search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. தொடக்க விழாவை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்-நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வேண்டுகோள்
    X

    தச்சை கணேசராஜா

    அ.தி.மு.க. தொடக்க விழாவை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்-நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வேண்டுகோள்

    • அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்.ஜி.ஆர். சிலை, ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • தொடக்க விழாவையொட்டி அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என அறிக்கையில் தச்சை கணேசராஜா கூறியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில், வண்ணார்பேட்டை கொக்கிர குளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கும், அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெய லலிதா உருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இந்நிகழ்ச்சிகளில் தலைமைக் கழக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தொடக்க விழாவையொட்டி அவரவர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றியும், அலங்கரித்து வைக்கப்பட்ட தலைவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×