என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை படத்தில் காணலாம்.
ராகுல்காந்தி பதவி பறிப்பை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
- நெல்லை மாவட்ட காங்கிரஸ் சார்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
- நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
நெல்லை:
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போரட்டம் நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்ட காங் கிரஸ் சார்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரில்வான் தலைமை தாங்கினார். நெல்லை சட்ட மன்ற தொகுதி பொதுச் செயலாளர் வில்லியம், ஒருங்கிணைப்பாளர் வடிவேல் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற தொகுதி துணைத்தலைவர் ராஜகுரு வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் கலந்து கொண்டு, பிரதமர் மோடிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செய லாளர் யோபு, நிர்வாகிகள் மரியகுழந்தை, ராம்குமார், வேணுகோபால், பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






