என் மலர்tooltip icon

    வேலூர்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் கவர்னர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார். #RajivGandhiAssassinationcase #BanwarilalPurohit
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 28 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் தெரிவித்துள்ளது.

    இதுபற்றி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-

    பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து அரசு 3 முறை அறிவித்த பிறகும் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.



    28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அறிவு (பேரறிவாளன்) பற்றிய உண்மைகள் வெளிவந்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திருத்தி எழுதிவிட்டேன். அதை அப்படியே எழுதியிருந்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பார் என பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    அரசு இனிமேலும் காலம் தாழ்த்தக்கூடாது. உன் மகனை உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பேன் என முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்னிடம் தெரிவித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விடுதலை செய்ய வேண்டும். கவர்னர் உடனடியாக கையெழுத்திட்டு 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முறையாவது நல்லது நடக்க வேண்டும் என கண் கலங்கினார். அற்புதம்மாள் #RajivGandhiAssassinationcase #BanwarilalPurohit


    வேலூரில் பட்டப்பகலில் நிதி நிறுவன அதிபரை கடத்திய மர்மகும்பலை சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 24). கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று அலுவலகத்துக்கு சென்று தனது வழக்கமான பணிகளை கவனத்து கொண்டிருந்தார். மதியம் 2 மணியளவில் இரண்டு பைக்குளில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்தனர்.

    அவர்களில் 2 பேர் வெளியில் நின்றனர். மற்றவர்கள் உள்ளே அமர்ந்திருந்த நந்தகுமாரை கழுத்தை பிடித்து வெளியே இழுத்து வந்தனர். அவர் வர மறுத்து வாக்குவாத்தில் ஈடுபட்டார். இருப்பினும் விடாமல் நந்தகுமாரை இழுத்துச் சென்ற கும்பல், அவரை பைக்கில் தூக்கி அமரவைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் கடத்தி சென்றனர்.

    இதில் நந்தகுமார் அமர்ந்திருந்த பைக்கில் அவருடன் 2 பேரும், இவர்களை பின் தொடர்ந்தவாறு மற்றொரு பைக்கில் உடன் வந்த 3 பேரும் சென்றனர்.

    நந்தகுமார் கடத்தி செல்லப்பட்ட சிறிது நேரத்தில் அவரது மனைவிக்கு கடத்தல்காரர்கள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அப்போது அவரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

    உடனடியாக இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அலுவலகத்தில் இருந்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் 2 பைக்குகளில் வருவதும் நிதி நிறுவன அதிபரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது பைக்கில் ஏற்றி கடத்திச்செல்வதும் பதிவாகி உள்ளது.

    இதைவைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு நிதிநிறுவன அதிபரையும், கடத்தல் கும்பலையும் தேடி வந்தனர்.

    கடத்தல் கும்பலின் செல்போன் எண்களை வைத்து சைபர் கிரைம் குழுவினர் கண்காணிக்க தொடங்கினர். அதில் பள்ளிகொண்டா, குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியில் கடத்தல் கும்பல் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. அங்குள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனாலும் கடத்தல் கும்பல் சிக்கவில்லை. இதனையடுத்து கும்பலை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவுசெய்தனர்.

    நந்தகுமார் மனைவியை கடத்தல் கும்பலிடம் போனில் பேச செய்தனர். அவர் பேசிய போது கும்பல் ரூ. 3 லட்சம் கொடுத்தால் நந்தகுமாரை விடுவிப்பதாக தெரிவித்தனர். பணத்தை வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் உள்ள ஓட்டல் அருகே கொண்டுவருமாறு கூறினர்.

    அங்கு தனிப்படை போலீசார் தயார் நிலையில் இருந்தனர். சிறிது நேரம் கழித்து போனில் தொடர்பு கொண்ட கும்பல் பணத்தை வள்ளலாருக்கு கொண்டுவருமாறு தெரிவித்தனர். பின்னர் ரத்தினகிரி சந்திப்புக்கு வருமாறு தெரிவித்தனர்.

    கடத்தல் கும்பல் போலீசாரிடம் சிக்காமல் அலைக்கழித்தனர்.

    இதனையடுத்து ஆற்காடு, மேல்விஷாரம் நகர பகுதிக்குள் போலீசார் சென்றனர். மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, வேப்பூர் சந்திப்பு அருகே காரில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே கடத்தல் கும்பல் நந்தகுமாருடன் நின்று கொண்டிருந்தனர்.

    இருட்டில் நின்றதால் அவர்கள் யார் என்பது தெரியவில்லை. இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி அவரது டிரைவர் இருவரும் காரை நிறுத்திவிட்டு அவர்கள் அருகே நடந்து சென்றனர்.

    போலீசார் வருவதை கண்ட கும்பல் நந்தகுமாரை விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

    அவரை மீட்ட போலீசார் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் கும்பல் குறித்து விசாரித்தனர்.

    நந்தகுமார் அணிந்திருந்த தங்க செயின், பாக்கெட்டில் இருந்த பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் யார் என்பது சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    ஜோலார்பேட்டை மற்றும் கீழ்பென்னாத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி சின்ன மண்டலவாடியில் 170 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த 6 வாரமாக குடிநீர் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். குடிநீர் வசதி வேண்டி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவலறிந்த பி.டி.ஓ. கனகராஜ் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    தற்காலிகமாக டிராக்டர் மூலம் குடிநீர் வழங்குவதாக கூறினர். ஆனால் பொதுமக்கள் அதை ஏற்காமல் நிரந்தரமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    10 நாளில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ஐங்குணம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 மாதகாலமாக குடிநீர் வினியோகிக்க படவில்லை.

    இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று சோமசபாடி- அவலூர்பேட்டை செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது எங்கள் பகுதியில் உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் ஆவேசமாக கூறினர்.

    சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குடியாத்தம் அருகே மைசூர் ரெயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    பெங்களூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (35). இவரது சகோதரி நிர்மலா (42). ஆந்திராவில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு பெங்களூருக்கு திரும்பினார். திருப்பதி-மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் சென்றார்.

    குடியாத்தம் அருகே அதிகாலை சென்ற ரெயில் சிக்னலுக்காக நின்றது. அப்போது ரெயிலில் ஏறிய 4 பேர் கும்பல் நிர்மலா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மலா கத்தி கூச்சலிட்டார். கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து நிர்மலா பெங்களூர் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். ரெயில்வே போலீசார் குடியாத்தம் பகுதியில் நகை கொள்ளை போனதால் வழக்கை ஜோலார்பேட்டை போலீசாரிடம் மாற்றம் செய்தனர்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    காட்பாடி- அரக்கோணம், காட்பாடி- சேலம், காட்பாடி- ஜோலார்பேட்டை வழியாக வரும் ரெயில்களில் 1 சப்-இன்ஸ்பெக்டருடன் 5 பேர் கொண்ட 3 போலீஸ் குழுவினர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் கொள்ளை சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவது ரெயில் பயணிகளிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் கொசப்பேட்டை பெயிண்டர் கொலையில் நண்பர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் கோவில் தெருவை சேர்ந்தவர் ரசூல் (வயது 25), பெயிண்டர். இவர் கடந்த 3-ந் தேதி இரவு 10 மணியளவில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் ரசூலை சரமாரியாக வெட்டினர்.

    இதில் படுகாயம் அடைந்த ரசூலை, அப்பகுதி மக்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரசூல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படையினர் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சித்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வேலூரை சேர்ந்த ரசூலின் நண்பர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே சிக்னலுக்காக நின்றுக்கொண்டிருந்த மைசூர் ரெயிலில் பெண்ணிடம் இருந்து செயின் பறித்த மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    பெங்களூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (35). இவரது சகோதரி நிர்மலா (42). ஆந்திராவில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு பெங்களூருக்கு திரும்பினார். திருப்பதி-மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் சென்றார்.

    குடியாத்தம் அருகே அதிகாலை சென்ற ரெயில் சிக்னலுக்காக நின்றது. அப்போது ரெயிலில் ஏறிய 4 பேர் கும்பல் நிர்மலா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மலா கத்தி கூச்சலிட்டார். கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து நிர்மலா பெங்களூர் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். ரெயில்வே போலீசார் குடியாத்தம் பகுதியில் நகை கொள்ளை போனதால் வழக்கை ஜோலார்பேட்டை போலீசாரிடம் மாற்றம் செய்தனர்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    காட்பாடி- அரக்கோணம், காட்பாடி- சேலம், காட்பாடி- ஜோலார்பேட்டை வழியாக வரும் ரெயில்களில் 1 சப்-இன்ஸ்பெக்டருடன் 5 பேர் கொண்ட 3 போலீஸ் குழுவினர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் கொள்ளை சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவது ரெயில் பயணிகளிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பத்தூரில் நிலத்தகராறு பிரச்சனையில் வக்கீலை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் ராஜவேலு (வயது 30). இவரது தம்பி கதிர் வேலு (27) இருவரும் வக்கீல்கள்.

    கிருஷ்ணனின் தம்பி முருகன் இவரது மகன் ராஜகோபால். இரு குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சனை உள்ளது. இது சம்பந்தமான வழக்கு திருப்பத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் ராஜவேலு வழக்கு சம்பந்தமாக சம்மனை சித்தப்பா முருகனுக்கு அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் தனது மகன் ராஜகோபால் உள்பட 10-க்கும் மேற்பட்ட உறவினர்களை அழைத்து கொண்டு ராஜவேலு வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது இரு தரப்பினருக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் மற்றும் அவரது உறவினர்கள் ராஜவேலு, மற்றும் கதிர்வேலுவை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    படுகாயமடைந்தவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது சம்பந்தமாக ராஜவேலு கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
    ஆம்பூர் அருகே வெங்கிலி பகுதியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    வேலூர்:

    ஆம்பூர் அருகே வெங்கிலி பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரு குழந்தை, 4 ஆண்கள், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    காரின் முன்பக்க டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
    நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களை பயங்கரவாதிகள் போன்று சோதனை நடத்துவதா? என முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #mutharasan #Neetexam

    வேலூர்:

    வேலூர் சாய்நாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணையும் விழா மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு தலைமையில் நடந்தது.

    இதில், சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும், தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும். அ.தி.மு.க. தோல்வி பயத்தால்தான் 3 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய உள்ளனர். சபாநாயகர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

    தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது. மக்களை சந்திக்க அ.தி.மு.க.வினருக்கு பயம். அதனால்தான் அவர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போடுகிறார்கள். கூடுதல் கால அவகாசம் கேட்கிறார்கள். உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் வீட்டு வரி, குடிநீர் வரி போன்றவற்றை அதிகாரிகள் பல மடங்கு உயர்த்தி விட்டனர்.


     

    தமிழகத்தில் 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்தும், இதுவரையில் அரசு அந்த மாவட்டங்களில் எவ்வித வறட்சி நிவாரண பணிகளையும் மேற்கொள்ளவில்லை. குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. மக்கள் தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு குடிநீர் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வன்னியர் சமுதாய மக்கள் குறித்து நான் தவறாக எதுவும் பேசவில்லை. பொன்பரப்பியாக இருந்தாலும் சரி, குச்சிபாளையமாக இருந்தாலும் சரி, தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் 10 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை அனுப்பியும் இதுவரை தலைமை தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    வேலூர் பாராளுமன்ற தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். வேலூரில் மட்டும் பண நடமாட்டம் என்று கூறுவது நகைப்பிற்குரியது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பண நடமாட்டம் காணப்பட்டது. தமிழகத்தில் நடந்த ‘நீட்’ தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. பயங்கரவாதிகளை விட அதிகளவு மாணவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பின்னடைவு. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #Neetexam

    ஆம்பூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு சிறுவன் உள்பட 3 பேர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜோலார்பேட்டை:

    ஆம்பூர் அருகே உள்ள கருப்பூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது அண்ணன் அனுமுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக சங்கர் அவரது சகோதரி பானுமதி (54). இவரது பேரன் நித்திஷ் (5) ஆகிய 3 பேரும் இன்று காலை சென்னை செல்வதற்காக ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

    அப்போது மங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. ரெயில் வருவதை கவனிக்காமல் 3 பேரும் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது வேகமாக வந்த ரெயில் அவர்கள் மீது மோதியது. 3 பேரும் ரெயிலுக்குள் சிக்கினர்.

    உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். இதனால் அப்பகுதி ரத்த வெள்ளமாக காட்சியளித்தது. இதனை கண்ட சக பயணிகள் அலறியடித்து ஓடினர்.

    இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை உள்பட 3 பேர் உடல் சிதறி இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வாலாஜா அருகே வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள கடப்பந்தாங்கல் காலனி நைனார் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 32). இவருக்கும் முசிறி ரோடு வெற்றிலைகார தெருவை சேர்ந்த பத்மநாபன் (40), மற்றும் தென் கடப்பந்தாங்கலை சேர்ந்த சதீஸ்க்கும் தகராறின் காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே கடந்த மாதம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது பத்மநாபன் மற்றும் சதீஷ், சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயத்துடன் இருந்த சிவக்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சிவக்குமாரின் மனைவி அம்மு வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் எனது கணவருக்கு பத்மநாபன் மற்றும் சதீஷ் அகிய 2 பேர் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    பயத்தில் இருந்த எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பத்மநாபன் மற்றும் சதீஷை தற்கொலைக்கு துண்டியதாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் தோட்டபாளையத்தில் வாலிபரை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் தோட்டப் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (26) ஏ.சி மெக்கானிக். இவரை நேற்று காலை கும்பல் ஒன்று கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    படுகாயமடைந்த சுகுமார் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவி மகன் ராம்குமார் (19). அமல்ராஜ் மகன் டேவிட் என்கிற ஜில்லு (19) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    சுகுமாருக்கும், ராம்குமார், டேவிட் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சுகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலருடன் சேர்த்து ராம்குமார், டேவிட் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளார்.

    அதனை அறிந்த இருவரும் அவர்களிடம் சிக்காமல் தப்பி ஓடினர்.

    சுகுமார் மீண்டும் தங்கள் இருவரையும் தாக்குவதற்க்கு முன்பு அவரை கொல்ல திட்டம் தீட்டி நேற்று இருவரும் கத்தியால் வெட்டி கொல்ல முயன்றதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (18) உடந்தையாக இருந்துள்ளார். அவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

    ×