நெல்லையில் இளம்பெண் மாயம்

சந்தியா நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இரவு வெகு நேரமாகியும் சந்தியா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
நெல்லையில் இளம்பெண் மாயம்
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த தச்சநல்லூர் பழைய போஸ்ட் ஆபீஸ் மேல தெருவை சேர்ந்தவர் சேதுராமலிங்கம். இவரது மனைவி அம்பிகாபதி. இவர்களுக்கு சந்தியா(வயது 22) என்ற மகள் உள்ளார்.

இவர் இளங்கலை பட்டப் படிப்பு முடித்துவிட்டு நெல்லை புதிய பஸ் நிலை யம் அருகே உள்ள ஒரு தனி யார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இத னால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தச்ச நல்லூர் போலீசில் புகார் அளித்த னர். அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து சந்தியா எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com