என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறித்த பெண்- போலீசார் விசாரணை
- தலையில் பலத்த காயம் அடைந்த சீதாராமலட்சுமியை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- முதல் கட்ட விசாரணையில் சீதாராமலட்சுமியின் உறவினர் பெண் ஒருவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள வடுகன்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி சீதாராமலட்சுமி (வயது 59). தம்பதி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இன்று அதிகாலை அவர்கள் 2 பேரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு புகுந்த மர்ம பெண் ஒருவர் சீதா ராமலட்சுமியை சரமாரியாக அடித்து உதைத்து விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சீதாராமலட்சுமியை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் சீதாராமலட்சுமியின் உறவினர் பெண் ஒருவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






