என் மலர்
நீங்கள் தேடியது "Welding shop robbery"
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் மன்னாரு என்பவருக்கு சொந்தமான வெல்டிங்கடை உள்ளது. தொழிற்சாலை மற்றும் மாடிவீடுகளுக்கு இரும்பு மற்றும் ஸ்டீல் உலோகங்களில் அலங்கார டிசைன்கள் செய்து கொடுப்பது வழக்கம்.
இன்று காலை கடையின் ஷெட்டர் திறந்து கிடப்பதாக உரிமையாளர் மன்னாருக்கு தகவல் கிடைத்தது. அவர் வந்து பார்த்த போது கடையில் இருந்த வெல்டிங், கட்டிங், டிரில்லிங் மிஷின்களின் நீண்ட கேபிள்கள் மற்றும் வெல்டிங் கட்டர் உள்ளிட்ட பல பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
கடையின் வெளிப்புறத்தில் உள்ள தகர ஷீட்டை ஒரு ஆள் துழையும் அளவுக்கு துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி இதே கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள கேபிள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய நபர்கள் இது வரை போலீசாரிடம் சிக்க வில்லை.
இதற்கிடையே நேற்று இரவு இதே கடையில் மீண்டும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






