என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • ஒரு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் அந்த கோவில் சப்பரம் மட்டும் வரவில்லை.
    • விஜயதசமி அன்று 12 சப்பரங்களில் அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    நெல்லை:

    குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக நெல்லை மாநகா் பாளையில் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த விழாவில் 12 அம்மன் சப்பரங்கள் அணிவகுக்க சூரசம்ஹாரம் நடைபெறும்.

    11 சப்பரங்கள்

    அதன்படி இந்த ஆண்டு தசரா விழாவின் தொடக்கமாக பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து காப்பு கட்டுதல், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவில் பாளையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆயிரத்தம்மன், ஸ்ரீ பேராத்துசெல்வி, ஸ்ரீ தூத்துவாரி முத்தாரம்மன், உச்சினிமாகாளி அம்மன் என 11 கோவில்களில் உற்சவா் அம்மன் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வந்தார்.

    ஒரு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் அந்த கோவில் சப்பரம் மட்டும் வரவில்லை. மேலும் வண்ண விளக்குகள் ஜொலிக்க மேளதாளங்கள் முழங்க, ஸ்ரீ ஆயிரத்தம்மன் தலைமையில் 8 ரதவீதிகளிலும் வீதி உலா வந்தனா். சப்பரத்திற்கு முன்பு கொடி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.

    பக்தர்களுக்கு காட்சி

    தொடர்ந்து இன்று காலையில் ராஜகோபால சுவாமி கோவில் முன்பு 11 சப்பரங்கள் அணிவகுத்து நின்றன. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் அனைத்து சப்பரங்களுக்கும் ஆரத்தி நடைபெற்று தங்கள் கோவில்களுக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.

    இன்று முதல் 11 கோவில்களிலும் அடுத்த 9 நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து அம்மன் கொலுவில் வீற்றிருக்கும் வைபவமும் நடக்கிறது. வருகிற விஜயதசமி அன்று 12 சப்பரங்களில் அம்பாள் வீதி உலாவும், அதனை தொடா்ந்து சூரசம்காரமும் நடைபெறுகிறது.

    இன்று 11 கோவில்களில் இருந்தும் எவ்வித பிரச்சினையும் இன்று சப்பரங்கள் எடுத்து வரப்பபட்டது. இதற்காக மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் ஆதர்ஷ் பசேரா, சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    • விழாவையொட்டி வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி, தேவியர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
    • திருவீதி உலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    களக்காடு:

    களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கருட சேவை விழா நடந்தது. இதையொட்டி மதியம் வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி, தேவியர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகள் தனித் தனி கருட வாகனங்களில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரரான களக்காடு போலீசார் செய்திருந்தனர்.

    • பேரணி வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
    • பேரணியில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, பாளை தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு நெல்லை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் இளைஞர் எழுச்சி தின பேரணி பாளை வ.உ. சி. மைதானம் முன்பு இன்று தொடங்கியது.

    பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சிவராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர்கள் ஹரிராமா, பெர்னாட் ராஜா, நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஆறுமுகசாமி, ம.தி.தா பள்ளி ஆசிரியர் சோமு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பேரணி வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பாளை பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது.இந்தப் பேரணியில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பாளை தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை நாட்டு நலப் பணித்திட்டம் செய்திருந்தது.

    • அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்.ஜி.ஆர். சிலை, ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • தொடக்க விழாவையொட்டி அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என அறிக்கையில் தச்சை கணேசராஜா கூறியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில், வண்ணார்பேட்டை கொக்கிர குளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கும், அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெய லலிதா உருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இந்நிகழ்ச்சிகளில் தலைமைக் கழக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தொடக்க விழாவையொட்டி அவரவர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றியும், அலங்கரித்து வைக்கப்பட்ட தலைவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சந்தியா நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • இரவு வெகு நேரமாகியும் சந்தியா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தச்சநல்லூர் பழைய போஸ்ட் ஆபீஸ் மேல தெருவை சேர்ந்தவர் சேதுராமலிங்கம். இவரது மனைவி அம்பிகாபதி. இவர்களுக்கு சந்தியா(வயது 22) என்ற மகள் உள்ளார்.

    இவர் இளங்கலை பட்டப் படிப்பு முடித்துவிட்டு நெல்லை புதிய பஸ் நிலை யம் அருகே உள்ள ஒரு தனி யார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இத னால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தச்ச நல்லூர் போலீசில் புகார் அளித்த னர். அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து சந்தியா எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோதண்டராமன் நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • வாகனம் மோதியதில் கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டுபிராஞ்சேரி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மூக்கன். இவரது மகன் கோதண்டராமன் (வயது 34).

    வாகனம் மோதி பலி

    இவர் நேற்று நள்ளிரவில் நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையில் கங்கை கொண்டான் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட கோதண்டராமன் பலத்த காயம் அடைந்தார். அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அங்கு விரைந்து சென்று கோதண்டராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • கூட்டத்தில் சுரேஷ் மனோகரன் கலந்து கொண்டு பாகமுக வர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
    • நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பதை உறுதி படுத்தும் வகையில் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும்.

    திசையன்விளை:

    ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாகமுகவர்கள் ஆலோ சனை கூட்டம் திசையன் விளை வி.எஸ்.ஆர். மாலில் அமைந்துள்ள கெட்டி மேளம் மகாலில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக் குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரு மான சுரேஷ் மனோகரன் கலந்து கொண்டு பாகமுக வர்களுக்கு ஆலோசனை களை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பேசுகை யில், வருகிற பாராளு மன்ற தேர்தலில் தலைமை கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதே பாகமுகவர்களின் முக்கிய நோக்கமாக கருத்தில் கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.

    தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி தி.மு.க. வெற்றி பெற பணி களை மேற்கோள்வதோடு நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பதை உறுதி படுத்தும் வகை யில் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி மார்த்தாண்டம், அமைச்சியார, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜான்சன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட பொறியா ளர் அணி துணை அமைப்பா ளர் கோகுல், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமை ப்பாளர் நெல்சன், நவ்வலடி சரவணகுமார், மாவட்ட பிரதிநிதிகள் ராஜன், வேலப்பன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, அல்போன்ஸ், அந்தோணி, முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் பால்ராஜ், சொக்கலிங்கம், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங் கிணைப்பாளர் எஸ்தாக் கேனிஸ்டன், செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர் பாண்டியன், பொற்கிழி நடராஜன், திராவிடமணி, ஜோசப், மாவட்ட நெசவா ளர் அணி துணை அமைப் பாளர் ஞானராஜ், ஹேர்மஸ், சார்லஸ், ரமேஷ், காந்தி, முத்து, எழில் ஜோசப், புளியடி குமார், முத்து, ராஜா, சாகுல் ஹமீது, முத்தையா, வடிவேல், பாகா முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • விபத்தில் ஆட்டோவின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.
    • சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 35). இவர் நேற்று முன்தினம் வேறு ஒரு நபரிடம் இருந்து லோடு ஆட்டோ ஒன்றை விலைக்கு வாங்கினார்.

    அந்த ஆட்டோவில் இருந்த சிறு சிறு பழுதுகளை சரி செய்வதற்காக நேற்று அவர் ஆட்டோவை நெல்லைக்கு ஓட்டி வந்தார். அப்போது அவர் அதே ஊரை சேர்ந்த வேலுமயில்(46) என்பவரையும் உடன் அழைத்து வந்தார். ஒர்க்ஷாப்பில் வேலைகள் முடிய இரவு 10 மணி ஆகிவிட்டது.

    அதன்பின்னர் அவர்கள் 2 பேரும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு நெல்லையில் இருந்து வெள்ளூருக்கு இரவில் புறப்பட்டு சென்றனர். ஆட்டோவை ராமச்சந்திரன் ஓட்டிச்சென்றார். நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரத்தை அடுத்த ஆச்சிமடம் அருகே குளத்துகரை அருகே அவர்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த வேன் எதிர்பாராத விதமாக ராமச்சந்திரன் ஓட்டி வந்த ஆட்டோவின் மீது நேருக்கு நேராக மோதியது.

    இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த இடிபாட்டில் சிக்கி ராமச்சந்திரனும், வேல்மயிலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். இடிபாட்டியில் சிக்கியிருந்த 2 பேரையும் போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்த சில மணி நேரங்களில் வேல்மயிலும் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த மானூர் அருகே பள்ளமடையை சேர்ந்த டிரைவர் அண்ணாவி முத்துவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயகிருஷ்ணனின் பழக்க வழக்கங்கள் பிடிக்காததால் மாணவி அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.
    • மாணவியின் பெற்றோர் ஜெயகிருஷ்ணனின் பெற்றோரிடம் கூறி கண்டித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 22).

    இவர் நெல்லையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த நிலையில், மேற்கொண்டு படிப்பை தொடராமல் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று வந்தார்.

    இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி திரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஜெயகிருஷ்ணனின் பழக்க வழக்கங்கள் பிடிக்காததால் அந்த மாணவி அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் தன்னுடன் பேசுமாறு ஜெயகிருஷ்ணன் அந்த பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார்.

    அதற்கு அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த ஜெயகிருஷ்ணன் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் ஜெயகிருஷ்ணனின் பெற்றோரிடம் கூறி கண்டித்துள்ளனர். அதற்கு அந்த வாலிபரின் பெற்றோரான வெற்றிவேல், கவிதா ஆகியோர் சேர்ந்து இளம்பெண்ணின் பெற்றோரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக கூடங்குளம் போலீசில் அளித்த புகாரின் பேரில் ஜெயகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜெயகிருஷ்ணனின் பெற்றோர் வெற்றிவேல்-கவிதா மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இடையன்குடி அருகே உள்ள தேரி பகுதியில் சென்றபோது அங்கு சாலையில் மின்வயர் ஒன்று அறுந்து கிடந்தது.
    • உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியை சேர்ந்தவர் பால் (வயது60). விவசாயி. இவரது பேரன் இசக்கிமுத்து.

    இந்நிலையில் இன்று காலை பால் தனது பேரன் இசக்கிமுத்துவுடன் உவரி அருகே உள்ள தோட்டத்திற்கு மாட்டு வண்டியில் சென்றனர். அவர்கள் இடையன்குடி அருகே உள்ள தேரி பகுதியில் சென்றபோது அங்கு சாலையில் மின்வயர் ஒன்று அறுந்து கிடந்தது. அதில் மாடுகள் சிக்கியதால் அதன் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதனால் 2 மாடுகளும் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பால் மற்றும் இசக்கிமுத்துவிற்கு காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்ததும் உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராணுவ வீரர் மணிகண்டனை கைது செய்தனர்.
    • போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராணுவ வீரர் மணிகண்டனை கைது செய்தனர்.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூரை அடுத்த கரிசல்குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30).

    இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. தற்போது சிவரஞ்சனி 2-வது கர்ப்பமாக உள்ளார். மணிகண்டன் காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் சிவரஞ்சனி தனது பெற்றோர் வீடான சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலான்குளத்தில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த மணிகண்டன் நேற்று தனது மனைவி வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது அவர் கர்ப்பிணியான சிவரஞ்சனி இடம் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து உதைத்ததோடு வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளார். இது குறித்து சிவரஞ்சனி சின்னக்கோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராணுவ வீரர் மணிகண்டனை கைது செய்தனர்.

    • தசரா விழாவின் தொடக்கமாக பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அடுத்த 9 நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்திலும் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், அம்மன் கொலுவில் வீற்றிருக்கும் வைபவமும் நடக்கிறது.

    நெல்லை:

    குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும் தசரா திருவிழாவுக்கு அடுத்ததாக நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் 12 சப்பரங்களுடன் சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு தசரா விழாவின் தொடக்க மாக பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை யொட்டி கோவில் வளா கத்தில் உள்ள கொடி மரத்தில் அம்பாள் உருவம் இடம் பெற்றிருந்த கொடி க்கு அபிஷேகங்கள் நடை பெற்றது. பின்னா் வேத கோஷ ங்கள் முழங்க பூசா ரிகள் கொடியை ஏற்றினர்.

    முன்னதாக பாளையில் அமைந்துள்ள அம்மன் கோவில்கள் வழியாக 8 ரதவீதிகளிலும் கொடிப்பட்டம் வீதி உலாவாக யானை சப்பரத்தின் மீது எடுத்து வரப்பட்டது. தசரா திருவிழாவை முன்னிட்டு அம்பாள் கோவில்களில் விரதம் இருந்து வரும் பக்தா்கள் மாலை அணிந்து காப்பு கட்டினா். ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) முதல் பாளையில் அமைந்துள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தா ரம்மன், வடக்கு முத்தா ரம்மன், யாதவ உச்சி மாகாளி, விசுவகர்ம உச்சி மாகாளி, வடக்கு உச்சி மாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சி மாகாளி அம்மன், புதுப் பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உல கம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா விழா துர்கா பூஜையுடன் தொடங்குகிறது.

    அடுத்த 9 நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்திலும் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், அம்மன் கொலுவில் வீற்றிருக்கும் வைபவமும் நடக்கிறது. வருகிற விஜய தசமி அன்று 12 சப்பர ங்களில் அம்பாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொ டா்ந்து சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நடை பெறுகிறது.

    ×