என் மலர்
திருநெல்வேலி
- சந்திரலேகாவிற்கும், முத்துசெல்விக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
- இந்நிலையில் நேற்று பூலம் தொடக்கப்பள்ளியில் நடந்த பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள பூலம், மேலத்தெருவை சேர்ந்தவர் ஊய்க்காட்டான் மனைவி சந்திரலேகா (வயது37). இவர் நாங்குநேரி மேற்கு ஒன்றிய பா.ஜனதா துணை தலைவியாகவும், திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருந்தாளுனராகவும் உள்ளார். அதே ஊரை சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி முத்து செல்வி (50). இவர் பூலம் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.
தாக்குதல்
சந்திரலேகாவிற்கும், முத்துசெல்விக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பூலம் தொடக்கப் பள்ளியில் நடந்த பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து முத்து செல்வியும், அவரது கணவர் முத்துராஜும் (55) சேர்ந்து, சந்திரலேகாவை தாக்கிய தாகவும், இதுபோல சந்திர லேகா, முத்துராஜை தாக்கிய தாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இருவரும் தனித்தனியாக மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தனர். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் இது தொடர்பாக சந்திரலேகா, முத்துசெல்வி, அவரது கணவர் முத்துராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சந்திர லேகாவை தாக்கிய பஞ்சாயத்து தலைவி முத்து செல்வி மற்றும் அவரது கணவர் முத்துராஜை கைது செய்ய கோரி, நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் பா.ஜ.க.வினர் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
- பெனடிக்ட் அந்தோணி ராஜ் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார்.
- பாளை பர்கிட் மாநகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
நெல்லை:
பாளை செயின்ட்பால்ஸ் ரோட்டை சேர்ந்தவர் பெனடிக்ட் அந்தோணி ராஜ்(வயது 47). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். மேலும் ஓட்டலும் நடத்தி வந்தார்.
கடந்த 7-ந்தேதி இவர் தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். பாளை பர்கிட் மாநகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் பெனடிக்ட் அந்தோணிராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று கார்த்திக் நாங்குநேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த சிவசுப்பு கார்த்திக்கிடம் தகராறில் ஈடுபட்டார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் கார்த்திக் (வயது 31). இவர் நாங்குநேரியில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடை வைத்துள்ளார். மறுகால்குறிச்சி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சிவா என்ற சிவசுப்பு (23). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை குறித்து கார்த்திக் தான் போலீசுக்கு தகவல் கொடுத்ததாக சிவசுப்பு கருதினார். நேற்று கார்த்திக் நாங்குநேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவசுப்பு நீ தானே நான் கஞ்சா விற்றது குறித்து போலீசுக்கு தகவல் சொன்னது என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
மேலும் அவர் கத்தியால் கார்த்திக்கை குத்த முயற்சி செய்தார். கார்த்திக் விலகி ஓடி உயிர் தப்பினார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவசுப்புவை கைது செய்தனர்.
- ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொதுமக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வள்ளியூர்:
ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொது மக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தரப்பி னர் முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலை யில் பேசி சுமூகமான தீர்வு ஏற்படுத்தும் விதமாக லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
இதனை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில் லோக் அதலாத் வாயிலாக வழக்குகளுக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டால் முழு கோர்ட்டு கட்டணத்தை திரும்ப பெறுவதுடன், பிரச்சினைகளை விரைவாக கையாண்டு, கட்டணம் இல்லாமல் தீர்வுகளை பெற முடியும். சமரச மையத்தில் நடக்கும் அனைத்து பேச்சு வார்த்தைகள் எந்த வகையிலும் பதிவு செய்யப்படுவதில்லை. மேலும் பேச்சு வார்த்தைகள் ஒருவருக்கு எதிராக சாட்சி யங்களாக பயன்படுத்து வதில்லை. எளிய முறையில் துரிதமாகவும், பணம் விரயமின்றியும் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு தீர்வுகளை பெறுவதற்கு சமரசம் உதவுகிறது. இதனால் சமரசத்தில் இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலைப்பாடு ஏற்படும்.
மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது என்பதால் இதற்கு மேல் முறையீடு கிடை யாது என்பது போன்ற விழிப்புணர்வு மேற் கொள்ளப்பட்டது.
- அனைத்து அமைப்புகளுக்கான ஜனநாயக உரிமையை பறிக்ககூடாது என்பதுதான் எங்களது நோக்கம்.
- தமிழக கவர்னர் பல்வேறு விசயங்களில் விஞ்ஞானத்திற்கு புறம்பான விஷயங்களை பேசி வருகிறார்.
நெல்லை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் பேரணிக்கு அனுமதி கேட்டு போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. கோர்ட்டு விதித்த கட்டுப்பாட்டை ஏற்க ஆர்.எஸ்.எஸ். மறுத்தது.
அனைத்து கட்சிகளும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்தது. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான அனுமதி கவலை அளிக்கிறது. அனைத்து அமைப்புகளுக்கான ஜனநாயக உரிமையை பறிக்ககூடாது என்பதுதான் எங்களது நோக்கம். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதி வருந்தத்தக்க விசயம்.
தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு கவர்னர் முதலிலேயே அனுமதி அளித்து இருந்தால் தமிழகத்தில் 40 உயிர்கள் பலியாகி இருக்காது.
தமிழக கவர்னர் பல்வேறு விசயங்களில் விஞ்ஞானத்திற்கு புறம்பான விஷயங்களை பேசி வருகிறார்.
உலகின் அனைத்து நாடுகளும் மத அடிப்படையில் ஆட்சி நடத்துவதாக உண்மைக்கு மாறான பேச்சை பேசி வருகிறார். அரசியல் சட்டத்தின் விதிகளை மீறி கவர்னர் செயல்படுகிறார்.
தமிழக அரசுக்கு இடையூறு செய்யும் விதமாக போட்டி அரசியல்வாதி போல் அவர் செயல்படுகிறார்.
அம்பையில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் வேதனை அளிக்கிறது. சாதாரண குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மனித உரிமை மீறல் சம்பவத்தை நடத்தி இருக்கிறார். அவருக்கு ஆதரவாக போலீசாரும் செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது சட்ட விரோத நடவடிக்கை.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றால் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்படும்.
டாஸ்மாக் கடைகளை எடுத்து நடத்தும் அரசு கனிமவள வியாபாரத்தையும் நடத்த வேண்டும். கனிமவள கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்.
மக்கள் நல பணியாளர்கள் பணியை ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது ரத்து செய்தார்கள். ஒரு அரசு ஒரு திட்டத்தை வகுக்கும்போது, மற்றொரு ஆட்சி அமையும்போது அதில் குறைபாடுகள் இருந்தால் சரி செய்ய வேண்டுமே தவிர ரத்து செய்யக்கூடாது.
தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், பாளை தாலுகா செயலாளர் முத்து சுப்பிரமணியன், மாவட்ட குழு நிர்வாகிகள் குழந்தை வேலு, நாராயணன், முருகன், பழனி, மாநில குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், கற்பகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- ஆத்திரமடைந்த நான் கடப்பாறையால் முத்துமாரியை தாக்கினேன்.
- தங்கராஜை ரெயில் நிலையம், பஸ்நிலையம், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தேடினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே உள்ள இட்டேரியை கேபிரியல்நகரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது30). ராணுவ வீரர். இவரது மனைவி முத்துமாரி (26).
கடந்த 7-ந்தேதி முத்துமாரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த தமிழரசனின் தந்தை தங்கராஜூக்கும், முத்து மாரிக்கும் இடையே நிலம் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், கடப்பாறையால் முத்துமாரியை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி 8-ந்தேதி உயிரிழந்தார். தங்கராஜூவை கைது செய்யும் வரை முத்து மாரியின் உடலை வாங்க மாட்டோம் என கூறி கடந்த 2 நாட்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் தங்கராஜை தேடி வந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் வாக்குமூலத்தில் கூறியதாவது:-
தமிழரசன் எனது பெயருக்கு பணம் அனுப்பி இட்டேரியில் 12 சென்ட் நிலத்தை முத்துமாரி பெயருக்கு வாங்க கூறினார். ஆனால் அந்த நிலத்தை எனது பெயருக்கு வாங்கினேன். பின்னர் விடுமுறையில் ஊருக்கு வந்த எனது மகனிடம் இது குறித்து முத்துமாரி புகார் கூறினார். இதனால் எனது மகனுக்கும், எனக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த முத்துமாரியிடம், நிலம் வாங்கியது தொடர்பாக ஏன் எனது மகனிடம் தூண்டிவிடுகிறாய் என கேட்டேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் கடப்பாறையால் முத்துமாரியை தாக்கினேன். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருமகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தங்கராஜை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் எப்படி கைது சிக்கினார் என்ற விபரம் தெரியவந்துள்ளது. கடந்த 7-ந்தேதி முத்துமாரியை தாக்கியதும் அவர் பலத்த காயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தங்கராஜ், தனது மருமகள் முத்துமாரியின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார்.
இதற்கிடையே அரசு மருத்துவமனையில் முத்துமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து அவரை தேடி வந்தனர். தங்கராஜை ரெயில் நிலையம், பஸ்நிலையம், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தேடினர்.
இந்நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில், கொலை செய்யப்பட்ட முத்துமாரியின் இருசக்கர வாகனம் நின்றது. இதைத்தொடர்ந்து அந்த தியேட்டருக்குள் சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தங்கராஜ் படம் பார்த்து கொண்டிருந்தார். உடனடியாக அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
- பல் பிடுங்கிய விவகாரத்தை விசாரணை நடத்த தமிழக அரசு அமுதா ஐ.ஏ.எஸ்.-ஐ நியமனம் செய்துள்ளது
- போலீசார் எங்களை மிரட்டி பணம் வசூல் செய்கின்றனர் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பல் பிடுங்கிய விவகாரம்
இதில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். தமிழ்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
அம்பை பல் பிடுங்கிய விவகாரத்தில் சேரன்மகா தேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அமுதா ஐ.ஏ.எஸ்.
இதற்கிடையே இதுதொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு அமுதா ஐ.ஏ.எஸ்.-ஐ நியமனம் செய்துள்ளது. இதனை வரவேற்கிறோம். ஆனால் இந்த விசாரணை அம்பையில் நடைபெற்று வருகிறது. அதனை மாற்றி நெல்லையில் அலுவலகம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு இருப்பதாக உணர்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களில் 3 பேரை மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், மேலப்பாளையம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகிறோம். நாங்கள் புதிய பஸ் நிலையம் பகுதியில் பயணிகளிடம் தானமாக பணம் வசூலித்து வாழ்வா தாரம் நடத்தி வருகிறோம். ஆனால் போலீசார் எங்களை மிரட்டி பணம் வசூல் செய்கின்றனர் என கூறியிருந்தனர்.
- நெல்லை மாவட்ட காங்கிரஸ் சார்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
- நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
நெல்லை:
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போரட்டம் நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்ட காங் கிரஸ் சார்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரில்வான் தலைமை தாங்கினார். நெல்லை சட்ட மன்ற தொகுதி பொதுச் செயலாளர் வில்லியம், ஒருங்கிணைப்பாளர் வடிவேல் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற தொகுதி துணைத்தலைவர் ராஜகுரு வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் கலந்து கொண்டு, பிரதமர் மோடிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செய லாளர் யோபு, நிர்வாகிகள் மரியகுழந்தை, ராம்குமார், வேணுகோபால், பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
- கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் விஸ்வரூபம் ஆனதையடுத்து புகார் கூறப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப் பட்டார்.
புதிய எஸ்.பி. நியமனம்
தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த சிலம்பரசன் நெல்லை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார்.
அவர் இன்று காலை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். உளவுத்துறையின் அறிக்கை யின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.
பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கஞ்சா விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரமும் என்னை 9498101775 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சபரி கிரிநாத் வரவேற்று பேசினார்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் பரிசுகளை வழங்கினார்.
முக்கூடல்:
முக்கூடலில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, பள்ளி மேலாண்மை குழு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சபரி கிரிநாத் வரவேற்று பேசினார். மேலாண்மை குழு தலைவர் புவனேஸ்வரி தலை மை தாங்கினார். முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் முன்னி லை வகித்தார். தன்னார்வலர் ராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார்.
விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் பரிசுகளை வழங் கினார். பேரூராட்சித்துணை தலைவர் லட்சுமணன், பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் ஜோசப் கிரிகோரி, பொதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுடலைமணி, இடைகால் சாரதா பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி காந்தி, நடுக்கல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், முக்கூடல் சொக்கலால் சத்திரிய வித்யாசாலா பள்ளி ஆசிரியர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
- ஜமாத் தலைவர் அபுல்ஹசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
- இப்தார் நிகழ்ச்சியில் முஸ்லிம் ஜமாத்தினர், சர்வ சமயத்தினர் கலந்துகொண்டனர்.
சேரன்மகாதேவி:
சேரன்மகாதேவியில் குத்பா முகைதீன் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஜமாத் தலைவர் அபுல்ஹசன் தலைமை தாங்கினார். செயலர் ஷேக் செய்யது அலி முன்னிலை வகித்தார். இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர் முகம்மது இஸ்ஹாக் ஹுசைன் தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் கலந்து கொண்டார். இமாம் மீரான்கனி,பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ், சேகரகுரு கிப்சன் ஜான்தாஸ், , அரிமா சங்கத்தினர் முருகேசன், அமல்ராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், முஸ்லிம் ஜமாத்தினர், சர்வ சமயத்தினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை தக்வா பள்ளிவாசல் இமாம் குலாம் முகைதீன் ஜமாலி தொகுத்து வழங்கினார். ஜமாத் துணைச் செயலர் செய்யது அப்பாஸ் வரவேற்றார். இளைஞர் நற்பணி மன்றச் செயலர் இம்தியாஸ் நன்றி கூறினார்.
- ராதாபுரம் வட்டார குத்தகை விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே மதகநேரியில் திருவாடு துறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு உரிய குத்தகை மற்றும் அடவோலை வழங்க வலியுறுத்தி ராதாபுரம் வட்டார குத்தகை விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் தனபால் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருவாடு துறை ஆதீன இடப் பிரச்சினை சம்பந்தமாக ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் 90 நாட்களுக்கு பிறகும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும்,விரைவில் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும், திருவாடுதுறை இட பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட மடாதிபதிகளை நேரில் சந்தித்து மனு அளிப்பது என்றும், மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பது என்றும், 20 நாட்களுக்குள் பிரச்சி னைக்கு தீர்வு காணப்படா விட்டால் பாளையங் கோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணைய ஆணையர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மதகனேரி, செம்பிகுளம், கடம்பன்குளம் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






