களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை விழா

விழாவையொட்டி வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி, தேவியர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. திருவீதி உலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை விழா
Published on

களக்காடு:

களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கருட சேவை விழா நடந்தது. இதையொட்டி மதியம் வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி, தேவியர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகள் தனித் தனி கருட வாகனங்களில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரரான களக்காடு போலீசார் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com