search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டுவண்டி பந்தயம்
    X

    மாட்டுவண்டி பந்தயம்

    • மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    திருச்சுழி அருகே உள்ள கள்ளக்காரி கிராமத்தில் மொட்டை இருளப்பசுவாமி கோவில் 3-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

    பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி களுக்கான போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன. இந்த மாட்டு வண்டி பந்தயமானது கள்ளக்காரி கிராமத்தில் தொடங்கி திம்மநாதபுரம் வரை சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு நடை பெற்றது.

    போட்டி காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணிவரை நடந்தது. இதில் 7 ஜோடி பெரிய மாட்டு வண்டிகளும், 29 சிறிய மாட்டுவண்டிகளும் கலந்து கொண்டன. இதில் மதுரை, விருதுநகர் ராமநாதபுரம், தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும் அதன் சாரதிகளும் பங்கேற்றன.

    ரேக்ளா பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. பெரிய மாட்டுவண்டி பந்தய போட்டியில் வெற்றி பெற்றதற்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரம் ரொக்கமும் அதனுடன் ஒரு பெரிய வெள்ளாடும் பரிசாக வழங்கப்பட்டது. சிறிய மாட்டுவண்டி பந்தய போட்டியில் வெற்றி பெற்றதற்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகள் மற்றும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×