என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amudha IAS"

    • 20.59 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்
    • ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 37,416 பள்ளிகளில் 20.59 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்

    * 2.57 லட்சம் குழந்தைகள் இந்த ஆண்டு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.

    * 14.60 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * 500க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    * இந்த திட்டங்களால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது"

    * கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

    * நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் 25ம் தேதி இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

    * தமிழ்நாடு அரசு நடத்தும் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற நிகழ்வில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி .சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    என்று தெரிவித்தார். 

    • கைதிகளின் பற்களைப் பிடுங்கி போலீசார் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    சென்னை :

    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளின் பற்களைப் பிடுங்கி போலீசார் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சம்பந்தப்பட்ட போலீசார் சிலர் வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வழக்கு ஒன்றில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி, அம்பாசமுத்திரம் கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவரான சப் கலெக்டர் விசாரணை மேற்கொள்ள கடந்த மார்ச் 26-ந்தேதியன்று நெல்லை மாவட்ட கலெக்டரால் உத்தரவிடப்பட்டது.

    இந்த விவகாரத்தில் பல்வீர்சிங் மார்ச் 29-ந்தேதியன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ராஜ்குமார், வி.கே.புரம் காவல்நிலைய காவலர் போகபூமன், அம்பாசமுத்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், கல்லிடைக்குறிச்சி வட்டக் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி,

    வி.கே.புரம் வட்டக் காவல் ஆய்வாளர் பெருமாள், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன், அம்பாசமுத்திரம் காவல் நிலைய தலைமைக் காவலர் சந்தானகுமார், அம்பாசமுத்திரம் காவல் நிலைய முதல்நிலை காவலர் மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த புகார்கள் தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டரின் 26-ந் தேதியிட்ட உத்தரவிற்கிணங்க, சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவரான சப் கலெக்டர் விசாரணை மேற்கொண்டு, தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை நெல்லை மாவட்ட கலெக்டருக்கு 3-ந் தேதி சமர்ப்பித்துள்ளார்.

    சேரன்மகாதேவி சப்-கலெக்டரின் முதற்கட்ட விசாரணை அறிக்கை மற்றும் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக வந்த புகார்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த சம்பவம் தொடர்பாக ஒரு உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று 4-ந் தேதியிட்ட கடிதத்தின் மூலம் அரசிற்கு நெல்லை கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

    நெல்லை கலெக்டரின் பரிந்துரையை ஏற்று, அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில், தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீதும் மற்ற காவல் துறையினர் மீதும் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான விசாரணை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச்செயலாளர் அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பல் பிடுங்கிய விவகாரத்தை விசாரணை நடத்த தமிழக அரசு அமுதா ஐ.ஏ.எஸ்.-ஐ நியமனம் செய்துள்ளது
    • போலீசார் எங்களை மிரட்டி பணம் வசூல் செய்கின்றனர் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    பல் பிடுங்கிய விவகாரம்

    இதில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். தமிழ்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    அம்பை பல் பிடுங்கிய விவகாரத்தில் சேரன்மகா தேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அமுதா ஐ.ஏ.எஸ்.

    இதற்கிடையே இதுதொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு அமுதா ஐ.ஏ.எஸ்.-ஐ நியமனம் செய்துள்ளது. இதனை வரவேற்கிறோம். ஆனால் இந்த விசாரணை அம்பையில் நடைபெற்று வருகிறது. அதனை மாற்றி நெல்லையில் அலுவலகம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு இருப்பதாக உணர்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

    மேலப்பாளையத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களில் 3 பேரை மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், மேலப்பாளையம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகிறோம். நாங்கள் புதிய பஸ் நிலையம் பகுதியில் பயணிகளிடம் தானமாக பணம் வசூலித்து வாழ்வா தாரம் நடத்தி வருகிறோம். ஆனால் போலீசார் எங்களை மிரட்டி பணம் வசூல் செய்கின்றனர் என கூறியிருந்தனர்.

    • தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது முதலமைச்சர் தெரிவித்தார்.
    • இதுவரை சென்னையில் மட்டும் 60,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சென்னை ஷெனாய் நகரில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வருவாய்த்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி அமுதா கூறுகையில்,

    * ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    * தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது முதலமைச்சர் தெரிவித்தார்.

    * இதுவரை சென்னையில் மட்டும் 60,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    * சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 86,388 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

    ×