என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • முக்கூடல் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த பழனிசாமி என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
    • மேலும் அவரிடமிருந்து 31 கிலோ புகையிலை பொருட்கள், 55 மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர்.

    முக்கூடல்:

    முக்கூடல் அருகே பாப்பாக்குடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓடக்கரை துலுக்கப்பட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு நின்று கொண்டிருந்த முக்கூடல் அருகே உள்ள மானாபர நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த பழனிசாமி (வயது 35) என்பவரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவர் கையில் இருந்த பையை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சட்டவிரோத விற்பனைக்காக மதுபான பாட்டில்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார்கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 31 கிலோ புகையிலை பொருட்கள், 55 மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர்.

    • சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார் பட்டவராயன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்து கால் நாட்டப்பட்டது.
    • இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கிலியால் அடித்தும், பொங்கலிட்டும் வழிபாடு செய்தனர்.

    சிங்கை:

    பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று திருவிழா கால்நாட்டு வைபம் நடந்தது. சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார் பட்டவராயன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்து கால் நாட்டப்பட்டது.

    இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கிலியால் அடித்தும், பொங்கலிட்டும் வழிபாடு செய்தனர்.

    கால் நாட்டு திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 5 நாட்கள் வனத்துறை சார்பில் அனுமதி வழங்க ப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு திருவிழாவிற்கு 3 நாட்கள் மட்டுமே கோவில் அமைந்துள்ள வனப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வனத்துறை யினர் பக்தர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை திணித்துக் கொண்டு வருகின்றனர்.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணி க்கை வெகுவாக குறைந்து வருகிறது. எங்களுக்கு மீண்டும் கடந்த ஆண்டு போல 5 நாட்கள் வரை கோவிலில் தங்கி இருந்து திருவிழாவை காண வனத்துறை அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • செல்வகுமார், தங்கபாண்டி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் முத்து வீட்டின் வழியாக சென்றனர்.
    • அப்போது முத்து வீட்டு முன் படுத்திருந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் நம்பி மகன் முத்து (வயது 27). பெயிண்டராக உள்ளார்.

    சம்பவத்தன்று மறுகால்குறிச்சியை சேர்ந்த ஜீவா மகன் செல்வகுமார் என்ற சைனா செல்வகுமார் (26), பெரும்பத்தை சேர்ந்த சித்திரைவேல் மகன் தங்கபாண்டி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் முத்து வீட்டின் வழியாக சென்றனர். அப்போது முத்து வீட்டு முன் படுத்திருந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

    அப்போது செல்வகுமார், தங்கபாண்டியை பார்த்து நாய் குரைத்தது.

    இதில் முத்துவிற்கும், செல்வகுமார், தங்கபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வகுமார், தங்கபாண்டி ஆகியோர் சேர்ந்து முத்துவை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.

    இதனால் காயமடைந்த முத்து நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி செல்வ குமார், தங்கபாண்டியை தேடி வருகின்றனர்.

    • தி.மு.க. ஆட்சி தற்போது மக்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளது.
    • மதுவினால் வரும் வருமானத்தை வைத்து தான் தற்போது ஆட்சி செய்து வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணத்தின் தொடர்ச்சியாக நேற்று மதுரையில் யாத்திரையை தொடங்கினார்.

    இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இன்று காலையில் பாதயாத்திரை நடைபெற்றது. திருநகரில் ஆரம்பித்த அவரது நடைபயணம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து அவர் திருப்பரங்குன்றம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது பா.ஜ.க. தொண்டர்கள் அவருக்கு செங்கோலை பரிசாக வழங்கினர்.

    மேலும் நடை பயணத்தின் போது வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர். 16 கால் மண்டபத்தில் அண்ணாமலை தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி தற்போது மக்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளது. தமிழகத்தில் சௌராஷ்டிரா மக்கள் அதிக அளவு உள்ளனர். விசைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள கொடுத்த தி.மு.க. அரசு தற்போது வரை எதுவும் செய்யவில்லை. தமிழகம் தற்போது இந்திய அளவில் கடன் வாங்குவதில் முதல் மாநிலமாகவும், ஊழல் செய்வதில் மற்றும் மது விற்பனையில் முதல் மாநிலமாகவும் உள்ளது.

    மதுவினால் வரும் வருமானத்தை வைத்து தான் தற்போது ஆட்சி செய்து வருகிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன் 2014-ல் 24 கோடி பெண்கள் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருந்தனர். ஆனால் தற்போது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 79 கோடி பெண்கள் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்.

    201-ல் 11 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே பெண்களுக்கு தனி கழிப்பிடங்கள் இருந்தது. ஆனால் தற்போது 100 சதவீத பள்ளிகளில் தனி கழிப்பிடங்களை மோடி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். தி.மு.க. அரசு பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால் அதில் பெரும்பாலானோருக்கு பணம் கிடைக்காது.

    இதே போல நகைக்கடன், கல்வி கடன் திருப்பி வழங்கப்படும் என கூறி பொய் வாக்குறுதிகள் அளித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதே போலவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் பல்வேறு பொய் வாக்குறுதிகள் அளித்து உங்களை ஏமாற்ற வருவார்கள். தமிழகம், பாண்டிச்சேரி என 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை வெற்றி பெற வைத்து நமது முழு ஆதரவை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து அவர் திருமங்கலம் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபயணத்தை முடித்து விட்டு மதியம் மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

    • கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தை கடந்து தேவர் சிலை அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் சிவராஜ் பஸ்சை நிறுத்தினார்.
    • அப்போது ஆற்றுப் பாலம் அருகே இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர் கல் வீசி பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்றிரவு ரெட் பஸ் ஒன்று சந்திப்பு பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தை கடந்து தேவர் சிலை அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் சிவராஜ் பஸ்சை நிறுத்தினார்.

    கண்ணாடி உடைப்பு

    அப்போது ஆற்றுப் பாலம் அருகே இருட்டான பகுதியில் நின்று கொண்டி ருந்த மர்ம நபர்கள் சிலர் கல் வீசி பஸ்சின் பின்பக்க கண்ணாடி யை உடைத் தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சிவராஜ், சந்திப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.

    அவர்களை கைது செய்த பின்னரே, மதுபோ தையில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும். 

    • நாற்றங்கால்கள் உரிமம் பெறாமல் நாற்றுகளை விற்பனை செய்யக் கூடாது.
    • நாற்றுகள் வாங்குபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பண்ணைகளில் வாங்கி பயனடையலாம்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983, பிரிவு 3-ன் படி காய்கறி நாற்றுகள் விற்பனை செய்யும் நாற்றங்கால்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நாற்றங்கால்கள் உரிமம் பெறாமல் நாற்றுகளை விற்பனை செய்யக் கூடாது.

    தென்காசி மாவட்டத்தில் நாற்று பண்ணைகளில் காய்கறி செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உரிமம் பெறாமல் நாற்று பண்ணை அமைத்துள்ள வர்கள் மற்றும் அமைக்க இருப்பவர்கள் விற்பனை உரிமம் பெற விண்ணப்ப படிவம் 'அ'வில் இரு நகல் களில் பூர்த்தி செய்து ரூ. 1000-க்கு உரிய கணக்கில் இணையதளம் மூலம் செலுத்தி தேவையான ஆவணங்களுடன் நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இணையதளத்தில் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டு நாற்றுப் பண்ணை அமைந்துள்ள பகுதி கட்டிட வரைபடம், சொந்த இடமாக இருந்தால் சொத்து வரிரசீது நகல், வாடகை இடமாக இருந்தால் ஒப்பந்தபத்திரம், அதன் நிலவரி ரசீது, ஆதார் கார்டு நகல், 3 பாஸ்போர்ட் புகைப் படம் ஆகியவற்றுடன் விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். காய்கறி நாற்றுகள் வாங்குபவர்கள் அங்கீகரி க்கப்பட்ட நாற்று பண்ணைகளில் மட்டும் வாங்கி பயனடையலாம். உரிமம் பெறாத நாற்று பண்ணைகளில் நாற்றுக்களை வாங்கி ஏமாற வேண்டாம்.

    உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படி நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுக்குடி, கங்கனாங்குளத்தில் டவர் அமைந்துள்ள இடங்களை சேதுராமன் பார்வையிட்டார்.
    • திருட்டு சம்பவம் குறித்து சேதுராமன் போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள புதுக்குடியில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் சேரன்மகாதேவி- களக்காடு சாலையில் அமைந்துள்ள கங்கனாங்குளம் கிராமத்திலும் அதே நிறுவனத்திற்கு சொந்தமான டவர் உள்ளது.

    இந்த நிறுவனத்தின் மேலாளராக சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த சேதுராமன் (வயது51) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நெல்லைக்கு வந்து ஆய்வு செய்த நிலையில் நேற்று புதுக்குடி மற்றும் கங்கனாங்குளத்தில் டவர் அமைந்துள்ள இடங்களை அவர் பார்வையிட்டார்.

    அப்போது புதுக்குடியில் டவர் அருகே வைக்கப்பட்டி ருந்த ரூ.31 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான உபகர ணங்களும், கங்கனாங் குளத்தில் உள்ள ரூ.20 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பி லான உபகரணங்களும் திருட்டு போயிருந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த சேதுராமன் இந்த திருட்டு சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.51 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • தாழையூத்து துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மதவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழகத்தின் நெல்லை கிராமப்புற செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையை அடுத்த தாழையூத்து துணை மின்நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நேற்று முன்தினம் இரவு மாயாண்டியை அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (20), அவரது நண்பர்கள் சுடலை கண்ணு, சுடலை மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு, பஸ்சில் ஏறி திருப்பூருக்கு சென்றனர்.
    • விசாரணையில் மாயாண்டியின் வீட்டு முன்பு இருந்த கிரைண்டரை எடுத்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 36). இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    வெட்டிக்கொலை

    நேற்று முன்தினம் இரவு இவரை அதே பகுதியை சேர்ந்த சுடலை மகன் கண்ணன் (20), அவரது நண்பர்கள் சுடலை கண்ணு, சுடலை மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு, பஸ்சில் ஏறி திருப்பூருக்கு சென்றனர். அங்கு நேற்று காலை தாராபுரம் போலீசில் சரண் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் மாயாண்டியின் வீட்டு முன்பு இருந்த கிரைண்டரை எடுத்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    உடலை வாங்க மறுப்பு

    இதற்கிடையே நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டுள்ள மாயாண்டி உடலை அவரது உறவினர்கள் பெற்று அடக்கம் செய்ய இன்று 2-வது நாளாக அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் உறவினர்களான 2 பெண்கள் உள்பட மேலும் 3 பேருடைய தூண்டுதலின் பேரில் தான் இந்த கொலை நடந்துள்ளது.

    எனவே அவர்களையும் இந்த வழக்கில் சேர்த்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று அவர்கள் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • மீனாவின் கணவர் செல்லையா கடந்த 10-ந்தேதிக்கு முன்பு இறந்து விட்டார்.
    • திருட்டு குறித்து மீனா தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள கீழ தென்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி மீனா. செல்லையா கடந்த 10-ந்தேதிக்கு முன்பு இறந்து விட்டார். மீனா தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று அவரை விஷ பூச்சி கடித்து விட்டது. இதனால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று வீட்டுக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 2½ பவுன் தங்க செயின் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • பெற்றோர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    • பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியை அடுத்த அழகிய நம்பி புரத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வெண்சுபா. இவர்களுக்கு ஹரிஷ் இசை ரக்ஷன் (வயது5) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சிறுவன் ஹரிஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    தினமும் வீட்டின் பின்புறம் உள்ள மாடி படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி விளையாடுவது வழக்கம். இன்றும் விடுமுறையையொட்டி காலையில் சிறுவன் ஹரிஷ் மாடி படிக்கட்டில் ஏறி நின்று விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்து சிறுவன் தவறி கீழே விழுந்தான். இதில் மயக்க மடைந்த ஹரிசை உறவினர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவனது பெற்றோர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நலத் திட்டங்கள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
    • கட்சியின் வளர்ச்சி பணிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயல் வீரர்கள் கூட்டங்கள் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் தென் மண்டல மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெற உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

    வருகிற 7-ந்தேதி கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நலத் திட்டங்கள் வழங்குவது, முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரச்சார கூட்டங்கள் பிரம்மாண்டமாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    மேலும், கட்சியின் வளர்ச்சி பணிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயல் வீரர்கள் கூட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இதில் ஞான திரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர்கள் கிரகாம்பெல், முருகன், மாநில சட்ட தீர்மானக் குழு உறுப்பினர் சுப.சீதாராமன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் பிரபாகரன், கே.கே.சி. பிரபாகர பாண்டியன், சித்திக், பேச்சிப்பாண்டியன், லட்சுமணன், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோசல், மாவட்ட துணைச் செயலாளர்கள் தமயந்தி, எஸ்.வி.சுரேஷ், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலை ராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ் குமார் ஆதித்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பரமசிவ அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, தங்கபாண்டியன், போர்வெல் கணேசன், ஆரோக்கிய எட்வின், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், சேவியர் ராஜா, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, இளைஞரணி ஜான் ரவீந்தர், வில்சன் மணித்துரை, அருள்ராஜ் டார்வின், முகமது மீரான் மைதீன், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் அனுராதா ரவிமுருகன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் கவுன்சிலர் நவநீதன் மற்றும் நிர்வாகிகள் பொன்னையா பாண்டியன், வேலன்குளம் முருகன், கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன், நிர்வாகிகள் ஆறுமுகராஜா, வீரபாண்டியன், செல்வ சூடாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×