என் மலர்
திருநெல்வேலி
- தலையில் பலத்த காயம் அடைந்த சீதாராமலட்சுமியை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- முதல் கட்ட விசாரணையில் சீதாராமலட்சுமியின் உறவினர் பெண் ஒருவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள வடுகன்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி சீதாராமலட்சுமி (வயது 59). தம்பதி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இன்று அதிகாலை அவர்கள் 2 பேரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு புகுந்த மர்ம பெண் ஒருவர் சீதா ராமலட்சுமியை சரமாரியாக அடித்து உதைத்து விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சீதாராமலட்சுமியை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் சீதாராமலட்சுமியின் உறவினர் பெண் ஒருவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது.
- பள்ளி திறப்பு தேதி மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை வாட்ஸ்-அப் மூலமாக தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றனர்.
பணகுடி:
தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிவடைய உள்ள தருவாயில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாநகர் மற்றும் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறப்பு தேதி மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை வாட்ஸ்-அப் மூலமாக தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றனர்.
வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ள மத்திய அரசு இதுதொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது. ஆனால் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் அந்த நோட்டுக்களை வாங்க மறுப்பதால் பெரும்பாலானவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்கப்படாது என்ற நிர்வாகங்களின் அறிவிப்பால் மாணவ-மாணவிகளின் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.
- இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
- அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரை யில் சவுந்திரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் வைகாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
தேரோட்டம்
இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதற்காக அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாத சுவாமி தேருக்கு எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் காலை 9 மணிக்கு தேர் வடம் பக்தர்களால் பிடித்து இழுக்கப்பட்டது.
நான்கு ரத வீதிகளிலும் சுற்றிவந்து நிலையம் வந்தடைந்த தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பழங்கள் சூரை விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- சந்திப்பு ரெயில் நிலையம் மூலம் கடந்த ஓராண்டில் ரூ.100 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் தென் மாவட்டங்களின் இதய பகுதியாக விளங்கி வருகிறது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். தென்னக ரெயில்வேயில் அதிக வரு வாயை ஈட்டி கொடுத்துள்ள ரெயில் நிலையத்தில் முக்கிய ரெயில் நிலையமாக சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது. கடந்த ஓராண்டில் ரூ.100 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இந்த ரெயில் நிலையத்தில் பழைய மற்றும் புதிய கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களில் முன்பதிவு கவுண்டர்களும், உடனடியாக டிக்கெட் எடுத்துச் செல்வ துக்கான கவுண்டர்களும், இது தவிர தட்கல் முன்பதிவு செய்வதற்கான கவுண்டர்களும் உள்ளது.
இங்கு தட்கல் டிக்கெட் எடுக்க நாள்தோறும் ஏராளமான பயணிகள் காலையிலேயே வந்து காத்திருந்து எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு காத்திருந்து எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் இருக்கைகள் அமைத்து கொடுக்கவில்லை என்றும், இதனால் வயதானவர்கள் தரையில் சிரமப்பட்டு அமர்ந்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.
அதிக வருவாய் ஈட்டி தரும் சந்திப்பு ரெயில் நிலையம் தென் மாவட்டங்களின் இதய பகுதியாக விளங்கி வருகிறது. ஆனால் தட்கல் டிக்கெட் எடுப்பதற்கு வரிசையில் காத்து நிற்கும் பயணிகள் தரையில் அமரும் நிலை இருப்பதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தட்கல் டிக்கெட் எடுக்க வருவோர் காத்து நிற்கும் நிலையில் அதற்கு முன்பாகவே சிலர் விண்ணப்ப படிவத்தை கற்களை வைத்து வரிசையில் வைத்து விட்டு செல்வதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் அதனை சரி செய்தனர்.
எனவே தரையில் அமர்ந்து தட்கல் டிக்கெட் எடுக்க வருவோருக்கு இருக்கைகள் அமைத்து தரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிவநம்பி தனது தாயார் முத்துமாரியுடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
- எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சிவநம்பி, முத்துமாரி படுகாயம் அடைந்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் ஆனைகுளத்தை சேர்ந்த முருகன் மகன் சிவநம்பி (வயது18). நேற்று முன் தினம் இவர் தனது தாயார் முத்துமாரியுடன் (39) மோட்டார் சைக்கிளில் களக்காடு அருகே ஜெ.ஜெ.நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
புதூர் அருகே வந்த போது, எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிவநம்பி, முத்துமாரி படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 2 பேரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த டோனாவூரை சேர்ந்த சுந்தர் (36) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- முத்தாரம்மன் கோவிலின் செயலாளராக ஜெயபாரத் என்பவர் இருந்து வருகிறார்.
- திருட்டு குறித்து ஜெயபாரத் பழவூர் போலீசில் புகார் அளித்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள ஆவரைகுளத்தில் புகழ்பெற்ற முத்தாரம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயலாளராக அதே ஊரில் பண்ணைவிளை தெருவை சேர்ந்த ஜெயபாரத்(வயது 49) என்பவர் இருந்து வருகிறார்.
பூட்டு உடைப்பு
கடந்த 25-ந்தேதி இவர் வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிச்சென்றார். மீண்டும் நேற்று சென்று பார்த்தபோது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்கநகை திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து ஜெயபாரத் பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தாரம்மன் கோவிலில் நகையை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வண்டல் மண்ணை வயலில் இடுவதால், வயல் மண்ணின் பௌதீக மற்றும் ரசாயண தன்மை மாறுகிறது.
- நுண்ணூட்ட சத்துக்களின் அளவு அதிகரிப்பதால் மண்ணின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
அம்பை:
அம்பை வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"ஆற்று வண்டல் தேற்றும் பயிரை" என்பது தமிழ் முதுமொழி. ஆற்று வண்டல் மண்ணை வயலில் இடுவதால் மண்ணின் வளம் காக்கப்பட்டு பயிரின் மகசூல் அதிகரிக்கும் என்பது இதன் பொருள்.
வண்டல் மண்ணை வயலில் இடுவதால், வயல் மண்ணின் பௌதீக மற்றும் ரசாயண தன்மை மாறுகிறது. வண்டல் மற்றும் களி அளவு (வயல் மண்ணில்) அதிகரி க்கிறது. இதனால் வயல் மண்ணில் தண்ணீர் தக்க வைக்கும் திறன் அதிகரி க்கிறது. மண்ணின் அமில காரத் தன்மை மேம்படுத்த ப்படுகிறது. மண்ணில் கரிம அளவு அதிகரிக்கிறது. மண்ணில் நுண்ணுயிர்களின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் கந்தக சத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிக அளவில் இச்சத்துக்கள் பயிருக்கு கிடைக்க செய்கிறது. மண்ணில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களின் அளவும் அதிகரிக்கிறது. மண்ணின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதனால் பயிரின் மகசூல் அதிகரிக்கிறது.அம்பை வட்டாரத்தில் பொதுப்பணிதுறை குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு கண்டறிய ப்பட்ட குளங்களாவன:
கோடாரங்குளத்தில் இடைமலைக்குளம், மேல அம்பாசமுத்திரத்தில் மேல இடையன்குளம், கீழ இடையன்குளம், ரெங்கை யன் குளம், பல்லாங்குளம், ஏகாம்பர புரத்தில் பெட்டை குளம், உசிலம் குண்டு குளம், திருநாண் குளம், அடைய கருங்குளம் கல்சூந்துகுளம், குமார தீர்த்துகுளம், வாகை குளம் கிராமத்தில் சிறுங்க ன்குளம், வாகைக்குளம், மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்த சுமை தாங்கி குளம், சீர்மாதங்குளம், வைராவிகுளம் கிராமத்தில் வைராவிகுளம், கீழ்முகத்தில் குறிப்பான்குளம், அயன்சி ங்கம்பட்டி கிராமத்தில் சிங்கம்பட்டி தெற்குகுளம், சிங்கம்பட்டி வடக்குகுளம், தெற்கு பாப்பான்குளத்தை சார்ந்த கரடிகுளம், உப்பு கரைகுளம், ஆலடிகுளம், அய்யப்ப சேரிகுளம், ஆத்தியா ன்குளம்.மேற்காணும் குளங்களில் வண்டல்மண் எடுத்திட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே இக்கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயல்களில் வண்டல்மண் எடுக்க உடனடியாக தங்கள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு மனு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே விவ சாயிகள் தங்கள் வயல் நிலங்களில் வண்டல் மண் இட்டு மண் வளத்தை பெருக்கி அதிக மகசூல் எடுத்திடலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மணியாச்சியை சேர்ந்த ரமேஷ் என்பவர் காற்றாலையில் சூப்பர்வைசராக இருந்து வருகிறார்.
- திருட்டு குறித்து ரமேஷ் கங்கைகொண்டான் போலீசில் புகார் அளித்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே மேட்டுப்பிராஞ்சேரி-வெண்கலப்பொட்டல் சாலையில் தனியார் காற்றாலை செயல்பட்டு வருகிறது. இந்த காற்றாலையில் சூப்பர்வைசராக கயத்தாறு அருகே மணியாச்சியை சேர்ந்த ரமேஷ்(வயது 28) என்பவர் இருந்து வருகிறார்.
இவர் கடந்த 25-ந்தேதி காற்றாலையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த சுமார் 33 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக அவர் கங்கைகொண்டான் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தியதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தை சேர்ந்த கார்த்தி(33) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- கணேஷ் தனது 1 ½ வயது மகன் கணேசனை மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு பாளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
- எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக கணேஷின் மோட்டார் சைக்கிளில் மோதியது.
நெல்லை:
செய்துங்கநல்லூர் தென்னஞ்சாவடி தெருவை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மகன் கணேஷ் (வயது 28). இவர் இன்று மதியம் தனது 1 ½ வயது மகன் கணேசனை மோ ட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு பாளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பாளை நீதிமன்றம் அருகே சங்கர் காலனி பகுதியில் சென்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக கணேஷின் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தந்தை, மகன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சிறுவனுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. கணேசுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 12 இடங்களில் 14 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- தேர்வு எழுதுவதற்காக ஆயிரத்து 852 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
நெல்லை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற்றது.
இதற்காக மாவட்டத்தில் 12 இடங்களில் 14 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 974 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆயிரத்து 852 பேர் மட்டுமே தேர்வெழுத வந்திருந்தனர். 2 ஆயிரத்து 122 பேர் தேர்வு எழுத வரவில்லை.
- நெல்லை மாநகரப் பகுதியில் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.
நெல்லை:
நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் நெல்லை மாநகரப் பகுதியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரிலும் உதவி கமிஷனர் வெங்கட்ராமன், நகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலும் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தீவிர தூய்மை பணி நடைபெற்றது.
அதன்படி டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்கள் கிழித்து சுத்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வழுக்கோடை சாலை, சேரன்மகாதேவி சாலை மற்றும் காட்சி மண்டபம் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த பணியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார் வையாளர் மனோஜ், பரப்புரை யாளர்கள் முத்துராஜ், ஷேக், மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்்.
- வள்ளி கணேஷ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
- படுகாயம் அடைந்த வள்ளிகணேஷ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
நெல்லை:
பாளை குலவணிகர்புரம் பாண்டித்துரை 3-வது தெருவை சேர்ந்தவர் வள்ளி கணேஷ் (வயது 53). இவர் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ட ராக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் பாளையங்கால்வாய் அருகே சென்றுக் கொண்டிருந்த போது திருச்செந்தூர் அருகே உள்ள பரமக்குறிச்சி வெள்ளாளன்விளையை சேர்ந்த செந்தூர்பாண்டி (43) என்பவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார். லாரி டிரைவரான அவர் மீது வள்ளிகணேஷ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த வள்ளிகணேஷ் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்க ப்பட்டார். அங்கி ருந்து தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






