search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varadharaja perumal Temple"

    • விழாவையொட்டி வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி, தேவியர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
    • திருவீதி உலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    களக்காடு:

    களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கருட சேவை விழா நடந்தது. இதையொட்டி மதியம் வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி, தேவியர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகள் தனித் தனி கருட வாகனங்களில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரரான களக்காடு போலீசார் செய்திருந்தனர்.

    • முதலைக்கோ நீரில் இருந்தால் பலம் அதிகம்.
    • யானையின் அபயக் குரலைக் கேட்டதும் திருமால் ஓடி வந்தார்.

    திருமாலுக்கு மலர்கள் சமர்ப்பிப்பதைத் திருத்தொண்டாகக் கொண்டிருந்தது கஜேந்திரன் என்ற யானை. அந்த யானை ஓர் நாள் திருமாலுக்காக குளத்தில் இறங்கி, தாமரை மலர்களை பறித்தது.

    அப்போது அதன் காலை ஓர் முதலை கவ்விப் பிடித்து கொண்டது. அதன்பிடியில் இருந்து தப்பிக்க யானை செய்த கடும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

    முதலைக்கோ நீரில் இருந்தால் பலம் அதிகம். இந்த யானையின் வேதனையைப் புரிந்து கொண்ட மற்ற யானைகளும் கஜேந்திரனை காக்க முடியாமல் குளத்தின் கரையில் கூடி, கதறிப் பிளிறியபடி இருந்தன. கஜேந்திரன் தன் நிலையை உணர்ந்து தன்னைக் காப்பாற்றக் கூடியவர் திருமாலே என்று அறிந்து கொண்டது. உடனே ஆதிமூலமே என்று கூவி அழைத்தது.

    யானையின் அபயக் குரலைக் கேட்டதும் திருமால் ஓடி வந்தார். கருடனை கூட அழைக்காமல் மின்னல் வேகத்தில் புறப்பட்ட அவர் தான், போய் சேர்வதற்குள் கஜேந்திர யானைக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், சக்ராயுதத்தை ஏவி விட்டார். அந்த சக்ராயுதம் முதலை தலையை அறுத்தது. இதனால் யானை தப்பியது.

    இப்படி யானைக்கு மின்னல் வேகத்தில் அருளிய ஆதிமூலத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அனைத்து திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்சம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் கருட சேவையில் காட்சி அளிக்கிறார்.

    • கொடிமரத்திற்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
    • சுவாமி வரதராஜ பெருமாளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வைணவ தலங் களில் ஒன்றான நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றம்

    முன்னதாக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சிறப்பு யாக வேள்விகளும், அதனைத் தொடர்ந்து திக்பந்தனமும் நடைபெற்றது. பின்னர் கோவிலில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்று கொடி மரத்திற்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் கோவில் மகா மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி வரதராஜ பெருமாளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை, மாலை 2 வேளைகளிலும் சுவாமி சிறப்பான அலங்காரத்தில் திருவீதி உலாவும், மகாதீபாராதனையும் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    இன்று கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழா வின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.

    ×