search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadi Ammavasai Festival"

    • சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார் பட்டவராயன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்து கால் நாட்டப்பட்டது.
    • இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கிலியால் அடித்தும், பொங்கலிட்டும் வழிபாடு செய்தனர்.

    சிங்கை:

    பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று திருவிழா கால்நாட்டு வைபம் நடந்தது. சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார் பட்டவராயன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்து கால் நாட்டப்பட்டது.

    இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கிலியால் அடித்தும், பொங்கலிட்டும் வழிபாடு செய்தனர்.

    கால் நாட்டு திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 5 நாட்கள் வனத்துறை சார்பில் அனுமதி வழங்க ப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு திருவிழாவிற்கு 3 நாட்கள் மட்டுமே கோவில் அமைந்துள்ள வனப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வனத்துறை யினர் பக்தர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை திணித்துக் கொண்டு வருகின்றனர்.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணி க்கை வெகுவாக குறைந்து வருகிறது. எங்களுக்கு மீண்டும் கடந்த ஆண்டு போல 5 நாட்கள் வரை கோவிலில் தங்கி இருந்து திருவிழாவை காண வனத்துறை அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×