search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "constituencies"

    • வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் படுத்தப்பட்டு வருகிறது.
    • கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது 3 எம்.பி. தொகுதிகளிலும் 59 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    இந்த 3 தொகுதிகளிலும் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    இவர்கள் வாக்கு அளிப்பதற்காக 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை எந்தெந்த பள்ளிகளில் மற்றும் சமூக நலக்கூடங்களில் அமைப்பது என்பது பற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    அதுபோல இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 5 தேர்தல் பணியாளர்கள் பணியாற்றுவார்கள். அவர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் அமைக்கப்படும் 4 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகளையும் சென்னை மாநகர போலீசார் 3 பிரிவுகளாக பிரித்து ஆய்வு செய்து வருகிறார்கள். சுமூகமாக வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிகள், பதட்டமான வாக்குச் சாவடிகள், மிக பதட்டமான வாக்குச்சாவடிகள் என்று 3 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் போலீசார் நடத்திய ஆய்வில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டன. 157 வாக்குச் சாவடிகள் மிக மிக பதட்டமானவை என்று கண்டு பிடிக்கப்பட்டன. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது சென்னை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 550 ஆக உயர்ந்தது. என்றாலும் மிக பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை சற்று குறைந்து இருந்தது.

    இது தொடர்பாக தற்போது சென்னை மாநகர போலீசார் தீவிர கணக்கெடுப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 3 தொகுதிகளிலும் எந்தெந்த வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பதட்டமான, மிக பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை என்பது தெரியவரும்.

    அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு அடுக்கு பாதுகாப்பு செய்ய சென்னை மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது 3 எம்.பி. தொகுதிகளிலும் 59 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன. சட்டசபை தேர்தலின் போது வாக்குப்பதிவு எண்ணிக்கை சற்று அதிகரித்து இருந்தது.

    இந்த தடவை வாக்கு பதிவை 70 சதவீதமாக அதிகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    • பா.ஜனதா நிர்வாகிகளிடம் மாநில பொறுப்பாளர் அறிவுறுத்தல்
    • அக்கார்டு ஓட்டலில் புதுவை மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து புதுவை மாநில பா.ஜனதா வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அக்கார்டு ஓட்டலில் புதுவை மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மாநில தலைவர் செல்வகணபதி எம்பி, முன்னாள் தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், அசோக்பாபு, கல்யாணசுந்தரம், சிவசங்கரன், வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், அருள்முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைத்து தொகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பழைய நிர்வாகி களுடன், நியமிக்கப்படும் புதிய நிர்வாகிகள் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.

    • வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டிளித்தார்.
    • பீகாரில் 16 எதிர்க்கட்சிகள் இணைந்து ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மாணிக்கம் தாகூர் எம்.பி. வந்தார். அவருக்கு ராஜ பாளையம் காங்கிரஸ் கட்சி அலுவலகமான, நேரு பவனத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கசாமி, நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் கணேஷ், பொதுச் செய லாளர் சக்தி மோகன்,

    ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், எச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் கண்ணன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    த.மா.கா.வில் இருந்து விலகிய டைகர் சம்சுதீன் மாணிக்கம் தாகூர் முன்னி லையில் காங்கிரசில் இணைந்தார். பின்னர் நிருபர்களிடம் மாணிக்க தாகூர், எம்.பி. கூறிய தாவது:-

    2014-ம் ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66-ஆக இருந்தது. பிரதமர் மோடி அதே விலைக்கு தற்போது பெட்ரோலை கொடுப்பாரா? கொரோனா காலத்தில் கூட பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது கொடுமையானது. மத்திய அரசு எரிவாயு உருளை விலையையும் குறைக்க முன்வர வேண்டும்.

    மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக வெறுப்பு அரசியலை பா.ஜ.க. பரப்பி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தற்போது 60 நாட்கள் மட்டுமே ேவலை கிடைக்கிறது. முழுமையாக 100 நாட்கள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாயத்திற்கு பாதிப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டாகும். வருடத்திற்கு 365 நாட்களில் 60 நாட்கள் மட்டுமே 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதி 300 நாட்கள் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தலாம்.

    பீகாரில் 16 எதிர்க்கட்சிகள் இணைந்து ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அடுத்த கூட்டம் சிம்லாவில் கூடி அடுத்த கட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். பிரதமர் வேட்பாளர் யார் என்பது அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று கூடி முறைப்படி அறிவிப்பார் கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை யிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. #LokSabhaElection2019 #Tamilnadu #Puducherry #Polling
    சென்னை:

    தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

    வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.

    இந்த பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.



    தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் 18 பேரும், அங்குள்ள ஒரு சட்டசபை தொகுதியில் 8 பேரும் மல்லுக்கு நிற்கின்றனர்.

    கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் அல்லாத வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.  மதிய உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும்.

    இதற்காக தமிழகம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை பாராளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது அந்த தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் ‘விவிபாட்’ கருவியும் இணைக்கப்பட்டு இருக்கும். தான் அளித்த வாக்கு உரிய வேட்பாளருக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா? என்பதை வாக்காளர் அந்த கருவியில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

    ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர்கள் கையில் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால், வாக்காளர்கள் வீட்டிலேயே செல்போனை வைத்துவிட்டு செல்வது நல்லது.

    மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தாலும், அதற்கு முன்பாக வாக்குப்பதிவு மையத்துக்குள் வாக்காளர்கள் வந்துவிட்டால், அவர்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப்படுவார்கள். கடைசி நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு முதல் 2 மணி நேர இடைவெளியில் பதிவான வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்படும்.

    ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டு ‘சீல்’ செய்யப்படும். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி, தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அன்றுடன் முடிவடைகிறது.

    மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து இருக்கிறது. மாநில போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    63,951 போலீசார், 27,400 துணை ராணுவ படை வீரர்கள், 13,882 ஊர்க்காவல் படையினர், 14 ஆயிரம் தேசிய மாணவர் படையினர், 20 ஆயிரம் ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் ராணுவத்தினர் என மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 233 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடி என்று கண்டறியப்பட்ட 8,293 ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் நிறுத்தப்படுகிறார்கள்.

    இவர்கள் தவிர மாநிலம் முழுவதும் 1,500 வாகனங்களில் அதிவிரைவு படையினர் ரோந்து சுற்றி வருவார்கள்.

    மேலும், கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுவதுடன் வீடியோ பதிவும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சுமார் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். #LokSabhaElection2019 #Tamilnadu #Puducherry #Polling
    பாகிஸ்தானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 35 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. #Pakistan #Election
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

    அந்த நாட்டில் தற்போது பிரதமராகி உள்ள இம்ரான்கான்கூட அந்த தேர்தலில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளிலும் வென்றார். இப்படி வெற்றி பெற்றவர்கள் ஒரு தொகுதியை வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்துள்ளனர்.



    அந்த வகையில் அங்கு மொத்தம் 35 தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. அவற்றில் 11 தொகுதிகள் நாடாளுமன்ற தொகுதிகள் ஆகும். எஞ்சியவை மாகாண சட்டசபை தொகுதிகள் ஆகும்.

    11 நாடாளுமன்ற தொகுதிகளில் 9 தொகுதிகள் பஞ்சாப் மாகாணத்திலும், சிந்து மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களில் தலா ஒரு தொகுதியும் உள்ளன.

    இடைத்தேர்தல் நடக்கிற 35 தொகுதிகளில் 641 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இறுதியாக தற்போது 372 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இந்த தொகுதிகளில் மொத்தம் 50 லட்சத்துக்கும் மேலான வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 23 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள், 27 லட்சம் பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.

    பாகிஸ்தானில் நடந்த பொதுத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து ஆட்சியைப் பிடித்த நிலையில், சந்திக்கிற முதல் இடைத்தேர்தல் இதுவாகும்.

    எனவே இந்த தொகுதிகளில் வெற்றி பெறுவதில் அந்தக் கட்சி கண்ணும், கருத்துமாக உள்ளது. அதே நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது கட்சிக்கு வெற்றிக்கனியை பறித்துத்தர வேண்டிய நிலையில் உள்ளார். எனவே ஆளும் கட்சிக்கும் சரி, எதிர்க்கட்சிக்கும் சரி, இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

    இன்றைய இடைத்தேர்தலுக்காக பாகிஸ்தானில் 5 ஆயிரத்து 193 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “மிகுந்த பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அவற்றில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பினை கவனிப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.

    தேர்தல் அதிகாரிகளுக்கு முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.  #Pakistan #Election 
    2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #ParliamentElection #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2005-ம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு தினமாக” கடைப்பிடித்து வருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வோரு ஆண்டும் செய்து வருகிறார்கள்.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

    மேலும் கடந்த காலங்களில் முதியோர் இல்லங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் 32 லட்சம் ரூபாய், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனை நிலங்கள் இலவசமாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச திருமண மண்டபமும், பெண் சிசுக் கொலையை தடுத்திட “பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற திட்டத்தின் மூலம் சுமார் 500 பெண் குழந்தைகளுக்கு அவர்களின் திருமண வயதில் தலா இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும் வகையில் 50 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகவும், லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் 60 இடங்களில், 600 கணினிகள் கொண்ட கேப்டன் இலவச கணினி பயிற்சி மையமும், ஏழைத் தாய்மார்கள் சுயதொழில் செய்வதற்காக 65 லட்சம் ரூபாய் மதிப்பில் 1300 தையல் எந்திரங்கள்.

    ஏழை சகோதரிகளின் திருமணத்திற்கு உதவிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், காது கேட்கும் கருவி களும், சலவைத் தொழி லாளர்களுக்கு சலவை பெட்டிகளும், மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணங்களும், பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகளும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கி வருகிறோம்.

    இந்த உதவிகளை பெற்று படித்து, பட்டம் பெற்று பல்வேறு உயர்பதவிகளில் பலரும் இருக்கிறார்கள்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளில் சுமார் 100 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பயன்படும் வகையில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சக்கரம் பொருத்திய மோட்டார் சைக்கிள் வாகனங்களை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவுடன், தமிழகம் முழுவதும் வறுமை நிலையில் உள்ள சுமார் ஆயிரம் (1000) நலிவுற்ற குடும்பங்களை தேர்வு செய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் (10,000) வீதம் சுமார் ஒரு கோடி ரூபாய், செம்மரக்கட்டை வெட்டியதாக ஆந்திரா வன பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லபட்டனர்.

    அவர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை “மக்களுக்காக மக்கள் பணி” என்ற திட்டத்தின் மூலம் ஏற்கனவே 2012-ம் ஆண்டில் செய்ததைப்போல தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நல உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி உள்ளோம்.

    கடந்த வருடம் 234 தொகுதிகளிலும் 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள,2,50,000 மரக்கன்றுகள் பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் நடப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் நலிவுற்ற ஏழை எளிய 100 குடும்பங்களுக்கு தலா 18,000 ரூபாய் காப்பீட்டு திட்டத்தில் வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து வழங்கம் போல் இந்த ஆண்டும் கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அம்மாநில மக்களுக்கு தே.மு.தி.க.வின் அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பாக நிவாரண பொருட்கள் (1 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள்) வழங்கப்படும்.

    மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் மதிய உணவு மற்றும் நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கியதைப்போல் இந்த ஆண்டும் வழங்கப்படும்.



    வழக்கம் போல் இந்த ஆண்டும் தே.மு.தி.க.வின் அமைப்பு ரீதியான 64 மாவட்டங்களிலும் இது போன்று பல நல உதவிகளை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்பு தினத்தில் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அரசியல் என்பது பொதுநலமாக இருக்க வேண்டுமே தவிர, எல்லா துறைகளிலும் தலையீடு இருக்கக்கூடாது. லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் அரசியல் பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம்.

    ஆனால் ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளை தக்க வைத்து கொள்வதில் குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்லை. இவற்றையெல்லாம் எதிர்காலத்தில் தீர்க்க வேண்டிய முயற்சியில் தே.மு.தி.க. தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். ஒரு நல்ல எதிர்காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அமைய நான் உறுதிபூண்டுள்ளேன்.

    என்னைப் போல் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் எனது பிறந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம். தமிழக மக்கள் மனதில் நாம் நீங்கா இடம் பிடித்துள்ளோம்.

    அதற்காக தமிழக மக்களுக்கும், தாய்மார்களுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் தமிழக மக்கள் தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கு உதவிகள் செய்திட அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம்.

    நான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது எனக்காக உடல் நலம் வேண்டி சாதி, மதம் பார்க்காமல் ஆலயங்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் பிரார்த்தனை செய்த “என் உயிரிலும் மேலான எனது அன்பு தொண்டர்களுக்கும், தமிழ் நெஞ்சங்களுக்கும்” மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.  #ParliamentElection #Vijayakanth

    ×