புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்

விருதுநகரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றினார்.
புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றினார்.
புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றினார்.
Published on

விருதுநகர்

விருதுநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாக ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விருதுநகரில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

மாணிக்கம்தாகூர் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி புதிய கட்டிடத்தை பார்வை யிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவ லர்கள் சிரமமின்றி பணி புரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறை களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் ரூ.309.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறந்து வைக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் தண்டபாணி, செயற்பொறியாளர் இந்துமதி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com