கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்
Published on

விருதுநகர்

விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வர் சிவகுமார். இவரது மகள் சூர்யபிரியா (வயது22). இவருக்கும், ஆலம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் 20 பவுன் நகை வரதட்சணையாக கேட்டனர். ஆனால் பெண் வீட்டார் முதற்கட்டமாக 12 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் ஆகியவை கொடுக்கப் பட்டது. ஆனால் சக்திவேல் மீதம் 8 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்த பின்புதான் சேர்ந்து வாழ முடியும் என சூர்யபிரியாவிடம் கூறியுள்ளார்.

நிலம் வாங்க ரூ.2 லட்சத்தை வாங்கி வருமாறு மனைவியை துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்ேறார் ஆசைதம்பி-தங்கலட்சுமி, சகோதரி அருள்தேவி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதுகுறித்து சூர்யபிரியா விருதுநகர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் சக்திவேல் மற்றும் அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com