என் மலர்
நீங்கள் தேடியது "Tiruppattur robbery"
திருப்பத்தூரில் தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் குட்ட ப்பனூர் தெருவை சேர்ந்தவர் சரவணன். பாத்திரக்கடை தொழிலாளி. இவருடைய மனைவி ஆர்த்தி. இவர்களது மகள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படிக்கிறாள்.
நேற்று மதியம் குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதற்காக வீட்டின் கதவை பூட்டாமல் ஆர்த்தி பள்ளிக்கு உணவு எடுத்து சென்றார்.
வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 7 பவுன் நகை திருடு போயிருந் தது. இதுகுறித்து, திருப்பத்தூர் டவுன் போலீசில் ஆர்த்தி புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தென்றல் நகரை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 45). திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றார். இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
நேற்று மாலை வீடு திரும்பிய விசுவநாதன் வீட்டில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டார்.
இதுபற்றி தகவலறிந்த திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விடுமுறை நாட்களில் பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியூர் செல்லும் பொதுமக்கள் விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைக்க வேண்டாம் என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.