பக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் பொன் பாண்டியன். இவர் வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கேட்டு கீழராஜ குலராமன் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் இதற்கு ஒப்புதல் வழங்க ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து லஞ்சம் கேட்டார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அவர்களது ஆலோசனை களின்படி பொன் பாண்டியன் ஊராட்சி அலுவலகத்தில் நேற்று லஞ்ச பணத்தை காளி முத்துவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் காளிமுத்துவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    லஞ்ச வழக்கில் காளிமுத்து கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கீழராஜ குல ராமன் ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு துணை தலைவர் குருவைய்யா மற்றும் பஞ்சாயத்து கிளார்க் கருத்தபாண்டி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாக பொறுப்பை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனை வலியுறுத்தி இன்று கீழராஜகுலராமன் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ராஜபாளையம்-வெம்பக்கோட்டை சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.

    இருபுறங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மறியலால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். மறியல் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ராமநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நீடித்தது.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாசாணம் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது21). அதே பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (24). முத்துகிருஷ்ணனும், மணிகண்டனும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நேற்று இரவு மது அருந்திவிட்டு நள்ளிரவு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது.

    மோட்டார் சைக்கிளை முத்துகிருஷ்ணன் ஓட்டி வந்தார். மணிகண்டன் பின்னால் அமர்ந்து வந்தார். மோட்டார் சைக்கிள் ஆராய்ச்சி ஊரணி பகுதியில் வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

    பின்தலையில் பலத்த காயமடைந்த முத்து கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் கிடந்த மணிகண்டன் உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சேத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மணிகண்டனை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்; 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்

    சாத்தூர் மேலகாந்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது38).இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோவில் சாத்தூரில் இருந்து சத்திரப்பட்டி நோக்கி சென்றார். அப்போது எதிர்திசையில் அமீர்பாளையம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் மாரிச்செல்வம்(21) மோட்டார் சைக்கிளில் மாசானம் மகன் அபிகுட்டியுடன்(21) வந்தார். மாரிச்செல்வம் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. பி.எஸ்.என்.எல். டவர் அருகே சர்வீஸ் ரோட்டில் வந்தபோது முன்னால் சென்ற காரை முந்த முயன்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மாரிமுத்து ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சுழி நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
    • மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிளை நூலகத்தில் அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக, மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். போட்டித்தேர்வுக்காக படிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு கிளை நூலகத்தின் நூலகர் மற்றும் வாசகர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருச்சுழி கிளை நூலகத்திற்கு அருப்புக்கோட்டை ஜெயன்ட்ஸ் குழுவினர் மாணவர்களின் எதிர்கால நலன்கருதி நூல்களை அன்பளிப்பாக வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவின் தலைவர் வெள்ளையரெட்டி தலைமை தாங்கினார். திருச்சுழி கிளை நூலகத்தின் வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் முன்னிலை வகித்தார். நூலகரான பாஸ்கரனிடம் அருப்பக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவினர் ரூபாய் 4,000 மதிப்புள்ள போட்டித்தேர்வுக்கான பாடப்புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினர். ஜெயண்ட்ஸ் குழுவின் இணைய அலுவலர் திருவண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். ஜெயண்ட்ஸ் குழுவின் நிதிகளுக்கான இயக்குனர் காத்தமுத்து, பாக்கியராஜ், நூலக பணியாளர் மஞ்சுளா, போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும் என மாபா பாண்டியராஜன் கூறினார்.
    • தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது.

    விருதுநகர்

    விருதுநகரில் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டிய ராஜன் கூறியதா வது:-

    மத்திய அரசு மின் கட்ட ணத்தை உயர்த்த வில்லை மானியத்தை தான் திரும்ப பெற்றுள்ளது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக் கும் தகவல் பரிமாற்றத்தில் உள்ள இடைவெளி காரணமாக பிரச்சினை ஏற்பட் டுள்ளது.

    ஏற்கனவே தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டது. தமிழக நிதி அமைச்சர் மானியங்களை பெறுவதில் அக்கறை கொண்டு மத்திய நிதி மந்திரியை சந்தித்து பேசி தீர்வு காண வேண்டும். விருதுநகரில் அம்மா உணவகம் பூட்டப்பட்டுள் ளது. இதனை உடனடியாக திறக்க கோரி அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அடை யாளம் காட்டும் வேட்பா ளரை வெற்றி பெறச்செய்வோம்.

    இலங்கை தமிழர் பிரச்சி னையில் அ.தி.மு.க. என்றுமே அரசியல் செய்த தில்லை. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணா மலை குறிப்பிட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அரசியல் செய்த சில அரசி யல் கட்சிகளை பற்றி தான்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மற்றும் மாபா பாண்டிய ராஜன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் மான்ராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமாரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஒன்றிய செய லாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 3,100 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் விருதுநகர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாதனை படைத்தார்.
    • விருதுநகர் திரும்பிய அவருக்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் முத்து தெருவை சேர்ந்தவர் சண்முகமூர்த்தி-ருக்குமணி. இவர்களது மகன் வீரமணிகண்டன் (வயது 19). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டுபடித்து வரும் இவர், "தூய்மை இந்தியா" விழிப்புணர்வை வலியுறுத்தி காஷ்மீர் வரை சுமார் 3 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். பல்வேறு மாநிலங்களில் வீரமணிகண்டனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கடந்த 10-ந்தேதி சைக்கிள் பயணம் மேற்கொண்ட அவர் 21-ந்தேதி காஷ்மீரை சென்றடைந்தார். விருதுநகர் திரும்பிய அவருக்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். 

    ×