என் மலர்
நீங்கள் தேடியது "Ayrathamman Temple"
- தசரா விழாவின் தொடக்கமாக பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அடுத்த 9 நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்திலும் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், அம்மன் கொலுவில் வீற்றிருக்கும் வைபவமும் நடக்கிறது.
நெல்லை:
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும் தசரா திருவிழாவுக்கு அடுத்ததாக நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் 12 சப்பரங்களுடன் சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தசரா விழாவின் தொடக்க மாக பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை யொட்டி கோவில் வளா கத்தில் உள்ள கொடி மரத்தில் அம்பாள் உருவம் இடம் பெற்றிருந்த கொடி க்கு அபிஷேகங்கள் நடை பெற்றது. பின்னா் வேத கோஷ ங்கள் முழங்க பூசா ரிகள் கொடியை ஏற்றினர்.
முன்னதாக பாளையில் அமைந்துள்ள அம்மன் கோவில்கள் வழியாக 8 ரதவீதிகளிலும் கொடிப்பட்டம் வீதி உலாவாக யானை சப்பரத்தின் மீது எடுத்து வரப்பட்டது. தசரா திருவிழாவை முன்னிட்டு அம்பாள் கோவில்களில் விரதம் இருந்து வரும் பக்தா்கள் மாலை அணிந்து காப்பு கட்டினா். ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாளை (ஞாயிற்றுக் கிழமை) முதல் பாளையில் அமைந்துள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தா ரம்மன், வடக்கு முத்தா ரம்மன், யாதவ உச்சி மாகாளி, விசுவகர்ம உச்சி மாகாளி, வடக்கு உச்சி மாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சி மாகாளி அம்மன், புதுப் பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உல கம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா விழா துர்கா பூஜையுடன் தொடங்குகிறது.
அடுத்த 9 நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்திலும் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், அம்மன் கொலுவில் வீற்றிருக்கும் வைபவமும் நடக்கிறது. வருகிற விஜய தசமி அன்று 12 சப்பர ங்களில் அம்பாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொ டா்ந்து சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நடை பெறுகிறது.






