என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • 1,731 மாணவ, மாணவிகளுக்கு பாக்கெட் பாக்கெட்டாக பேனாவை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • பச்சை மை பேனாவில் கையெழுத்து போடும் அளவிற்கு சிறந்த அரசு அதிகாரிகளாக திகழ வேண்டும் என்று பேசினார்.

    ராஜபாளையம்

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவரின் பேனா ஆற்றிய பங்கை வலியுறுத்தும் நோக்கில் முகவூர் ஊராட்சி தி.மு.க. கிளை சார்பில் முகவூர் தெற்கு தெரு இந்துநாடார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவி கள், ஆசிரியர்கள் உள்பட 1,731 பேருக்கு பாக்கெட் பாக்கெட்டாக பேனாக் களை எம்.எல்.ஏ தங்கப் பாண்டியன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞரின் வளர்ச்சிக்கும், முத்தமிழ் அறிஞர் என்ற பட்டத்திற்கும் சமூக நீதிக்கும் பெரிதும் உறுதுணையாக இருந்தது அவருடைய பேனா. அத்தகைய பேனாவை வைத்து தான் நமது முதல்-அமைச்சர் முதல் 5 திட்டத்திற்கு கையெழுத்திட்டார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய முதன்மையான மாவட்டம் நமது விருதுநகர் மாவட்டம்.வாள் முனையைவிட வலிமையானது பேனா முனை. அதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி மாணவ-மாணவிகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி பச்சை மை பேனாவில் கையெழுத்து போடும் அளவிற்கு சிறந்த அரசு அதிகாரிகளாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ஆதிநாராயணன், தலைவர் ராமசாமி, தலைமை ஆசிரியர் கண்ணன் ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி, கிளை செயலாளர் தொந்தி யப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பா ளர் சுரேஷ், துணை அமைப்பாளர் மாரிமுத்து, கருப்பசாமி சோலையப்பன் மலைக்கனி ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • இது தொடர்பாக கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வர் சிவகுமார். இவரது மகள் சூர்யபிரியா (வயது22). இவருக்கும், ஆலம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் 20 பவுன் நகை வரதட்சணையாக கேட்டனர். ஆனால் பெண் வீட்டார் முதற்கட்டமாக 12 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் ஆகியவை கொடுக்கப் பட்டது. ஆனால் சக்திவேல் மீதம் 8 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்த பின்புதான் சேர்ந்து வாழ முடியும் என சூர்யபிரியாவிடம் கூறியுள்ளார்.

    நிலம் வாங்க ரூ.2 லட்சத்தை வாங்கி வருமாறு மனைவியை துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்ேறார் ஆசைதம்பி-தங்கலட்சுமி, சகோதரி அருள்தேவி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதுகுறித்து சூர்யபிரியா விருதுநகர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் சக்திவேல் மற்றும் அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கணவரை பிரிந்த மனைவி ஆனந்தி அருப்புக்கோட்டையில் காமராஜர் பகுதியில் தனியாக ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
    • தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர் பிச்சை (வயது 47). இவர் தனது மனைவி ஆனந்தி (38) மற்றும் மகன் ஷியாம் என்ற சந்தோசராஜாவுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே பிச்சைக்கும், அவரது மனைவி ஆனந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு உருவானது.

    இதையடுத்து தம்பதியினர் இருவரும் கடந்த 1 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனந்தியின் மகன் ஷ்யாம் அவரது தந்தை பிச்சையுடன் திருச்சுழியில் வசித்து வருகிறார். கணவரை பிரிந்த மனைவி ஆனந்தி அருப்புக்கோட்டையில் காமராஜர் பகுதியில் தனியாக ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    மகன் ஷியாம் மட்டும் அவ்வப்போது அருப்புக்கோட்டைக்கு சென்று தாயை பார்த்து வருவார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ஆனந்திக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து ஒரு கட்டத்தில் தாயின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு அவரை கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஷியாம் மற்றும் அவரது நண்பரான துரைப்பாண்டி (18) இருவரும் அருப்புக்கோட்டையில் உள்ள காமராஜர் நகரில் வசித்து வரும் ஆனந்தியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது மீண்டும் அவரது நடத்தை தொடர்பாக ஷியாம் கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த ஷியாம் மற்றும் துரைப்பாண்டி இருவரும் சேர்ந்த அரிவாள் மற்றும் கம்பால் ஆனந்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆனந்தி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஆனந்தியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த அருப்புக்கோட்டை போலீசார் ஷியாம் மற்றும் துரைப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீஸ்காரர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்துள்ளனர்.
    • கூடாண்டி, சரவணன், தர்மலிங்கம், வேல்முருகன், ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள பரளச்சி போலீஸ் சரகத்திற்குபட்ட தொப்பலாக்கரை கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பி னருக்கும் இடையே பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இருதரப்பினர் ஒப்புதலின்படி கோவிலை சுற்றி முள்வேலி அமைக்க கூடாது என முடிவு செய்யப்பட்டது.

    சம்பவத்தன்று தொப்ப லாக்கரை கிராமத்தில் உள்ள கோவிலில் பரளச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் கோவிலை சுற்றி முள்வேலி அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் டிராக்டரரை வைத்து போலீஸ் காரர்களை மோத முயன்றதாகவும், மேலும் பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்த தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீஸ்கா ரர் பாண்டித்துரை கொடுத்த புகாரின் பேரில்அந்த கிரா மத்தை சேர்ந்த கூடாண்டி, சரவணன், தர்மலிங்கம், வேல்முருகன், ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • திருமணமான 3 மாதத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் அச்சங்குளத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது27). இவரும் அதே ஊரை சேர்ந்த குணசுந்தரி என்பவரும் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் 2 பேரும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன் பட்டியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    குணசுந்தரி அதே பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் இரவு அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே குணசுந்தரி வீட்டின் மாடி அறைக்கு சென்றுவிட்டார். அப்போது குடும்ப பி ரச்சினையால் விரக்தியில் இருந்த அருண்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த குணசுந்தரி கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    வத்திராயிருப்பு அருகே உள்ள கோபாலபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் சஞ்சீவி(வயது65). இவருக்கு கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பு இருந்தது. இதில் விரக்தி யடைந்த சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வத்திரா யிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நரிக்குடி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி, முத்துராமலிங்க புரம், பரளச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நரிக்குடி, முத்துராமலிங்க புரம், பரளச்சி, பொம்மக் கோட்டை, கே.கரிசல்குளம், எம்.ரெட்டியபட்டி, மண்டப சாலை, செட்டிக்குளம், தும்மு சின்னம்பட்டி, பூலாங்கால், இருஞ்சிறை, கட்டனூர், உலக்குடி, நாலூர், வீரசோழன், சேதுபுரம், நல்லுக்குறிச்சி, கல்லுமடம், கத்தாளம்பட்டி, ஆலடிப்பட்டி, வடக்கு நத்தம், இராஜகோபாலபுரம், மேலையூர்,ஆண்டியேந்தல், கல்லூரணி, தொப்ப லாக்கரை, நல்லாங்குளம், குள்ளம்பட்டி, சவ்வாசுபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை மின்வா ரிய செயற்பொறி யாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.

    • ஈஸ்வரனுக்கும், அவரது தம்பியான கணேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • குடும்பத்தகராறில் அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுத்தறிவு வாசக சாலை தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 45).

    இவர் கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி சந்தனமாரி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    இவரது தாயார் அருள் மணி ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் தனது இளைய மகன் கணேசன் (40) என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். விடுமுறை தினங்களில் ஈஸ்வரன் தனது தாயாரை பார்ப்பதற்காக தளவாய்புரத்தில் இருந்து வந்து செல்வார்.

    இதற்கிடையே ஈஸ்வரனுக்கும், அவரது தம்பியான கணேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பலமுறை அவரது தாய் மற்றும் உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் விரோதம் தீர்ந்தபாடில்லை.

    இந்நிலையில் நேற்று ராஜபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மயூரநாத சுவாமி கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஈஸ்வரன் தனது மனைவி சந்தனமாரி மற்றும் குழந்தைகளுடன் ராஜபாளையம் வந்திருந்தார்.

    தேரோட்டத்திற்கு சென்றுவிட்டு இரவில் ஈஸ்வரன் தனது தாய் வீட்டிற்கும், அவரது மனைவி சந்தனமாரி ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியில் உள்ள சகோதரி கருப்பாயியின் வீட்டிற்கும் சென்று இருந்தனர். அப்போது தாயை பார்க்க சென்ற ஈஸ்வரனுக்கும், அவரது தம்பிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், தனது அண்ணன் என்றும் பாராமல் ஈஸ்வரனை தொரட்டி என்று அழைக்கப்படும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் முதுகில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் கணேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஈஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஈஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கணவர் உடலை பார்த்து அவரது மனைவி சந்தனமாரி கதறி அழுதார்.

    பின்னர் இதுகுறித்து அவர் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கணேசனை தீவிரமாக தேடி வருகிறார். குடும்பத்தகராறில் அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவிலுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து தனிநபர் வேலி அமைத்துள்ளார்.
    • திருச்சுழி வட்டாட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொது மக்கள் அறிவித்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இடையப்பட்டி கிராமத்தில் ஒரு சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட வைரவர் மற்றும் கருப்பணசாமி கோவில் உள்ளது.

    இங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட தலைக்கட்டு குடிமக்கள் இருந்து வரும் நிலையில் இடையப்பட்டி, புல்வாய்க்கரை, நேர்த்தியா யிருப்பு பகுதி யிலுள்ள குடிமக்கள் மட்டுமல்லாது பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆண்டு தோறும் வைரவர் கோவில் வைகாசிக்களரி திருவிழா விற்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆவியூர் குரண்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ஆறுமுகம் என்பவர் கோவிலுக்கு செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கோவிலுக்கு செல்ல முடியாத பொதுமக்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி வந்து கடும் சிரமத்திற்கிடையே வைரவர் கோவிலில் வழிபாடு நடத்தி வருவதாக குடிப்பொதுமக்கள் வேதனை தெரிவித்துள் ளனர்.

    மேலும் தற்போது கம்பி வேலி அமைத்திருக்கும் பகுதிக்குள் நீர்வரத்து கால்வாய்,ஊரணி மற்றும் கலுங்கு அமைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இவ்வாறு கம்பிவேலி அமைத்ததோடு அப்பகுதியில் தோட்டம் அமைக்க வேண்டி இடையூறாக இருந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட பனை மரங்களையும் வேரோடு வெட்டி சாய்த்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு பகுதியில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வரும் ஆறுமுகம் அங்கு கன்றுகள் நட்டு பெரிய தோட்டம் அமைப்பதற்கான பணி களை விரைவாக மேற்கொண்டு வருவதாக வும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தனிநபர் ஒருவர் கோவில் செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கொண்டு வழி விடாமல் மறுத்து வருவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகாரளித்தனர். இதனையடுத்து திருச்சுழி தாசில்தார், கிராம வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பலரும் ஆறுமுகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் ஆறுமுகம் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.ஆகவே வருவாய்த்துறை அதிகாரிகள் கோவில் பொதுப்பாதையை வழிமறித்து போடப்பட்டுள்ள கம்பி வேலியை உடனடியாக அகற்றுவதுடன் தடையின்றி கோவிலுக்கு சென்று வரும் வகையில் நிரந்தர பாதையை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இடையப்பட்டி பொது மக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் தங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் திருச்சுழி வட்டாட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொது மக்கள் அறிவித்துள்ளனர்.

    • நெடுஞ்சாலை துறையின் வளர்்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
    • சுற்றுச்சுவர் கட்டுவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர் கோட்டம் திருச்சுழி உட்கோட்டம் ஆலடிப்பட்டி- அம்மன்பட்டி சாலையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் சாலையை அகலப்படுத்தும் பணிகளையும், பரட்டநத்தம் அருகே ரூ.1 கோடி மதிப்பீட்டில் சிறு பாலம் நிறைவு பெற்ற பணிகளையும், இலுப்பையூர் சாலையில் ரூ.75 லட்சம் மதிப்பில் 5 சிறு பாலங்கள் நிறைவுற்ற பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வுகள் செய்தார்.

    அதன் பின்னர் நரிக்குடி அருகே மேலேந்தல் கிராமத்தில் சுமார் ரூ.12 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் ஜெயசீலன் கல்லூரி கட்டும் பணிகளை விரைவாகவும் தரமானதாகவும் பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதனைத்தொடர்ந்து நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தினை, பார்வையிட்டு ஆய்வு செய்து, மருந்துகளின் இருப்பு நிலை,மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், பயன்பெற்று வரும் பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.அப்போது மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து சுற்றுச்சுவர் கட்டுவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

    இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி,உதவி கோட்டப் பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் சுந்தரபாண்டி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • இதற்கான உத்தரவை சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார் பிறப்பித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    சின்னவாடியில் பணிபுரிந்த சின்ன மூப்பன் பட்டிக்கும், பெரிய பேராளி ராம்கார்த்திக்ராஜா முத்துராமன்பட்டிக்கும், கோட்டையூர் சிவகுமார் அல்லம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அப்பையநாயக்கன் பட்டி கிராம நிர்வாக அதிகாரி சமயன் ரோசல்பட்டிக்கும், சிவஞானபுரம் பாண்டிய ராஜன் விருதுநகருக்கும், புளியங்குளம் அருணகிரி கோட்டைபட்டிக்கும், ஏ.புதுப்பட்டி விவேக் கூரைக்குண்டுவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கூரைக்குண்டுவில் பணியாற்றிய கருப்பசாமி ஏ.புதுப்பட்டிக்கும், கோட்டையூர் உமா கணேசன் பெரியபேராளிக்கும், விருதுநகர் ராஜூ அப்பையநாயக்கன் பட்டிக்கும், ரோசல்பட்டி சந்திரசேகர் கோட்டையூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    அல்லம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சுதா ராணி புளியங்குளத்திற்கும், முத்துராமன்பட்டி ராஜ லட்சுமி சின்னவாடிக்கும், சின்ன மூப்பன்பட்டி செல்வி சிவஞான புரத்துக்கும் என 14 கிராம நிர்வாக அதிகாரிகள் விருதுநகர் தாலுகா அளவில் இட மாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.

    இதற்கான உத்தரவை சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார் பிறப்பித்துள்ளார்.

    • ராஜபாளையம் அருகே முதியவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் வில்சன் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயகுமார்(வயது60). இவர் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் ஏசுராணி. இவரது கணவர் யோகராஜன் என்ற கிருஷ்ணராஜ். இவர் மதுவுக்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த ஏசுராணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்தார். இந்த நிலையில் சேத்தூர் பகுதியில் ஜெயகுமார் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த யோகராஜன் ஜெயகுமாரை அவதூறாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெயகுமாரின் தலையில் வெட்டினார். இதில் படுகா யமடைந்த ஜெயகுமார் சிகிச்சைக்காக ராஜபா ளையம் அரசு மருத்து வனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை மறைவான யோகராஜனை ேபாலீசார் தேடி வருகின்றனர்.

    • தேவகோட்டை பகுதியில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த அரசு ஊழியர்கள் புகார் கொடுக்க அச்சம் அடைந்துள்ளனர்.
    • பணம் செலுத்தியவர்கள் புலம்புகின்றனர்.

    தேவகோட்டை

    விருதுநகரை தலைமை இடமாக கொண்டு செயல் பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் நியோ மேக்ஸ் இந்நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் 3 இயக்குநர்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் அனை வரும் முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இவர்க ளது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப் பட்டது.

    மேலும் இவர்கள் 68 போலி நிறுவனங்கள் நடத்தி பணம் வசூலித்து உள்ள தாகவும், இதுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதுவரை சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக தெரிகிறது.

    தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரம் முகவர்களை கொண்டு பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் இந்நிறுவனத்தில் பெரும்பா லும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணம் முதலீடு செய்துள்ளனர்.

    இந்தப் பகுதியில் உள்ள முகவர்கள் தங்கள் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விற்று பணமாக பதுக்கி வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.இந்த நிலையில் அந்த நிதி நிறுவனம் இது சம்பந்தமாக யாரும் புகார் அளிக்க கூடாது. மீறி புகார் அளித்தால் நீங்கள் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காது என மிரட்டி வருவதாக நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் புலம்புகின்றனர். முகவர்களை காவலில் எடுத்து விசாரித்து யார் யார் பெயரில் சொத்துக்கள் உள்ளது எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளது. பினாமிகள் உறவுக்கா ரர்கள் யார் என்பதை கண்டறிந்து அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற னர்.

    தேவகோட்டை பகுதி களில் பல நிதி நிறுவ னங்கள் இது போன்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி அதிக வட்டி தருவதாக செயல் பட்டு வருகிறது. அவர்க ளையும் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணத்தை காப்பாற்ற முடியும்.

    ×