என் மலர்
உள்ளூர் செய்திகள்

எஸ்.என்.ஹைரோட்டில் சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள பேரிகார்டை படத்தில் காணலாம்.
நெல்லை எஸ்.என்.ஹைரோட்டில் சாலையின் நடுவே இருக்கும் பேரிகார்டால் விபத்து அபாயம்- அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- ஸ்ரீபுரம் தபால் நிலையம் அருகே சாலையின் நடுவில் இரும்பு பேரிகார்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
- சம்பந்தமில்லாமல் இருக்கும் இந்த பேரிகார்டால் விபத்து ஏற்படும்.
நெல்லை:
நெல்லை டவுன் எஸ்.என்.ஹைரோட்டில் ஆர்ச்சில் இருந்து ஈரடுக்கு மேம்பாலம் ஏறும் பகுதிக்கு சற்று முன்பு வரை சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக விபத்து பாதிப்பு குறைந்துள்ளது.
இந்நிலையில் ஊருடையார்புரம் செல்லும் சாலையில் இருந்து ஈரடுக்கு மேம்பாலம் முன்பாக வரையிலும் தடுப்பு சுவர்கள் இல்லை. ஆனால் ஸ்ரீபுரம் தபால் நிலையம் அருகே சாலையின் நடுவில் இரும்பு பேரிகார்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த இரும்பு தடுப்பினால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளது. இந்த இடம் தொடர்ச்சியாக வாகனங்கள் வரக்கூடிய இடமாகும். ஒரு வாகனத்திற்கு பின் தொடர்ந்து வரக்கூடிய அதிலும் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் வரக்கூடியவர்கள் தங்களுக்கு முன்பாக செல்லும் வாகனத்தை முந்திச்செல்ல வலது பக்கம் வாகனத்தை திருப்பும்போது சாலையின் நடுவில் இருக்கும் இந்த இந்த இரும்பு தடுப்பில் மோதும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக உயிர் சேதம் ஏற்படவும் அதிகளவில் வாய்ப்புள்ளது. ஆதலால் அந்த இடத்தில் இரும்பு தடுப்பு தேவையற்றது என்பது பெரும்பாலான பொது மக்களின் கருத்தாக இருந்து வருகிறது. சாலையின் மத்தியில் பாதுகாப்பு சுவர்கட்டி தொடர்ச்சியாக சில தடுப்புகள் வைத்தால் கூட விபத்தினை தவிர்க்கலாம்.
ஆனால் சம்பந்தமில்லாமல் இருக்கும் இந்த பேரிகார்டால் விபத்து ஏற்படும். எனவே அதனை அப்புறப்படுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் அய்யூப், நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.






