என் மலர்
திருநெல்வேலி
- லெட்சுமியை கடந்த சில நாட்களுக்கு முன் நாய்கள் துரத்தியது.
- இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி லெட்சுமி (வயது70). இவருக்கு குழந்தைகள் இல்லை. கணவர் சுப்பிரமணியனும் பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் பத்மநேரியில் பொதுமக்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரை நாய்கள் துரத்தியது. இதனால் பயத்தில் ஓடியவர் தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெட்சுமி இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- வன விலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.
- கூண்டுக்குள் சிக்கிய கரடியை வனப்பகுதியில் கொண்டுவிடும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் வன விலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.
இதுபோல வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி ஒன்று களக்காடு அருகே பெருமாள்குளம் கிராமத்திற்குள் சுற்றி திரிந்தது. இதன் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அச்சமடைந்த கிராம மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதன்படி களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் பெருமாள் குளம் கிராமத்தில் கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கூண்டுக்குள் கரடி சிக்கியது. கூண்டுக்குள் சிக்கிய கரடியை வனப்பகுதியில் கொண்டுவிடும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- சிறிது தொலைவு வந்ததும் சுஷாந்தை நடுவழியில் இறக்கிவிட்ட அந்த கும்பல் நாகர்கோவில் நோக்கி காரை ஓட்டி சென்றுள்ளது.
- வாகன போக்குவரத்து அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த துணிகர முகமூடி கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
களக்காடு:
நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் இன்று காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் 2 உதவியாளர்களுடன் சென்றுள்ளார். அப்போது நெல்லையில் இருந்து இவரது காரை தொடர்ந்து முன்னும் பின்னும் 2 கார்கள் வந்துள்ளன. நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரெயில்வே மேம்பாலத்தில் வரும்போது திடீரென 2 கார்களிலும் வந்த முகமூடி கும்பல் சுஷாந்தின் காரை வழிமறித்து நிறுத்தி அவர் மீது மிளகாய் பொடிதூவி கம்பியால் தாக்கியுள்ளனர்.
பின்னர் காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.1.50 கோடியை திருட முயன்றுள்ளனர். உடனே சுஷாந்த் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அவ்வழியே வந்த தனியார் ஆம்னி பஸ் டிரைவர், நடத்துனர் மற்றும் பயணிகள் சுஷாந்தின் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்து கொள்ளையர்களை விரட்டி உள்ளனர். இதனால் சுதாரித்துக்கொண்ட முகமூடி கொள்ளையர்கள் சுஷாந்தை தாங்கள் வந்த காரில் தூக்கிப்போட்டு, அவரது காரையும் கடத்தி சென்று விட்டனர்.
சிறிது தொலைவு வந்ததும் சுஷாந்தை நடுவழியில் இறக்கிவிட்ட அந்த கும்பல் நாகர்கோவில் நோக்கி காரை ஓட்டி சென்றுள்ளது. தொடர்ந்து சென்றால் நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்த கொள்ளையர்கள் சுங்கச்சாவடிக்கு முன்பு உள்ள நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி நெடுங்குளம் கிராமத்தை நோக்கி சென்றனர்.
அங்குள்ள குளத்தின் கரையோரம் சுஷாந்தின் காரை நிறுத்தி அதில் இருந்த பணத்தை தங்கள் காருக்கு மாற்றிய கொள்ளை கும்பல் சுஷாந்தின் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடைய கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த சுஷாந்த் பயத்தில் நெல்லையில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்த பின் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் மூன்றடைப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சுஷாந்திடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவிப்பதால் அது ஒருவேளை கருப்பு பணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த துணிகர முகமூடி கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- ராமசாமிக்கு திருமணம் ஆனதில் இருந்து மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது.
- கைது செய்யப்பட்ட மகாலெட்சுமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள துலுக்கர்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 63). இவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருகிறார்.
இவரது மனைவி சீதாராமலெட்சுமி(58). இவருக்கு ஒரு மகளும், ராமசாமி என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு சுத்தமல்லி அருகே கொண்டாநகரத்தில் திருமணமாகி உள்ளது. ராமசாமிக்கு மகாலெட்சுமி(27) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும், 10 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் மாமியார்-மருமகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மகாலெட்சுமி, நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சீதாராமலெட்சுமியை சரமாரியாக கம்பால் தாக்கிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து சென்றார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில் சீதபற்பநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதா கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து மகாலெட்சுமியை கைது செய்தனர்.
இந்நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி சீதாராமலெட்சுமி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, மகாலெட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
ராமசாமிக்கு திருமணம் ஆனதில் இருந்து மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர்களிடையே பிரச்சினையை போக்குவதற்காக சண்முகவேல் குடியிருக்கும் வீட்டுக்கு பின்புறத்தில் புதிதாக ஒரு வீட்டை ராமசாமிக்கு கட்டிக் கொடுத்துள்ளனர்.
ஆனாலும் மகாலெட்சுமி அடிக்கடி மாமனார்-மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அவ்வப்போது அக்கம்பக்கத்தினர் வந்து சமாதானம் பேசி வந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி உள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மகாலெட்சுமி, தனது மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.
அதன்படி நேற்று அதிகாலை சீதாராமலெட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அவர் அங்கு சென்று கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் போலீசில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, தனது மாமியார் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
போலீசார் வீட்டுக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சியை பார்த்தபோது, அதில் மகாலெட்சுமி தான் மூதாட்டியை தாக்கிவிட்டு செயினை பறித்து சென்றார் என்பது தெரியவந்தது.
மேலும் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக அவரை தாக்கிவிட்டு, செயினை பறித்துள்ளார். அவ்வாறு செய்தால் செயினை திருடவந்த மர்மநபர்கள் மூதாட்டியை தாக்கி உள்ளனர் என்று ஊரை நம்பவைத்துவிடலாம் என்று மகாலெட்சுமி நினைத்துக்கொண்டு அந்த நாடகத்தை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மகாலெட்சுமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.
+2
- பாளை விருந்தினர் மாளிகைக்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
- கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி ராஜாஜி மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசுக்கு நன்றி
கூட்டத்தில் தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்ததற்கும், நெல்லை மாநகர பகுதியில் பொருநை அருங்காட்சியகம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் கே.என். நேருவுக்கும் நன்றி தெரிவிப்பது, பாளை விருந்தினர் மாளிகைக்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது.
தொடர்ந்து தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட கவுன்சிலர்கள் தச்சை சுப்பிர மணியன், கோகுலவாணி, சங்கர் உள்ளிட்டோர் பேசும்போது, நெல்லை மாநகர பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் உந்துதல் மையத்தில் இருந்து நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு, துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவு நீர் உந்துதல் மையத்திற்கு செல்லும் குழாயை உடைத்துள்ளதால் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை 3-வது கட்ட பணிகளை உடனடியாக நிறைவேற்றி அதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோர வேண்டும் என வலியுறுத்தினர்.
காரசார விவாதம்
அதற்கு பதிலளித்து பேசிய அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடை பெற்றது. இதேபோல் மேலப்பாளையம் மண்டலத்தை சேர்ந்த கவுன்சிலர்கள் ரம்ஜான் அலி, ரசூல்மைதீன் உள்ளிட்டோர் பேசும்போது, பாளையங்கால்வாயில் நேரடியாக கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றனர்.
பாளை பகுதி கவுன்சி லர்கள் சிலர் பேசுகை யில், கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் நீராதாரமாக விளங்கும் அடிக்குழாய்கள் பல்வேறு பகுதிகளில் சிதலமடைந்து காணப்படுகிறது. இது குறித்து கேட்டால் அதற்கான உபகரணங்கள் வரவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகராட்சியில் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படுவது போல் மண்டல அலுவலங்களிலும் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றனர்.
சிறப்புக்குழு
கவுன்சிலர் உலகநாதன் பேசும்போது, டவுன் வ.உ.சி. தெருவில் அமைக்க ப்பட்டுள்ள சி.சி.டி.வி.காமிராக்கள் பழுதடைந்து உள்ளது. எனவே அதனை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் பதிலளித்து பேசிய மேயர் சரவணன் கூறியதாவது:-
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு உருவாக்கி கண்காணிக்கப்படும். மண்டல அளவில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை களில் மாலை நேரங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுதாமூர்த்தி, கருப்பசாமி கோட்டை யப்பன், பவுல்ராஜ், கிட்டு என்ற ராம கிருஷ்ணன், ரவீந்தர், நித்திய பாலையா, சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அரவிந்த் நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் கோவளம் மற்றும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
- திடீர் என எதிர்பாராதவிதமாக கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
களக்காடு:
நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த வர் அரவிந்த். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் கோவளம் மற்றும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது ரோட்டின் குறுக்கே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது.
திடீர் என எதிர்பாராதவிதமாக கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அணைக்கரையை சேர்ந்த தொழிலாளி கார்த்திக் (வயது 28) தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் நெல்லையை சேர்ந்த சதீஷ் என்பவரிடம் விசாரணை
- அன்பு குமார் நெல்லையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
- எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளதால் அன்பு குமாரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
நெல்லை, மே.29-
நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளம் அருகே உள்ள வடுகம்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் வனராஜ். லாரி டிரைவர். இவரது மகன் அன்பு குமார் (வயது 17). இவர் நெல்லையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் அன்பு குமார் வீட்டில் இருந்து வந்தார். அவர் எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதில் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அன்பு குமார் இறந்தார்.
- ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
- சட்டங்கள் எதுவும் தெரியாமல் தற்போது உள்ள தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியின் அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. தேர்தல் இன்பதுரை மற்றும் அ.தி.மு.க.வினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
குடிநீர் தட்டுப்பாடு
அவர் அளித்த மனுவில், கூடங்குளம் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உடனடியாக கலெக்டர் தலையிட்டு கூடங்குளம் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வள்ளியூர் பஸ் நிலை யத்தில் கட்டிட வேலையை துரிதப்படுத்த வேண்டும். பெரும்பாலான பஸ்கள் வள்ளியூர் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அனைத்து பஸ்களும் வள்ளியூர் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிரு ந்தார்.
பேட்டி
தொடர்ந்து இன்பதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசால் லண்டன் மாநகரில் திறக்கப்பட்ட பென்னிகுயிக் உருவ சிலைக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால் கருப்பு துணி கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. லண்டன் மாநகரில் தமிழகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
சபாநாயகர் தொகுதியான ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடும் சூழல் உருவாகி உள்ளது. கட்டுமான நிறுவனங்கள், அணுமின் நிலையம் உள்ளிட்ட வைகளுக்கு தண்ணீரை விற்பனை செய்வதே இது போன்ற நிலைக்கு காரணம்.
வருமானத்துறை சோதனையின் போது அதிகாரிகள் மீது தாக்குதல் நட த்தப்பட்டது கண்டனத்தி ற்குரியது. அதிகாரிகளுக்கு இது சோதனையான காலம். கரூர் மாவட்ட எஸ்.பி. மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சி.ஆர்.பி.சி., ஐ.பி.சி. போன்ற சட்டங்கள் எதுவும் தெரியாமல் தற்போது உள்ள தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
பீகார், ஒரிசா, தெலுங்கு படங்களில் மட்டும் தான் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ராதாபு ரத்தில் புதிய திறப்பு விழா கண்டு கொண்டிருக்கிறனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சம்பவம் குறித்து சுபா குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார், சுபா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிங்கை:
அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டி பொன்நகர் ரோட்டை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சுபா (வயது27). இவர் இன்று காலையில் வீட்டில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சுபா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏற்கனவே குருநாதன் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
- பக்கத்து வீட்டுக்காரர்கள் குருநாதன் வீட்டில் பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் பண்டாரம் மகன் குருநாதன் (வயது 29). ஆட்டோ டிரைவரான இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குருநாதன் மற்றும் அவரது மனைவியின் சொந்த ஊர் பாலாமடையாகும். இதனிடையே கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஏற்கனவே இருமுறை குருநாதன் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலாமடையில் நடைபெறும் திருவிழாவிற்காக இசக்கியம்மாள் தனது குழந்தைகளுடன் அங்கு சென்றுள்ளார். நேற்று இரவு குருநாதன் அக்கம் பக்கத்தினரிடம் தூங்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் இன்று காலை வெகு நேரம் ஆகியும் அவரது வீட்டின் கதவு திறக்கவில்லை. இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் குருநாதன் வீட்டில் பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், குருநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.5 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, தரைமட்ட பாலம், படித்துறை கட்டப்பட்டுள்ளன.
- நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர் யாதவர் வடக்கு, தெற்கு தெருக்களில் ஊராட்சி பொது நிதியில் சுமார் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, தரைமட்ட பாலம், படித் துறை கட்டப்பட்டுள்ளன. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவிமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய சாலை மற்றும் பாலங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் பலவேசம் இசக்கிபாண்டி, மேலூர் தி.மு.க. கிளைச் செயலாளர் சுப்பிர மணி, அரசு ஒப்பந்த தாரர் மணி கண்டன், தீபம் கோபால், மணி, முருகேசன், ரங்கன் பண்ணையார், பரம சிவன், நம்பி, போல்ராஜ், வீர லட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பாரதீய ஜனதா சார்பில் செயற்குழு கூட்டம் வள்ளியூர் காமராஜ் நகரில் உள்ள அய்யா திருமண மண்டபத்தில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.
- ஒன்றிய பொதுச்செயலாளர் சார்லஸ் வரவேற்று பேசினார்.
வள்ளியூர்:
வள்ளியூர் வடக்கு ஒன்றியத்தில் பாரதீய ஜனதா சார்பில் செயற்குழு கூட்டம் வள்ளியூர் காமராஜ் நகரில் உள்ள அய்யா திருமண மண்டபத்தில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் தளவாய் மற்றும் மாவட்ட செயலாளரும், ஒன்றிய பார்வையாளருமான சுந்தரராஜன் கலந்து கொண்டார். ஒன்றிய பொதுச்செயலாளர் சார்லஸ் வரவேற்று பேசினார். செயற்குழு தீர்மானங்களை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்தழகன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், வழக்கறிஞர் அணி பிரிவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணசாமியும்,
வள்ளியூர் பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர் சுமித்ராவும் வாசித்தார்.
ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ராமகுட்டி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் கிளை






