search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரமான பால் உற்பத்தியை அதிகப்படுத்த குழுக்கள்
    X

    தரமான பால் உற்பத்தியை அதிகப்படுத்த குழுக்கள்

    • உரிமம் பெறாத நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
    • தரமான பால் உற்பத்தியை அதிகப்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் பால்வளத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    மாவட்ட அளவிலான ஆலோசனை குழு மூலமாக ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும் இடங்களில், உரிமம் பெறாத நிறுவ னங்கள் பால் கொள்முதல் செய்வதை கட்டுப்படுத்தி டவும் மற்றும் உரிமை பெறாத தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை யாளர்களை தடை செய்திட வும், தரமான பால் உற்பத்தி யினை அதிகப்படுத்திடவும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இக்குழுக்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட சில முக்கிய துறைகள் சார்ந்த அலுவலர்களை குழு உறுப்பினர்களாக உள்ளடக்கி மாவட்ட அளவி லான ஆலோசனை குழுக்கள் உருவாக்கி பணி களை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த குழுவின் மூலம் இப்பணி களை மேற்கொள்ளப்படு வதை மாத ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி உறுதி செய்திட வேண்டும்.

    மேலும் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அதிக அளவிலான கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து பாலில் கலப்படம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தனி யார் நிறுவனங்கள் தங்களது பால்கோவா தயாரிப்பில் அரசு தயாரிப்பு என குறிப்பிடுவது தனியா ருக்கு உரிமை இல்லை. ஆவின் நிறுவனம் மட்டுமே அரசு தயாரிப்பு என குறிப்பிட உரிமை உண்டு.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பின்னர் சூலக்கரையில் அமைந்துள்ள பால் குளி ரூட்டும் நிலையம் மற்றும் ரூ.36 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கால்நடை தீவன உற்பத்தி நிலையத்தையும் அமைச்சர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வம், ஆவின் பொது மேலாளர் ஷேக் முகம்மது ரபி, துணை பதிவாளர்(பால்வளம்) நவராஜ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×