என் மலர்
விருதுநகர்
- சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் சிவகாசியில் நின்று செல்ல போராடிய அனைவருக்கும் மாணிக்கம் தாகூர் எம்.பி. நன்றி தெரிவித்தார்.
- சிவகாசி மக்களுக்கும், மதுரை எம்.பி. வெங்கடேசன், வைகோவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் எண்.16101 சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் என்று 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ரெயில்வே மந்திரியிடம் கடிதம் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் கொடுத்தார்.
அதன் பின் கடந்த செப்டம்பர் 2022-ல் மதுரை எம்.பி. ரெயில் மறியல் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்து தென்னக ரெயில்வே ஆேலாசனை கூட்டத்திலும் வைகோவுடன் இணைந்து வலியுறுத்தினார்.
இந்நிலையில் தற்போது சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நின்று செல்லும் ரெயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. தன்னுடன் போராடிய சிவகாசி மக்களுக்கும், மதுரை எம்.பி. வெங்கடேசன், வைகோவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மத்திய ரெயில்வே மந்திரிக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதிவிட்டுதான் இதற்கு ஏற்பாடு செய்ததாக கூறுவது ஏற்புடையதல்ல என்றும் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
- கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் துன்புறுத்தப்பட்டது.
- அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது25). இவர் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் சீனுவுக்கும், எனக்கும் கடந்த 2022-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் சார்பில் 23 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொ ருட்கள் ெகாடுக்கப்பட்ன.
இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த சில மாதங்களாக சீனுவின் பெற்றோர் செல்லதுரை-மகாராணி ஆகியோர் துன்புறுத்துகின்றனர். இதனை கணவர் கண்டு கொள்வதில்லை. மேலும் மாமனார் தவறான உள்நோக்கத்துடன் நடக்க முயல்கின்றார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சீனு, அவரது பெற்றோர் ஆகிய 3 பேர் மீதும் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 108 ஆம்புலன்சு உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள முதலிப்பட்டிைய சேர்ந்தவர் சமுத்திரகனி. இவரது மகன் சண்முககனி(வயது29). இவர் 108 ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முககனி தான் ஒரு பெண்ணை காதலிப்ப தாகவும் திருமணம் செய்து வைப்பதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் சிறிது காலத்திற்கு பின் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சண்முககனி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பால்பண்ணை உரிமையாளரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்துள்ளனர்.
- ரூ.10½ லட்சம் மோசடி செய்ததாக நிசார் சுக்கன், சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சுந்தர மூர்்த்தி (வயது45). இவர் அதே பகுதியில் பால்பண்ணை நடத்தி வருகிறார். இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீட்டை சேர்ந்த நிசார்சுக்கன், தனது கம்பெனிக்கு ஒப்பந்த அடிப்படையில் பாைல கொள்முதல் செய்து வந்தார்.
அதன்படி நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் லிட்டர் பாலை சுந்தரமூர்த்தி சப்ளை செய்தார். கடந்த 6 மாதத்தில் பாலை சப்ளை செய்ததில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் பெற வேண்டியுள்ளது. ஆனால் பணத்தை தராமல் நிசார்சுக்கன், அவரது கம்பெனி மேலாளர் சுப்பிரணமணியன் ஆகியோர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுந்தரமூர்த்தி ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு நடவடிக்கை எடுக்குமாறு ேபாலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்அடிப்படையில் கிருஷ்ணன்கோவில் போலீசார் ரூ.10½ லட்சம் மோசடி செய்ததாக நிசார் சுக்கன், சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- கல்லாவின் அருகில் இருந்த 3 பவுன் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சாத்தூர்
சாத்தூர் அருகே படந்தால் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் புஷ்பம் (வயது42). இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.
வழக்கம் போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது தனது கழுத்தில் அணிந்தி ருந்த 3 பவுன் தங்கச் செயினை கழற்றி கல்லாப் பெட்டி அருகே வைத்திருந்தார்.
அந்த நேரத்தில் வாலிபர் ஒருவர் கடையில் வெற்றிலை பாக்கு கேட்டு வந்தார். அதை எடுக்க உள்ளே சென்று திரும்பிய அவர் கல்லாவின் அருகில் இருந்த 3 பவுன் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
எங்கு தேடியும் கிடைக்கா ததால் இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் நகையை திருடியது திருச்சி மாவட்டம் தொட்டி யம்பா ளையம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரசாந்த் (23) என்பவரை கைது செய்தனர்.
- 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது.
- மாரிமுத்து என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர்.
வார விடுமுறை நாட்களில் சிறுமியை எதிரில் வசிக்கும் வீட்டில் விட்டுவிட்டு அவரது பெற்ேறார் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று அவர்கள் தங்களது மகளை எதிர் வீட்டில் விட்டு சென்றார். அப்போது மாரிமுத்து என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது.
இதுகுறித்து சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரி சாந்தி விசாரணை நடத்தி சிவகாசி அனைத்து மகளிர் ேபாலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
- பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த சாப்டூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதத்தின் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஆனி மாத பவுர்ணமி (3-ந்தேதி), நாளை (1-ந்தேதி) சனி பிரதோசத்தை முன்னிட்டு இன்று முதல் 4-ந்தேதி வரை பக்தர்கள் தசரினம் செய்ய வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
இன்று காலை மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் மலையடிவாரத்தில் திரண்டனர். 7 மணியளவில் பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் மலையேறினர்.
மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். சாமி தரிசனம் செய்ய செல்பவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. 60 வயது மேற்பட்டவர்களுக்கு மலையேற அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்திருந்தனர்.
அனுமதி நாட்களில் மழை அறிகுறிகள் இருந்தால் மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நாளை சனி பிரதோசம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையொட்டி அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் செய்து வருகின்றனர்.
- விருதுநகர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
- இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது31). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று காருசேரிக்கு சவாரி சென்று விட்டு விருதுநகர்-சிவகாசி ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.
மத்தியசேனை பகுதியில் வந்த போது ரோட்டின் குறுக்கே மூதாட்டி ஒருவர் வந்துவிட்டார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்பினார்.அப்போது நடுரோட்டில் கவிழ்ந்து ஆட்டோ விபத்துக் குள்ளானது. டிரைவர் செந்தில்குமார் ஆட்டோவின் அடியில் சிக்கிக் கொண்டார்.
இதில் படுகாயமடைந்த அவரை, அந்த பகுதி வழியாக வந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
- மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
பிரதமர் மோடி மதம் சார்ந்த பிரச்சினைகளையே பேசி வருகிறார். வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
மணிப்பூரில் கடந்த 56 நாட்களாக பற்றி எரிகிறது. அதைப்பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வெறுப்பு அரசியல் நடைபெறும் இடங்களுக்கு ராகுல் காந்தி நேரில் செல்கிறார். ஆனால் பிரதமர் மோடி அதை தவிர்ப்பதையே வாடிக்கை யாக கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 2 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில் ஒரு கோடி குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. பொருளாதார வல்லுனர் களும் தமிழகத்தில் ஒரு கோடி குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்க வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே தமிழக அரசு இது ஒரு சிறந்த திட்டமாக உள்ள நிலையில் ஒரு கோடி பெண்களுக்கு மேல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
அம்மா உணவகம் உறுதியாக தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் தெரிவித்துள்ளார். எனவே அ.தி.மு.க.வினர் அம்மா உணவகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசும் அண்ணாமலைக்கு அக்கறை இருந்திருந்தால் அந்த காலகட்டத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசுக்கு எதிராக போராடியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ண சாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், நகரதலைவர் நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. நேரு யுவகேந்திரா சார்பில் நடத்தப்பட்ட இளைஞர் பாதுகாப்பு விழாவில் கலந்து கொண்டு இளைஞர்களுக்கான போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கினார்.
- போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருச்சுழி
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சுழியில் வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி ஏற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கணேசன் தலைமையில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் பாண்டி சங்கர் ராஜா, பள்ளி தலைமை ஆசிரியை கவிதா மற்றும் ஆசிரியர்கள் கனகராஜ், செல்வராஜ், கதிரேசன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், கிராம உதவியாளர் இளவரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையத்தில் மாயூரநாதர் கோவில் தேரை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
- வருகிற 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற அஞ்சல்நாயகி உடனுறை மாயூரநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி பெருந் திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாள் சிம்மன், காமதேனு, யானை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
விழாவில் நாளை சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வருகிற 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறு கிறது. மாயூரநாதரும், அஞ்சல்நாயகியும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். நூற்றுக் கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
இதை யொட்டி ராஜபாளையம்-மதுரை சாலையில் பெத்தவ நல்லூர் பகுதியில் நிறுத்தப் பட்டுள்ள தேரை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேகவருமான ராமராஜ் மற்றும் சங்கத்தினர் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். சீரமைக்கும் பணியில் தேர் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.
- பணம்-நகைகளை மோசடி செய்து பெண்ணுக்கு கொலை மிரட்டிய தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆலங்குளம் டி.என்.சி. காலனியை சேர்ந்தவர் சுகுணாதேவி(வயது37). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்தநிலை யில் கணவரின் நண்பரான பால்பாண்டி என்பவருடன் பழகத் தொடங்கினார். அவர் தான் ஓட்டல், டிராவல்ஸ் நடத்தி வரு வதாக சுகுணா தேவியிடம் கூறியுள்ளார். மேலும் அவரது குழந்தை களிடம் அன்பாக பழகி யுள்ளார்.
இதைப்பார்த்து அதை நம்பிய சுகுணாதேவி அவருடன் சேர்ந்து வாழ தொடங்கினார். அவரது கணவரின் இறப்புக்காக கிடைத்த ரூ.10 லட்சம் மற்றும் நகைகளை பால்பாண்டி தனது தொழிலுக்காக கேட்டு வாங்கினார்.
மேலும் சுகுணா தேவியின் வீட்டில் உள்ள பொருட்க ளையும் எடுத்துச் செல்ல தொடங்கினார். இதனால் சந்தேகமடைந்த சுகுணாதேவி தனது பணம், நகைகளை திருப்பிக் கொடுக்குமாறு பால்பா ண்டி யிடம் கேட்டு வந்தார். ஆனால் பால்பாண்டி பணம், நகைகளை கொடுக் காமல் தட்டிக்களித்து வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று சுகுணாதேவியின் வீட்டுக்கு பால்பாண்டி மற்றும் அவரது தந்தை முருகன் வந்தனர். அப்போது அவர்கள் சுகுணாதேவியை அவதூறாக பேசி பணம், நகைகளை திருப்பி கேட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகுணாதேவி ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






