என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து பெண் பலி
- பாம்பு கடித்து பெண் பலியானார்.
- மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகே உள்ள ஆர். ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் என்பவரது மனைவி அன்னலட்சுமி (வயது44). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இயற்கை உபாதை கழிக்க ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்ற போது அங்கு பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.இதனை அடுத்து அங்கிருந்து வீட்டிற்கு வந்த அன்னலட்சுமி உறவி னர்களிடம் தகவல் தெரிவித்தார்.
உடனே அவர்கள் அன்னலட்சுமியை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அன்ன லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story






