என் மலர்
வழிபாடு

கவுதம முனிவரின் சாபமும் மோட்சமும்
- வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்த சரஸ்வதிக்குளம் பொற்றாமரை திருக்குளம் என 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன.
- அத்தி வரதர் 10 அடி உயரமும் நான்கு 4 அகலமும் கொண்டவர் முழுவதும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர்.
வரதராஜ பெருமாள் கோவில் சிறப்புகள்
வரதராஜர்
பிரம்மா தன்னுடைய மனம் தூய்மை பெறுவதற்காக காஞ்சிபுரம் சென்றார். அப்போது அவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டுவிட்டு மற்ற மனைவிகளான சாவித்திரி, காயத்ரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தை செய்தார். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி யாகத்தை அழிப்பதற்காக வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து பாய்ந்தோடி வந்தால் இதையடுத்து பிரம்மதேவன் மகாவிஷ்ணுவான பெருமாளிடம் வேண்டினார். வெள்ளப்பெருக்கு வரும் வழியில் மகாவிஷ்ணுவான பெருமாள் சயனித்து படுத்து கிடந்தார். இதனால் அவரை தாண்டி ஆற்று நீர் செல்ல முடியவில்லை எப்படி பிரம்மன் வேண்டியதும் வரம் தந்தவர் என்பதால் இந்த கோவில் பெருமாள் வரதராஜர் என பெயர் பெற்று உள்ளார்.
அனந்தசரஸ் திருக்குளம்
வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்த சரஸ்வதிக்குளம் பொற்றாமரை திருக்குளம் என 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. மேற்கு ராஜகோபுரத்தில் வடகிழக்கிலும் நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கேயும் அனந்த சரஸ்வதி குளம் இருக்கிறது. இந்த குளத்தில் விமானத்துடன் கூடிய 4 கால் நீராடி மண்டபத்தின் அடியில் தான் அத்திவரதர் சயன கோலத்தில் அருள் பாலிக்கிறார் அத்தி வரதர் 10 அடி உயரமும் நான்கு 4 அகலமும் கொண்டவர் முழுவதும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர். இவர் திருக்குளத்தின் உள்ளே இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வெளியே வந்து கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 30 நாட்கள் சயன கோலத்திலும் 18 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளிப்பார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த அற்புதமான நிகழ்வு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது
தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி
சிருங்கி பேரார் என்ற முனிவரின் இரண்டு மகன்கள் கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். ஒருமுறை பூஜைக்கு அவர்கள் இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதம முனிவர் அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். பிறகு சீடர்களை காஞ்சிபுரம் சென்று வழிபட்டால் மோட்சம் உண்டு என்று கூறினார். இதையடுத்து இருவரும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
இறைவன் உங்கள் ஆன்மா வைகுண்டம் செல்லும் அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்சலோகங்களால் எனக்கு பின்புறம் இருக்கட்டும் என அருள்பாளித்தார். மேலும் தன்னை தரிசிக்க வருபவர்கள் உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்க பெறுவார்கள் என அருளினார். அதன்படி இந்த கோவிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லிகளை பக்தர்கள் வணங்கி செல்கின்றனர்.






