என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சந்திப்பு வரதராஜபெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவம்-கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ கொடியேற்று விழாவை தொடர்ந்து கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டதையும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருப்பதையும் படத்தில் காணலாம்.

    நெல்லை சந்திப்பு வரதராஜபெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவம்-கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • கொடிமரத்திற்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
    • சுவாமி வரதராஜ பெருமாளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வைணவ தலங் களில் ஒன்றான நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றம்

    முன்னதாக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சிறப்பு யாக வேள்விகளும், அதனைத் தொடர்ந்து திக்பந்தனமும் நடைபெற்றது. பின்னர் கோவிலில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்று கொடி மரத்திற்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் கோவில் மகா மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி வரதராஜ பெருமாளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை, மாலை 2 வேளைகளிலும் சுவாமி சிறப்பான அலங்காரத்தில் திருவீதி உலாவும், மகாதீபாராதனையும் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    இன்று கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழா வின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.

    Next Story
    ×