என் மலர்
திருநெல்வேலி
- நிகழ்ச்சியில் விபத்து தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
- மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது.
நெல்லை:
நாடு முழுவதும் இன்று உலக விபத்து தடுப்பு தினத்தையொட்டி நெல்லை அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை நெல்லை மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் மருத்துவ கல்லூரி செவிலியர் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே ஊர்வலமாக சென்றனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விபத்து தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. பின்னர் செவிலியர், மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது.
தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் முகமது ரபி, டாக்டர் அமலன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி மற்றும் பலர் உள்ளனர்.
- முகாமில் சேரன்மகா தேவி சப்-கலெக்டர், தனித்துணை கலெக்டர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும்.
- முகாம் முடிந்த உடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
நெல்லை:
சேரன்மகாதேவி வட்டம் திருவிருத்தான்புள்ளி ஊராட்சிப் பகுதியில் மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்னோடியாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 1 திருவிருத்தான்புள்ளி பகுதி-2 கிராமம், கங்கனாங்குளம் அரசு திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மனுக்கள் பெறப்பட உள்ளன.
இந்த முகாமில் சேரன்மகா தேவி சப்-கலெக்டர், தனித்துணை கலெக்டர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகிேயார் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும். முகாம் முடிந்த உடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
எனவே ஆய்வுக் குழுவிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
- பிரதீபா ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கு பிரதீபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் நெல்லை புறநகர் மாவட்டம் மூலக்கரைப்பட்டி பேரூர் அ.தி.மு.க. நகர துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இவரது மகள் பிரதீபா (வயது 13). இவர் நெல்லை ஜவகர் நகரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந்தேதி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடந்த இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்த உள்ள தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கான தமிழக மாநில அளவிலான தெரிவு போட்டியில் பங்கேற்றார்.
அதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பிரதீபா, தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவி பிரதீபா, நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவியின் தந்தை காளிமுத்து உடன் இருந்தார்.
- மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
- மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.25 அடியாக உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. அணை பகுதிகளிலும் மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நெல்லை
நெல்லையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அங்கு 8 மில்லிமீட்டர் மழை பெய்தது.
சேர்வலாறு அணை பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 697 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.43 அடியாக உள்ளது. அணை பகுதிகளில் மழையால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.25 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 98 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இங்கு 1.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 44.75 அடியாகவும், நம்பியாறு அணை 12.49 அடியாகவும் நீடிக்கிறது.
மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி, கன்னடியன், நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 1.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட்டுகளிலும் பரவலாக மழை பெய்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சிவகரி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சங்கரன்கோவிலில் அதிகபட்சமாக 24 மில்லிமீட்டர் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. சிவகிரியில் 6 மில்லிமீட்டரும், தென்காசி யில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அணைகளை பொறுத்த வரை கடனா நதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில், அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மாஞ்சோலை
இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை மாவட்டம் முழுவதிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் பெய்து வரும் மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் அதிகபட்சமாக 33 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காக்காச்சி, நாலுமுக்கு பகுதி களில் தலா 30 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசத்தில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. சில நாட்களாக அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. அணையில் தற்போது 88.45 அடி நீர் இருப்பு உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணைக்கு வினாடிக்கு 1,127 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1304 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- சங்க ஆயுள்கால உறுப்பினர்கள், சமுதாய வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினர்.
- கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை தட்சண மாற நாடார் சங்கத்தின் 58-வது மகாசபை கூட்டம் தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியில் உள்ள டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனார் கூட்ட அரங்கில் சங்கத் தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை யில் நடைபெற்றது. சங்க மூத்த நிர்வாகசபை இயக்குநர் பி.எஸ். கனிராஜ் நாடார் வரவேற்றார்.
58-வது மகாசபை கூட்டம்
58-வது மகாசபை கூட்டத்தின் ஆண்டறிக்கையை சங்கச் செயலாளர் டி.ராஜகுமார் நாடார் வாசித்தார். ஆண்டறிக்கையில் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் கல்வி ஸ்தாபனங்களின் வளர்ச்சி பணிகள் 2022 - 2023-ம் வருடத்தில் சங்கம் நிகழ்த்திய சாதனை விபரங்கள் மற்றும் சங்கத்தின் செயல்பாடு கள் குறித்து விபரங்கள் வாசித்து சமர்ப்பித்தனர்.
அதைத்தொடர்ந்து 2022-2023-ம் வருடத்திற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்குகளை சங்கப் பொருளாளர் ஏ. செல்வராஜ் நாடார் வாசித்து விளக்கம் அளித்தார். பின்னர் கூட்டத்தில் மகாசபை கூட்ட ஆய்வுக்கான பொருட்கள் ஆய்வுக்கு விடப்பட்டு மகாசபை உறுப்பினர்களின் ஒருமனதான ஆதரவுடன் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
சங்க ஆயுள்கால உறுப்பினர்கள், சமுதாய வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினர். புங்கம்பட்டியை சேர்ந்த மாடசாமி என்ற ஆயுள்கால உறுப்பினர் போலீஸ் நிலையங்களில் நாடார் சமுதாய இளைஞர்கள் மீது எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அதிக அளவில் வழக்குப்பதிவு செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு சங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
2 ஆயிரம் பேர் பங்கேற்பு
கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்த தூத்துக்குடியை சேர்ந்த மாணவிக்கு கல்லூயில் 3 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமான கல்லூரி மற்றும் பேராசிரி யர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் அரசை கேட்டு க்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் காரியக்கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், சப்-கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் மும்பை கிளைச்சங்க சேர்மன் எம்.எஸ். காசிலிங்கம் நாடார், செயலாளர் டபிள்யூ. மைக்கிள் ஜார்ஜ் நாடார், சென்னை கிளை செயலாளர் எஸ். ராஜேந்திரன் நாடார், பொருளாளர் எம். ஜெகதீசன் நாடார் மற்றும் சங்க ஆயுள் கால உறுப்பினர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
முடிவில் நெல்லை தட்சண மாற நாடார் சங்க துணைச் செயலாளர் வி.பி. ராமநாதன் நாடார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை காரியக்கமிட்டி உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் நாடார் தொகுத்து வழங்கினார்.
- சுப்பையாவுக்கும், முத்துக்குட்டிக்கும் இடப் பிரச்சினை இருந்து வருகிறது.
- முத்துக்குட்டி, அவரது 16 வயது மகன் ஆகியோர் சேர்ந்து சுப்பையாவை தாக்கினர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழதுவரைகுளம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது36). விவசாயி. இவருக்கும் மீனவன் குளத்தை சேர்ந்த முத்துக் குட்டிக்கும் (40) இடப் பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத் தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முத்துக் குட்டி, அவரது 16 வயது மகன் ஆகியோர் சேர்ந்து சுப்பை யாவை தாக்கினர். இதனால் காயமடைந்த சுப்பையா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துக்குட்டியையும், அவரது மகனையும் தேடி வருகின்றனர்.
- அகஸ்தியர்புரம், ராமலிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
விக்கிரமசிங்கபுரத்தில் தெற்கு அகஸ்தியர்புரம், பசுக்கிடைவிளை வடக்கு தெரு, ராமலிங்கபுரம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அ.தி.மு.க.வினர் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன், பேச்சாளர் மீனாட்சி சுந்தரம், அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், கவுன்சிலர்கள் கிறாஸ் இமாக்குலேட், அம்பை மாரிமுத்து, மணிமுத்தாறு நகரச் செயலாளர் ராமையா, நகர இணைச் செயலாளர் மரிய சாந்தா ரோஸ், சிங்கை அருண், அரிச்சந்திரன், அருண் தபசு, வக்கீல்கள் செல்வ ஆண்டணி, ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவந்திபட்டி கிராமம் அம்பேத்கர் தெரு ஆதி திராவிடர் பறையர் குடியிருப்பில் மழை நீர் வடிகால் மற்றும் கழிவுநீர் செல்ல ஓடை கட்டப்படும் பணியை சிலர் தடுக்கின்றனர்.
- எனவே பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் ஓடையை முழுமை யாக கட்டி தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
ஓைட கட்டும் பணி
பாளை தாலுகா சிவந்தி பட்டி அம்பேத்கர் தெரு பொதுமக்கள் ஊர் தலைவர் தலைமையில் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
சிவந்திபட்டி கிராமம் அம்பேத்கர் தெரு ஆதி திராவிடர் பறையர் குடியிரு ப்பில் மழை நீர் வடிகால் மற்றும் கழிவுநீர் செல்ல ஓடை கட்டப்படும் பணியை சிலர் தடுக்கின்றனர்.
சமீபத்தில் இங்கு ஓடை கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டு சுமார் 200 அடி நீளம் கட்டப்பட்டுள்ளது. அந்த பணியும் தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இதனால் எங்களது குடியிருப்பில் இருந்து வெளி யேறும் மழை நீர், கழிவு நீர் உள்ளிட்டவை வெளியேறு வதற்கு வழி இல்லாமல் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் இருந்து வருகிறது. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் ஓடையை முழுமை யாக கட்டி தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
குவாரி உரிமம்
சங்கர் நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட தாதனூத்து 2-வது வார்டு பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தாதனூத்து கிராமத்தில் 350- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு குவாரி உரிமம் பெற்ற ஒருவர் அரசு விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக வெடிமருந்து பயன்படுத்தி அதிக ஒலி சத்தத்துடன் வெடி போடுகின்றனர்.
தாதனூத்து ஊரின் விவசாய நிலம் அருகே 500 மீட்டர் தொலைவில் புதிதாக ஒரு குவாரி உரிமம் பெற்று செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கிராமத்தை சுற்றி 3 கிலோமீட்டர் அளவுக்கு புதிதாக எந்த குவாரிக்கும் உரிமம் வழங்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.
தீபாவளி போனஸ்
தமிழ்நாடு எச்.எம்.எஸ். கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் பேர வை மாவட்ட நல வாரிய கண்காணிப்பு குழு உறுப்பினர் பாக்கி யம் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எச்.எம்.எஸ். கட்டு மானம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு தனி தனி வாரியமாக 18 நல வாரியங்கள் அமைக்கப்பட்டு அதில் தொழிலாளர்கள் பதிவு செய்திட தொடங்கி தற்போது 40 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7000 வழங்க வேண்டும். வீடு கட்டுவதற்கு எளிய முறையில் மானியம் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.
தாசில்தார் மீது புகார்
மாவீரன் சுந்தர லிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மானூர் வட்டம், மானூர் யூனியன் ஆகியவற்றின் அலுவலகத்தின் கட்டி டங்கள் எல்லாம் மானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து வருகிறது. மானூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 43 ஊராட்சிகளும், 80-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன.
இங்கு வசிக்கும் மக்கள் அரசின் சலுகைகள் உட்பட அனைத்தையும் பெறுவதற்கு மானூர் ஊராட்சி பகுதிக்கு தான் வரவேண்டிய நிலை இருக்கிறது.மானூரில் பொது கட்டிடங்கள் அமைக்க இடம் கேட்கும் போது யூனியன் அதிகாரிகள் இங்கு பொதுவான இடம் இல்லை என்று கூறி சான்று வழங்கி வருகின்றனர். இதனால் இப்பகுதிக்கு கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்ட தீயணைப்பு நிலையம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவை கட்ட முடியாத நிலை இருக்கிறது.
எனவே இது தொடர்பாக பட்டா குறைதீர்க்கும் முகாமில் சிலுவை முத்து என்பவர் கேள்வி எழுப்பிய போது மானூர் தாசில்தார் முருகன் அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. எனவே யூனியன் அதிகாரிகள் மீதும் தாசில்தார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
காங்கிரஸ் மனு
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தலைமையில் நெல்லை மாவட்ட தேசிய தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அம்பை தாலுகா மணிமுத்தாறு பேரூராட்சி க்குட்பட்ட மணிமுத்தாறு அருவியின் மேல் தலையணை யிலிருந்து மாஞ்சோலை, நாலு முக்கு, ஊத்து வரை தார் சாலை மிகவும் மோசமாகவும், பயணிப்பவருக்கு ஆபத்தான நிலையிலும் உள்ளது.
பேரூராட்சியின் எஸ்டேட் பகுதியில் 5 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2000 தோட்ட தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். இந்த சாலை மோசமாக இருப்பதால் முதியோர், கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
நெல்லை மாவட்ட இளைஞர் மற்றும் பெண்க ளுக்கு போதிய வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்க ப்பட்ட கங்கை கொண்டான் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலங்களை நல்ல முறையில் செயல்படுத்தி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் விடுதலை களம் மத்திய மாவட்ட செயலாளர் வண்ணை முருகன் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
- கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்குதல், பராமரித்தல் விழா நடைபெற்றது.
- கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கினார்.
நெல்லை:
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல், பராமரித்தல் விழா நடைபெற்றது. கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கினார்.
கிராம உதயம் ஆலோ சனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்று பேசினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் செந்தில்குமார், பாலசுப்ரமணியம், ஆறுமுகத்தாய், குமாரி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கிராம உதயம் தனி அலுவலர் மீனாட்சி நன்றி கூறினார்.
- சிதம்பரத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த ராமையா என்ற ராஜுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
- துக்கம் விசாரிப்பதற்காக சிதம்பரம், ராமையாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது ராமையா, சிதம்பரத்தை அவதூறாக பேசி தாக்கினார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு, பிள்ளையார் கோவில் மேலத்தெருவை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது52), விவசாயி.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமையா என்ற ராஜுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலை யில் ராமையாவின் தந்தை சங்கரலிங்கம் இறந்து விட்டார்.
இதையடுத்து துக்கம் விசாரிப்பதற்காக சிதம்பரம், ராமையாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது ராமையா, சிதம்பரத்தை அவதூறாக பேசி தாக்கி னார்.
மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதா கவும் மிரட்டினார். இதுபற்றி அவர் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராமையாவை தேடி வரு கின்றனர்.
- 11 அம்மன் கோவில்களிலும் தசரா விழா.
- கோவில் சப்பரங்கள் வீதி உலா.
நெல்லை பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நேற்று முன்தினம் ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோல் 11 அம்மன் கோவில்களிலும் தசரா விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் இரவு 11 கோவில்களில் இருந்து சப்பரங்களில் அம்மன் எழுந்தருளினார்கள். ஆயிரத்தம்மன், முத்தாரம்மன், உலகம்மன், தூத்துவாரி அம்மன், உச்சினி மாகாளி அம்மன் உள்பட 11 அம்மன் கோவில் சப்பரங்கள் வீதி உலா நள்ளிரவில் தொடங்கியது.
நேற்று காலை பாளையங்கோட்டை ராமர் கோவில் மற்றும் ராஜகோபால சுவாமி கோவில்கள் முன்பு பக்தர்கள் தரிசனத்துக்காக ஒரே நேரத்தில் அனைத்து சப்பரங்களும் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கு பக்தர்கள் வரிசையாக வந்து வழிபட்டனர்.
இதை தொடர்ந்து நவராத்திரி விழாவில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நேற்று தொடங்கியது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் கொலு இருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) இரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை எருமைக்கடா மைதானத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.






