என் மலர்
நீங்கள் தேடியது "Tatkal Tickets"
- சந்திப்பு ரெயில் நிலையம் மூலம் கடந்த ஓராண்டில் ரூ.100 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் தென் மாவட்டங்களின் இதய பகுதியாக விளங்கி வருகிறது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். தென்னக ரெயில்வேயில் அதிக வரு வாயை ஈட்டி கொடுத்துள்ள ரெயில் நிலையத்தில் முக்கிய ரெயில் நிலையமாக சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது. கடந்த ஓராண்டில் ரூ.100 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இந்த ரெயில் நிலையத்தில் பழைய மற்றும் புதிய கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களில் முன்பதிவு கவுண்டர்களும், உடனடியாக டிக்கெட் எடுத்துச் செல்வ துக்கான கவுண்டர்களும், இது தவிர தட்கல் முன்பதிவு செய்வதற்கான கவுண்டர்களும் உள்ளது.
இங்கு தட்கல் டிக்கெட் எடுக்க நாள்தோறும் ஏராளமான பயணிகள் காலையிலேயே வந்து காத்திருந்து எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு காத்திருந்து எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் இருக்கைகள் அமைத்து கொடுக்கவில்லை என்றும், இதனால் வயதானவர்கள் தரையில் சிரமப்பட்டு அமர்ந்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.
அதிக வருவாய் ஈட்டி தரும் சந்திப்பு ரெயில் நிலையம் தென் மாவட்டங்களின் இதய பகுதியாக விளங்கி வருகிறது. ஆனால் தட்கல் டிக்கெட் எடுப்பதற்கு வரிசையில் காத்து நிற்கும் பயணிகள் தரையில் அமரும் நிலை இருப்பதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தட்கல் டிக்கெட் எடுக்க வருவோர் காத்து நிற்கும் நிலையில் அதற்கு முன்பாகவே சிலர் விண்ணப்ப படிவத்தை கற்களை வைத்து வரிசையில் வைத்து விட்டு செல்வதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் அதனை சரி செய்தனர்.
எனவே தரையில் அமர்ந்து தட்கல் டிக்கெட் எடுக்க வருவோருக்கு இருக்கைகள் அமைத்து தரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






