என் மலர்
விருதுநகர்
- 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது.
- மாரிமுத்து என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர்.
வார விடுமுறை நாட்களில் சிறுமியை எதிரில் வசிக்கும் வீட்டில் விட்டுவிட்டு அவரது பெற்ேறார் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று அவர்கள் தங்களது மகளை எதிர் வீட்டில் விட்டு சென்றார். அப்போது மாரிமுத்து என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது.
இதுகுறித்து சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரி சாந்தி விசாரணை நடத்தி சிவகாசி அனைத்து மகளிர் ேபாலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
- பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த சாப்டூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதத்தின் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஆனி மாத பவுர்ணமி (3-ந்தேதி), நாளை (1-ந்தேதி) சனி பிரதோசத்தை முன்னிட்டு இன்று முதல் 4-ந்தேதி வரை பக்தர்கள் தசரினம் செய்ய வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
இன்று காலை மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் மலையடிவாரத்தில் திரண்டனர். 7 மணியளவில் பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் மலையேறினர்.
மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். சாமி தரிசனம் செய்ய செல்பவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. 60 வயது மேற்பட்டவர்களுக்கு மலையேற அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்திருந்தனர்.
அனுமதி நாட்களில் மழை அறிகுறிகள் இருந்தால் மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நாளை சனி பிரதோசம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையொட்டி அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் செய்து வருகின்றனர்.
- விருதுநகர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
- இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது31). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று காருசேரிக்கு சவாரி சென்று விட்டு விருதுநகர்-சிவகாசி ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.
மத்தியசேனை பகுதியில் வந்த போது ரோட்டின் குறுக்கே மூதாட்டி ஒருவர் வந்துவிட்டார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்பினார்.அப்போது நடுரோட்டில் கவிழ்ந்து ஆட்டோ விபத்துக் குள்ளானது. டிரைவர் செந்தில்குமார் ஆட்டோவின் அடியில் சிக்கிக் கொண்டார்.
இதில் படுகாயமடைந்த அவரை, அந்த பகுதி வழியாக வந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
- மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
பிரதமர் மோடி மதம் சார்ந்த பிரச்சினைகளையே பேசி வருகிறார். வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
மணிப்பூரில் கடந்த 56 நாட்களாக பற்றி எரிகிறது. அதைப்பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வெறுப்பு அரசியல் நடைபெறும் இடங்களுக்கு ராகுல் காந்தி நேரில் செல்கிறார். ஆனால் பிரதமர் மோடி அதை தவிர்ப்பதையே வாடிக்கை யாக கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 2 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில் ஒரு கோடி குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. பொருளாதார வல்லுனர் களும் தமிழகத்தில் ஒரு கோடி குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்க வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே தமிழக அரசு இது ஒரு சிறந்த திட்டமாக உள்ள நிலையில் ஒரு கோடி பெண்களுக்கு மேல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
அம்மா உணவகம் உறுதியாக தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் தெரிவித்துள்ளார். எனவே அ.தி.மு.க.வினர் அம்மா உணவகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசும் அண்ணாமலைக்கு அக்கறை இருந்திருந்தால் அந்த காலகட்டத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசுக்கு எதிராக போராடியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ண சாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், நகரதலைவர் நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. நேரு யுவகேந்திரா சார்பில் நடத்தப்பட்ட இளைஞர் பாதுகாப்பு விழாவில் கலந்து கொண்டு இளைஞர்களுக்கான போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கினார்.
- போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருச்சுழி
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சுழியில் வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி ஏற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கணேசன் தலைமையில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் பாண்டி சங்கர் ராஜா, பள்ளி தலைமை ஆசிரியை கவிதா மற்றும் ஆசிரியர்கள் கனகராஜ், செல்வராஜ், கதிரேசன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், கிராம உதவியாளர் இளவரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையத்தில் மாயூரநாதர் கோவில் தேரை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
- வருகிற 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற அஞ்சல்நாயகி உடனுறை மாயூரநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி பெருந் திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாள் சிம்மன், காமதேனு, யானை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
விழாவில் நாளை சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வருகிற 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறு கிறது. மாயூரநாதரும், அஞ்சல்நாயகியும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். நூற்றுக் கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
இதை யொட்டி ராஜபாளையம்-மதுரை சாலையில் பெத்தவ நல்லூர் பகுதியில் நிறுத்தப் பட்டுள்ள தேரை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேகவருமான ராமராஜ் மற்றும் சங்கத்தினர் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். சீரமைக்கும் பணியில் தேர் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.
- பணம்-நகைகளை மோசடி செய்து பெண்ணுக்கு கொலை மிரட்டிய தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆலங்குளம் டி.என்.சி. காலனியை சேர்ந்தவர் சுகுணாதேவி(வயது37). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்தநிலை யில் கணவரின் நண்பரான பால்பாண்டி என்பவருடன் பழகத் தொடங்கினார். அவர் தான் ஓட்டல், டிராவல்ஸ் நடத்தி வரு வதாக சுகுணா தேவியிடம் கூறியுள்ளார். மேலும் அவரது குழந்தை களிடம் அன்பாக பழகி யுள்ளார்.
இதைப்பார்த்து அதை நம்பிய சுகுணாதேவி அவருடன் சேர்ந்து வாழ தொடங்கினார். அவரது கணவரின் இறப்புக்காக கிடைத்த ரூ.10 லட்சம் மற்றும் நகைகளை பால்பாண்டி தனது தொழிலுக்காக கேட்டு வாங்கினார்.
மேலும் சுகுணா தேவியின் வீட்டில் உள்ள பொருட்க ளையும் எடுத்துச் செல்ல தொடங்கினார். இதனால் சந்தேகமடைந்த சுகுணாதேவி தனது பணம், நகைகளை திருப்பிக் கொடுக்குமாறு பால்பா ண்டி யிடம் கேட்டு வந்தார். ஆனால் பால்பாண்டி பணம், நகைகளை கொடுக் காமல் தட்டிக்களித்து வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று சுகுணாதேவியின் வீட்டுக்கு பால்பாண்டி மற்றும் அவரது தந்தை முருகன் வந்தனர். அப்போது அவர்கள் சுகுணாதேவியை அவதூறாக பேசி பணம், நகைகளை திருப்பி கேட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகுணாதேவி ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றினார்.
விருதுநகர்
விருதுநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாக ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விருதுநகரில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
மாணிக்கம்தாகூர் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி புதிய கட்டிடத்தை பார்வை யிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவ லர்கள் சிரமமின்றி பணி புரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறை களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் ரூ.309.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறந்து வைக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் தண்டபாணி, செயற்பொறியாளர் இந்துமதி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- களப்பணிக்கு செல்வின் பிரபாகரன், சமூக வலைதள பிரிவுக்கு புகழேந்தி, மகளிர் பிரிவுக்கு ஜெயலலிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணிக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் தெற்கு மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி ஒருங்கிணைப்பாளர்களாக களப்பணிக்கு செல்வின் பிரபாகரன், சமூக வலைதள பிரிவுக்கு புகழேந்தி, மகளிர் பிரிவுக்கு ஜெயலலிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, அருப்புக் கோட்டை நகரத்திற்கு விஜயராஜா, காட்வின் தன்மா, பவித்ரா ஆகியோ ரும், அருப்புக் கோட்டை தெற்கு ஒன்றியத்திற்கு அன்புராஜ், சரவணகுமார், சிந்துஜா, வடக்கு ஒன்றியத்திற்கு பிரவீன், பெரிய கருப்பசாமி, முருகேஸ்வரி, சாத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு சோலைமுத்து, பிரவீன்குமார், வைஜெயந்தி, விருதுநகர் கிழக்கு ஒன்றியத்திற்கு கார்த்திக், மணிகண்டன், பானுப்பிரியா, ராஜபாளையம் தொகுதிக்கு பிரபாகரன், சதீஷ், லட்சுமி லக்ஷனா, ராஜபாளையம் நகரம் வடக்கு ஒன்றியத்துக்கு பிரபாகரன், முத்துராஜ், யோக சித்ரா, ராஜபாளையம் நகரம் தெற்கு ஒன்றியத்துக்கு பாலன், மருது பாண்டியன், கவிதா, ராஜபாளையம் மேற்கு ஒன்றியத்திற்கு லிங்கேஸ்வரன், ரூபன் மிசி ஷெல்டன், கற்புக்கரசி, ராஜபாளையம் செட்டியார் பட்டி பேரூராட்சிக்கு சாமுவேல் சகாயம், லெனின், விஜயலட்சுமி, சேத்தூர் பேரூராட்சிக்கு ஜெயசூர்யா, ராஜதுரை, சின்னதாய் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தூர் தொகுதிக்கு வீர சுப்பிரமணியன், ராகேஷ், செல்வி, சாத்தூர் நகரத்திற்கு முனீஸ்வரன், வினோத், பொன் செல்வி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு வெங்க டேசன், கருப்பசாமி, திவ்யா, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்கு கணேசன், ரங்கராஜ், ராஜ லட்சுமி, ராஜபாளையம் தெற்கு ஒன்றியத்திற்கு மருதுராஜ், முரளி, தமிழரசி, ராஜபா ளையம் கிழக்கு ஒன்றியத்துக்கு முத்துக்கு மாரசாமி, புதியராஜ் ஸ்டாலின், சந்தான சுந்தரி, சாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்கு ஹரிஹரன்.
மதன்குமார், மகேஸ்வரி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு செந்தில்குமார், ஆனந்தகுமார், கலைஞர் சுதந்திர ராணி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்திற்கு அஜ்மல் கான், விக்னேஸ்வ ரன், காளீஸ்வரி, ஸ்ரீவில்லி புத்தூர் ஒன்றியத்துக்கு தன்ராஜ், சுந்தர்ராஜன், சீதாலட்சுமி, வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு வள்ளிநாயகம், வீர அழகு, இந்துஜா, மம்சாபுரம் பேரூராட்சிக்கு வல்லரசு, மாரிசெல்வம், சந்தான புஷ்பம், வ.புதுப்பட்டி பகுதிக்கு சஞ்சய் குமார், வில்லா ராஜா, விஜய லட்சுமி, வத்திராயிருப்பு பேரூராட்சிக்கு வீரக்குமார், விஜய பிரகாஷ், பஞ்சு, எஸ்.கொடிக்குளம் பகுதிக்கு மனோ சுந்தர், சாதிக் அலி, மகாலட்சுமி, சுந்தரபாண்டியம் பகுதிக்கு விக்னேஷ், நாகராஜ், முத்துலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- அன்னப்பராஜா பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
- மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு மன்றத்தின் சார்பில், போதை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடை பெற்றது. தலைமையாசிரியர் நல்லாசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் பேசுகையில், இன்றைய நாளில் மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால், கல்வியில் நாட்டமின்மை, ஒழுக்கக்கேடுகள், சமூகவிரோதச் செயல்பாடுகள், சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இவைகளிலிருந்து மாணவர்கள் விடுபடவேண்டும் என்றார். கூட்டத்தில் போதை தடுப்பு மன்ற உறுப்பினர்களும் மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
- குப்பை கொட்டும் இடமாக கோவில் அன்னதான கூடம் மாறியது.
- கோவில் காம்பவுண்டு பகுதியில் குப்பை தொட்டியை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பூமிநாதன் கோவில் அமைந்துள்ளது.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
பூமிநாதன் கோவில் வளாகத்தில் அன்ன தான கூடம் உள்ளது. இதன் பின்புறமாக காம்பவுண்டு சுவர் அருகே குப்பை தொட்டி வைக்கப் பட்டுள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த குடியி ருப்பு வாசிகள் குப்பைகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
மேலும் திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டுவதால் நாள் கணக்கில் குப்பைகள் மலை போல் தேங்கும் அவலம் உள்ளது. எனவே கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் குப்பை ெதாட்டியை வைக்காமல் வேறுபகுதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், புகழ்பெற்ற இந்த கோவிலின் சுற்றுப்பு றத்தை தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே கோவிலுக்கு அதிகமானோர் வருவார்கள். ஆனால் ஊராட்சி நிர்வாகம் கோவில் காம்பவுண்டு பகுதியில் குப்பை தொட்டியை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.
இனிமேலாவது அதனை அகற்றி கோவில் சுற்று வட்டார பகுதியை தூய்மை யாக வைத்திருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்.
- முத்துபாண்டி என்பவரை பழிக்கு பழி வாங்க வந்ததாக கூறினார்.
விருதுநகர்
சிவகாசி தனியார் ஆஸ்பத்திரி பின்புறமுள்ள பகுதியில் சிவகாசி நடராஜர் காலனியை சேர்ந்த மகேந்திரன்(24), தெற்கு தெருவை சேர்ந்த மகேந்திரகுமார், முடங்கிநாடார் தெருவை சேர்ந்த சிவகிரி(20) ஆகியோர் சாலையில் நின்று கொண்டு அரிவாளை காட்டி அந்த பகுதியில் சென்ற பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தனர். அந்த பகுதியில் ரோந்து சென்ற டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் அவர்களை பிடித்து விசாரித்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி வெள்ளைசாமி யாபுரம் தெருவை ேசர்ந்த வர் தினேஷ்குமார்(24). இவர் சிவகாசி வெம்பக் கோட்டை ரோட்டில் உள்ள அய்யனார் காலனி பகுதியில் அரிவாளுடன் நின்று கொண்டு அந்த பகுதியில் சென்றவர்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார். தகவல் அறிந்த டவுன் ேபாலீசார் அங்கு வந்து தினேஷ்குமாரை பிடித்து விசாரித்தனர். அவர் அந்த பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவரை பழிக்கு பழி வாங்க வந்ததாக கூறினார். போலீசார் அவரை கைது செய்தனர்.






