என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ராதாபுரம் உட்கோட்டம் இனைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் வரவேற்புரையாற்றினார்.

    வள்ளியூர்:

    நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ராதாபுரம் உட்கோட்டம் இனைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ். வரவேற்புரை யாற்றினார். முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்நது நெல்லை உதவி கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு அலகு) சசிகலா சாலை விழிப்புணர்வு பற்றியும், சாலை விபத்தை தடுப்பது மற்றும் சாலை விதிகள் பற்றியும் மிகவும் தெளிவாக எடுத்து கூறினார். நிறைவாக நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, நன்றியுரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சேகர், வள்ளியூர் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் முத்து முருகன், நெல்லை சாலைப் பாதுகாப்பு அலகு உதவிப் பொறியாளர் லட்சுமி பிரியா, நெல்லை சாலைப் பாதுகாப்பு அலகு உதவிப் பொறியாளர் செல்வன், வள்ளியூர் கோட்ட சாலை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 280-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்வை கல்லூரி அகத் தர மதீப்பட்டு குழு ஒருங்கிணைப்பாளர், நாட்டு நலப்பணி திட்ட அணி எண். 35 , 37 மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • களக்காடு, சேரன்மகாதேவி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
    • தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியத்திற்கு பிறகு பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அம்பை, மூலக்கரைப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது.

    அம்பை ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் கொட்டும் மழையில் நனைந்தவாறு சோப்பு போட்டு குளித்து கொண்டிருந்தார். இதனை அப்பகுதியில் நின்றவர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    களக்காடு, சேரன்மகாதேவி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பையில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மூலக்கரைப்பட்டியில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாநகரில் பாளையில் 2 மில்லிமீட்டர் மழை கொட்டியது. மாநகர பகுதியில் லேசான மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசத்தில் பலத்த மழை பெய்தது. அங்கு 58 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சேர்வலாறில் 23 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 22.8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணைகளுக்கு வினாடிக்கு 975 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையில் 45.35 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணைக்கு 20 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. வடக்கு பச்சையாறு அணை 50 அடி கொள்ளளவு கொண்ட நிலையில், அந்த அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் 6.75 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 10 செ.மீட்டர் மழை பெய்துஉள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அதனை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக செங்கோட்டை, ஆய்குடியில் மணிக்கணக்கில் மழை கொட்டியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 62 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. ஒரு சில கிராமங்களில் இடி-மின்னலுடன் பெய்த கனமழையால் வீடுகளில் டி.வி, இன்வெட்டர்கள், பிரிட்ஜ்கள் சேதம் அடைந்தன. மேலும் இடி-மின்னலால் மின்தடை ஏற்பட்டது. இரவிலும் ஒரு சில கிராமங்களில் நீடித்த மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 40 மில்லிமீட்டர் மழை கொட்டியது. குண்டாறு அணையில் 22 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, மணியாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததது. அதிகபட்சமாக கயத்தாறில் 30.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. விளாத்திகுளம், எட்டயபுரம், கீழ அரசடி, வேடநத்தம், சூரன்குடியிலும் பலத்த மழை பெய்தது. சாத்தான்குளத்தில் 7.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    • சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
    • நிர்வாகிகளின் வரவேற்பை பெற்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி சங்கரன்கோவில் சென்றார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

    இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லை வழியாக சங்கரன்கோ விலுக்கு செல்கிறார்.

    நெல்லையில் பாளை கே.டி.சி. நகர் மேம்பாலம் பகுதியில் வைத்து நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    இதற்காக அப்பகுதியில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து, சால்வைகள் கொடுத்து வரவேற்றனர்.

    தொடர்ந்து நிர்வாகிகளின் வரவேற்பை பெற்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி சங்கரன்கோவில் சென்றார். அங்கு நிர்வாகிகளின் வரவேற்புக்கு பின்னர் தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன்பின் மாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டம் முடிந்த பின்னர் இரவில் காரில் புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரிக்கு செல்கி றார். பின்னர் காரில் சேலம் செல்கிறார்.முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் கள் கருப்பசாமி பாண்டியன், ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம்,

    மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி ஆவரைகுளம் பால்துரை, மாவட்ட மகளிரணி செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, திசையன்விளை நகர செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், மூலக்கரைப்பட்டி நகர துணை செயலாளர் எடுப்பல் காளி முத்து, டவுன் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், ஒன்றிய செயலாளர் முத்துக்கு ட்டி பாண்டியன், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், கவுன்சிலர்கள் சந்திரசேகர், முத்துலெட்சுமி, நெல்லை ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிமுகமது சேட், வக்கீல் ஜெயபாலன், தச்சை பழனிசங்கர், வட்ட செயலாளர் பாறையடி மணி, மேற்கு பகுதி பொருளாளர் காளிமுருகன், இளைஞரணி விஷ்வகணேஷ் மற்றும் திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கியது.
    • பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கியது. பேரணியை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், குடிநீர் வழங்கல் துறை நிர்வாக பொறியாளர் ராமலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு "பருகுவோம், பருகுவோம் தூய்மையான நீரை பருகுவோம், காப்போம் காப்போம் குடிநீரின் தரத்தை காப்போம், தேக்குவீர் மழைநீர் பாதுகாப்பீர் குடிநீர், முயல்வோம் முயல்வோம் நீரின் தரம் உயார்ந்த முயல்வோம், அறிவோம், ஆய்வோம் குடிநீரின் தரத்தை அறிவோம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பள்ளி மாணவ, மாணவிகள் வ.உ.சி மைதானத்தில் தொடங்கி பாளை பஸ் நிலையம், தூய சவேரியார் கல்லூரி வழியாக தூய யோவான் பள்ளி வரை சென்றனர்.

    மேலும் பேரணியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னனு வாகனத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகளை குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டது. தொடர்ந்து, இவ்வாகனம் மூலம் முக்கிய இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகளை குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் சின்னராசு, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், உதவி நிர்வாக பொறியாளர்கள் மயில்வா கனம், ராமசாமி, டேனியஸ் மற்றும் மாணவ, மாணவிகள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • பூத் வாரியாக பூத் கமிட்டி ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்டம் மானூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சீதபற்பநல்லூர், வெள்ளாளங்குளம், வல்லவன் கோட்டை ஊராட்சிகளுக்கு உட்பட்ட பூத் எண்கள் 140,141,142,138,116,117 ஆகியவற்றிற்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த பூத் வாரியாக பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    இதில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மேற்பார்வையிட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள், ஓட்டுனரணி செய லாளர் சிவந்தி ராஜேந்திரன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீபுரம் தபால் நிலையம் அருகே சாலையின் நடுவில் இரும்பு பேரிகார்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
    • சம்பந்தமில்லாமல் இருக்கும் இந்த பேரிகார்டால் விபத்து ஏற்படும்.

    நெல்லை:

    நெல்லை டவுன் எஸ்.என்.ஹைரோட்டில் ஆர்ச்சில் இருந்து ஈரடுக்கு மேம்பாலம் ஏறும் பகுதிக்கு சற்று முன்பு வரை சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக விபத்து பாதிப்பு குறைந்துள்ளது.

    இந்நிலையில் ஊருடையார்புரம் செல்லும் சாலையில் இருந்து ஈரடுக்கு மேம்பாலம் முன்பாக வரையிலும் தடுப்பு சுவர்கள் இல்லை. ஆனால் ஸ்ரீபுரம் தபால் நிலையம் அருகே சாலையின் நடுவில் இரும்பு பேரிகார்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த இரும்பு தடுப்பினால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளது. இந்த இடம் தொடர்ச்சியாக வாகனங்கள் வரக்கூடிய இடமாகும். ஒரு வாகனத்திற்கு பின் தொடர்ந்து வரக்கூடிய அதிலும் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் வரக்கூடியவர்கள் தங்களுக்கு முன்பாக செல்லும் வாகனத்தை முந்திச்செல்ல வலது பக்கம் வாகனத்தை திருப்பும்போது சாலையின் நடுவில் இருக்கும் இந்த இந்த இரும்பு தடுப்பில் மோதும் அபாயம் உள்ளது.

    இதன் காரணமாக உயிர் சேதம் ஏற்படவும் அதிகளவில் வாய்ப்புள்ளது. ஆதலால் அந்த இடத்தில் இரும்பு தடுப்பு தேவையற்றது என்பது பெரும்பாலான பொது மக்களின் கருத்தாக இருந்து வருகிறது. சாலையின் மத்தியில் பாதுகாப்பு சுவர்கட்டி தொடர்ச்சியாக சில தடுப்புகள் வைத்தால் கூட விபத்தினை தவிர்க்கலாம்.

    ஆனால் சம்பந்தமில்லாமல் இருக்கும் இந்த பேரிகார்டால் விபத்து ஏற்படும். எனவே அதனை அப்புறப்படுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் அய்யூப், நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.

    • சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம், குறித்த கருத்தரங்கம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் நவீன் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார்.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட ஓ.பி.சி. பிரிவு சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும், முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர் மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் டியூக் துரைராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட ஓ.பி.சி தலைவர் ஜான் கென்னடி, மாநகர் மாவட்ட ஓ.பி.சி. துணை தலைவர் ரிச்சர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் நவீன் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.சி. பிரிவு பொதுச்செயலாளர்கள் மோகன், குச்சூரி, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் நித்யபிரியா ரவி, மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் தனசிங் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விழாவில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
    • இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    நெல்லை:

    நாங்குநேரியில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க. கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் நாங்குநேரி நகர செயலாளர் சங்கர் முத்துடையார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அழகுசுந்தரம் ஒட்டி வந்த டாரஸ் லாரியை பணகுடி வருவாய் ஆய்வாளர், உதவி கலெக்டர் ஆகியோர் நிறுத்தி சோதனை செய்தனர்.
    • லாரியில் அதிக அளவு குண்டு கற்களை ஏற்றி வந்தது சோதனையில் தெரியவந்தது.

    வள்ளியூர்:

    தெற்கு வள்ளியூர் பகுதியில் பணகுடி வருவாய் ஆய்வாளர் அழகு முத்து ரேகா மற்றும் உதவி கலெக்டர் கிஷோர் குமார் (பயிற்சி) ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, மருதப்பபுரம், தெற்கு தெருவை சேர்ந்த அழகுசுந்தரம் (வயது41) என்பவர் ஒட்டி வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு கொண்ட குண்டு கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து பணகுடி வருவாய் ஆய்வாளர் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப் படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அழகுசுந்தரத்தை கைது செய்தனர்.

    • சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு மூளைச்சாவு அடைந்தார்.
    • கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா உள்ளார் கிராமம்- தென்காசி மெயின்ரோட்டை சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மகன் சண்முக துரை(வயது 52). இவர் சம்ப வத்தன்று விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    பின்னர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். தொடர்ந்து இன்று காலை அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதன்படி விபத்தில் உயிரிழந்த சண்முகதுரை யின் நுரையீரல் சென்னை காவேரி மருத்துவ மனைக்கும், கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும், ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கும், கருவிழிகள் நெல்லை அரசு மருத்துக்கல்லூரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அரசின் வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்புகளை தானம் வழங்கிய சண்முகத்துரையின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • தூய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நெல்லை மாநகராட்சியில் 753 தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.

    நெல்லை:

    சுய உதவி குழுக்களின் கீழ் பணி புரியும் நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 753 பேரை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைப்பதை கண்டித்தும், தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரியும் தூய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் 2-வது நாளான இன்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை அளிப்பதற்காக நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நெல்லை மாவட்ட அறிவியல் மையம் முன்பு உள்ள சாலையில் திரண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் அறிவியல் மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததை கண்டித்து போராட்டத்தை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக 47 சுய உதவி குழுக்கள் மூலமாக 753 தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். தற்போது தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் இந்த தூய்மை பணியாளர்களை ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதனை அறிந்து கடந்த மாதம் 27-ந்தேதி அனைத்து தூய்மை பணியாளர்களும் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் காரணமாக மாநகராட்சி அதிகாரி களுக்கும், தொழிற்சங்கத்திற்கும் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் மாவட்ட கலெக்டர் உத்தரவு அடிப்படையில் தினசரி சம்பளம் ரூ.480 வழங்கி விடுவதாகவும், சுய உதவிக்குழு தூய்மை தொழிலாளர்கள் சுய உதவி குழுவாகவே நீடிப்பார்கள் என்று உறுதி அளித்தார்கள். இதன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இது தொடர்பான தீர்மானமும் கடந்த 4-ந் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    தற்போது ஒரு வார காலமாக சுய உதவிக்குழு தலைவர் மற்றும் செயலாளர்களிடம் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணி செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குழு தலைவர் மற்றும் செயலாளர் கையெழுத்திட வேண்டும் என்றும் நிர்பந்தப்படுத்தப்படு கிறார்கள் என்று புகார்கள் எழுந்தது.

    அதிகாரிகளின் இந்த செயல் தொழிலாளர் நலத்திட்டத்திற்கும், சமூக நீதிக்கும் புறம்பானது. அதிகாரிகளின் மிரட்டலை கைவிடக் கோரியும், ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்க கூடாது என்று வலியுறுத்தியும், ஒப்பந்ததாரர்களிடம் சுய உதவி குழு தொழி லாளர்களை ஒப்படைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று நெல்லை மாநகராட்சியில் பணி செய்யும் அனைத்து பணியாளர்களும் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தகுந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் மோகன், பொது செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதனையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலக சாலை மற்றும் மாவட்ட அறிவியல் மைய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே தூய்மை பணியாளர்களை சுய உதவி குழுவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்க மாட்டோம் என்று மாநகராட்சி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் வரையிலும் வேலைக்கு செல்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன் தலைமையில் நாளை (புதன்கிழமை) மேலப்பாளையம் சந்தை பகுதியில் போராட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஒவ்வொரு மண்டல அலுவலகம் முன்பும் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    • வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார் பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக் கும், அதன் முன்பு அலங்க ரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத் துக்கும் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நிர்வா கிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாநில எம். ஜி.ஆர். மன்ற இணைச் செய லாளர் கல்லூர் வேலாயுதம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பள்ளமடை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன்,

    பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முக குமார், திருத்துச் சின்னத்துரை, ஜெனி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சேவல் பரமசிவன், கவுன்சி லர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், பகுதி துணை செயலாளர் மாரீசன், இணை செயலாளர் அப்பாஸ், பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்ப ராஜ் ஜெய்சன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ் ணன், நிர்வாகிகள் சீனி முகம்மது சேட், பாறையடி மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×