நெல்லை அருகே காற்றாலையில் காப்பர் வயர் திருடிய வாலிபர் கைது

மணியாச்சியை சேர்ந்த ரமேஷ் என்பவர் காற்றாலையில் சூப்பர்வைசராக இருந்து வருகிறார்.திருட்டு குறித்து ரமேஷ் கங்கைகொண்டான் போலீசில் புகார் அளித்தார்.
நெல்லை அருகே காற்றாலையில் காப்பர் வயர் திருடிய வாலிபர் கைது
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே மேட்டுப்பிராஞ்சேரி-வெண்கலப்பொட்டல் சாலையில் தனியார் காற்றாலை செயல்பட்டு வருகிறது. இந்த காற்றாலையில் சூப்பர்வைசராக கயத்தாறு அருகே மணியாச்சியை சேர்ந்த ரமேஷ்(வயது 28) என்பவர் இருந்து வருகிறார்.

இவர் கடந்த 25-ந்தேதி காற்றாலையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த சுமார் 33 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக அவர் கங்கைகொண்டான் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தியதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தை சேர்ந்த கார்த்தி(33) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com