விருதுநகர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

விருதுநகர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
Published on

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது31). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று காருசேரிக்கு சவாரி சென்று விட்டு விருதுநகர்-சிவகாசி ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.

மத்தியசேனை பகுதியில் வந்த போது ரோட்டின் குறுக்கே மூதாட்டி ஒருவர் வந்துவிட்டார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்பினார்.அப்போது நடுரோட்டில் கவிழ்ந்து ஆட்டோ விபத்துக் குள்ளானது. டிரைவர் செந்தில்குமார் ஆட்டோவின் அடியில் சிக்கிக் கொண்டார்.

இதில் படுகாயமடைந்த அவரை, அந்த பகுதி வழியாக வந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com