என் மலர்
வேலூர்
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி வினோதினி (வயது 22). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது வினோதினி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வினோதினிக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சல் சரியாகாததால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் வினோதினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வினோதினி பன்றி காய்ச்சலால் இறந்ததாக தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து வீராங்குப்பம் கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
ஆம்பூர் அடுத்த கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிசாமி (45), கூலி தொழிலாளி. இவர் கடந்த 3 நாட்களாக காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். காய்ச்சலுக்காக ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி முனிசாமி பரிதாபமாக இறந்தார்.
இந்தநிலையில் வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த கிராமத்தில் முகாமிட்டு கண்காணித்தனர்.
மேலும் அங்கு டெங்கு கொசு ஒழிப்பு பணி, தூய்மை பணியும் மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு பரிசோதனையும் செய்யப்பட்டது. ரியாஸ் அங்குள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றது துணை இயக்குனருக்கு தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அந்த கிளினிக்குக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அதில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த நபர், டாக்டருக்கு முறையாக படிக்காதது தெரியவந்தது. அவருக்கு எச்சரிக்கை விடுத்த துணை இயக்குனர் கிளினிக்கை மூட உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கிளினிக் மூடப்பட்டது.
இதுகுறித்து துணை இயக்குனர் சுரேஷ் கூறுகையில்:- வேலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் பலர் உள்ளதாக புகார்கள் வந்துள்ளது. போலி டாக்டர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #tamilnews
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவரது மகன் சரவணன் (12). இச்சிறுவன், அதே பகுதியில் உள்ள இருளர் காலனியில் வசிக்கும் மேளம் அடிக்கும் தொழிலாளியான குட்டி (45) என்பவருடைய வீட்டின் அருகே நேற்று விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது, மேளம் அடிக்க கூடிய குச்சியை சிறுவன் எடுத்து விளையாடியபோது உடைந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த குட்டி, சிறுவனை சரமாரியாக அடித்து உதைத்தார். சிறுவனின் தந்தை ரவி, தாய் வன்னியம்மாள் (40) மற்றும் மருமகள் சோனியா (23), உறவினரான பாலன் என்கிற பால்ராஜ் (30) ஆகியோர் குட்டியிடம் தட்டிக்கேட்டனர்.
இவர்களையும், குட்டியின் தரப்பினர் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இதில் சிறுவனின் பெற்றோர், உறவினர் பால்ராஜ் உள்பட 4 பேரும்பலத்த காயமடைந்தனர். அப்பகுதி மக்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவனின் பெற்றோர் உள்பட 3 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுதொடர்பாக, அரக்கோணம் தாலுகா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து மேளம் அடிக்கும் தொழிலாளி குட்டி மற்றும் அவருடைய உறவினர்கள் கோவிந்தராஜ் (25), அய்யப்பன் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட பால்ராஜ், கட்டிட வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1½ வயதில் பெண் குழந்தை உள்ளனர். சிறு விஷயத்திற்காக ஒருவரின் உயிரை பறித்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம்:
குடியாத்தத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் எல்லா நிலைகளிலும் தகுதி பெற்ற தலைவர்களாக உயர்ந்து வருகிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது.
இடைத்தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார மையங்களில் பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்படுகிற நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறேன். இதுவரை 21 மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எந்த இடத்திலும் அதிகாரிகள் டெங்கு மரணங்கள் நிகழ்ந்ததாக கூறவில்லை. முன்பு இருந்ததைவிட தற்போது அதிக அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இன்னும் அதிகம் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
தேர்தல் நெருங்கி வரும் போது கூட்டணி குறித்து பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்வார்கள். நிச்சயமாக பா.ஜ.க. வலுவான கூட்டணியை அமைக்கும். அந்த கூட்டணி தமிழகத்தில் அதிகப்படியான இடங்களை கைப்பற்றும். பா.ஜ.க. தலைமையில் கூட்டணியா அல்லது மற்ற கட்சிகள் தலைமையில் கூட்டணியா என்பது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் முடிவு செய்யப்படும்.
பிரதமர் மோடி எந்த ஒரு நாட்டிற்கு சென்று வந்தாலும், அந்த நாட்டினால் இந்தியாவிற்கு பலன் கொடுக்கும் அளவில் உள்ளது. முன்பெல்லாம் கடன் வாங்க வெளிநாட்டிற்கு சென்றோம். இன்று வியாபாரங்களை பெருக்கவும், தொழில்களை தொடங்கவும் நாம் தயாராக உள்ளோம். இது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. உள்பட எந்த கட்சியாக இருந்தாலும் பா.ஜ.க. பெயரை சொல்லாமல் அரசியல் நடத்த முடியாது. தமிழக அரசின் செயல்பாடு முன்பைவிட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போதுதான் வளர்ச்சியின் உச்சத்தை தமிழகம் எட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #BJP
திருப்பத்தூர் டவுன் குட்ட ப்பனூர் தெருவை சேர்ந்தவர் சரவணன். பாத்திரக்கடை தொழிலாளி. இவருடைய மனைவி ஆர்த்தி. இவர்களது மகள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படிக்கிறாள்.
நேற்று மதியம் குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதற்காக வீட்டின் கதவை பூட்டாமல் ஆர்த்தி பள்ளிக்கு உணவு எடுத்து சென்றார்.
வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 7 பவுன் நகை திருடு போயிருந் தது. இதுகுறித்து, திருப்பத்தூர் டவுன் போலீசில் ஆர்த்தி புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக வேலூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் சாத்துமதுரை என்ற பகுதியில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
அப்போது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில், இரண்டரை டன் செம்மரக் கட்டைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் வேலூர் தாலுக்கா போலீசார் உதவியுடன் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக கடத்திச் செல்லப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. #RedSandalwoodCaptured #Andhra
தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி நடக்கிறது. விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க பட்டாசு விற்பனையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டது.
மேலும் பட்டாசுக்கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் செயல் விளக்க ஒத்திகையை பட்டாசுக்கடை உரிமையாளர்களுக்குச் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பதை தடுக்கவும், அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காத பட்டாசுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்ட வருவாய் அலுவலர், உதவி கலெக்டர்கள் உள்பட பல்வேறு அதிகாரிகள் பட்டாசுக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்பவர்களை கைது செய்யும்படி போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தீபாவளியையொட்டி உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த பட்டாசுக்கடைகளில் விவரங்கள் பெறப்பட்டு, அவை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி அந்தந்தப்பகுதிக்கு உட்பட்ட அனைத்துப்பட்டாசுக்கடைகளிலும் போலீசார் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வின்போது பட்டாசு விற்பனையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட உரிமத்தை போலீசாரிடம் காண்பிக்க வேண்டும். அல்லது உரிமம் தெரியும்படி கடையின் முன்பாக தொங்க விட வேண்டும். உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்தால் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு போலீசார் கூறினர். #tamilnews
வேலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றச்செயல்களை தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். திருட்டு, கொலை, வழிப்பறி, ஆள் கடத்தல், சாராயம், மதுவிற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைக்கின்றனர்.
இவ்வாறாக ஜெயிலில் அடைக்கப்படும் நபர்கள் ஜாமீனில் அல்லது தண்டனை காலம் முடிந்து வெளியே வந்து, திருந்தி வாழாமல் தொடர்ந்து அதே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், கடந்த 10 மாதத்தில் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். சாராயம், மது விற்பனை செய்த 28 பேரும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும், திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 37 பேரும் என மொத்தம் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர், எனப் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 4 நாட்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்.
இதில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 3 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளிகளில் சத்துணவு சமைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.சமையல் உதவியாளர்கள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், மகளிர் குழுக்கள் மூலம் சத்துணவு சமைக்கப்பட்டது. போராட்டத்தால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்பட வில்லை என சத்துணவு திட்ட அதிகாரிகள் கூறினர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் பாதிப்பு இல்லாதவாறு அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுத்துள்ளனர். #Nutritionstaff
குடியாத்தம்:
குடியாத்தம் பீமாபுரத்தில் மேல்ஆலத்தூர் ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ராமமூர்த்தி (வயது43), விவசாயி. இவருக்கு கல்பனா என்ற மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில் ராமமூர்த்தி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பிறகும், காய்ச்சல் தீவிரமடைந்ததால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளித்தும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை.
இதையடுத்து, சென்னை பெரும்பாக்கம் சேரன் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, ராமமூர்த்தியின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், பன்றிக்காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலியான சம்பவம், குடியாத்தம் பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. பீமாபுரத்தில் நகராட்சி நிர்வாகம் தீவிர சுகாதார பணிகளை செய்து வருகிறது.
மேலும், மருத்துவ குழு முகாமிட்டு கிராம மக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் பலருக்கு காய்ச்சல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் எதுபோன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Swineflu
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் மன்னாரு என்பவருக்கு சொந்தமான வெல்டிங்கடை உள்ளது. தொழிற்சாலை மற்றும் மாடிவீடுகளுக்கு இரும்பு மற்றும் ஸ்டீல் உலோகங்களில் அலங்கார டிசைன்கள் செய்து கொடுப்பது வழக்கம்.
இன்று காலை கடையின் ஷெட்டர் திறந்து கிடப்பதாக உரிமையாளர் மன்னாருக்கு தகவல் கிடைத்தது. அவர் வந்து பார்த்த போது கடையில் இருந்த வெல்டிங், கட்டிங், டிரில்லிங் மிஷின்களின் நீண்ட கேபிள்கள் மற்றும் வெல்டிங் கட்டர் உள்ளிட்ட பல பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
கடையின் வெளிப்புறத்தில் உள்ள தகர ஷீட்டை ஒரு ஆள் துழையும் அளவுக்கு துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி இதே கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள கேபிள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய நபர்கள் இது வரை போலீசாரிடம் சிக்க வில்லை.
இதற்கிடையே நேற்று இரவு இதே கடையில் மீண்டும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூர்:
வேலூர் ஆர்.என்.பாளையம் 4-வது தெருவை சேர்ந்தவர் நிசாம். இவருக்கு 5 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நிசாமின் 2-வது மகள் பவுசியா (வயது 9). இவர், 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை வீட்டில் இருந்த பவுசியா, புடவையில் தொங்கவிடப்பட்டிருந்த தூளியில் உட்கார்ந்து விளையாடினார். அப்போது புடவை கழுற்றில் சுற்றி இறுகியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
மூச்சு பேச்சின்றி கிடந்த மகளை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மகளை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள் பவுசியா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






