என் மலர்
நீங்கள் தேடியது "Dakshinamara Nadar Sangam college"
- கருத்தரங்கிற்கு கல்லூரி செயலாளரும், தாளாளருமான வி.பி.ராமநாதன் தலைமை தாங்கினார்.
- சிறப்பு விருந்தினராக பேராசிரியர் கண்ணன் நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் தமிழ் துறை சுயநிதிப்பிரிவு, கிராமிய கலை இலக்கிய மன்றம், போதி பன்னாட்டு ஆய்விதழ் சார்பில், 'இலக்கியமும் ஆன்மிக அறிவியலும்' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. கல்லூரி செயலாளரும், தாளாளருமான வி.பி.ராமநாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சவரி ராயம்மாள் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ராஜன் தொடக்க உரையாற்றினார்.
கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ், பண்ணை கே.செல்வகுமார், தமிழ் துறை தலைவர்கள் நிர்மலா, கிரிஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஜெர்மனி நாட்டின் கேல் கிறிஸ்டியன் அல்பிரைட் பல்கலைக்கழக பேராசிரியர் கண்ணன் நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சிங்காரவேலன் முன்னிலையில், ஆய்வு கட்டுரைகளை வாசித்தனர். பின்னர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் ஆய்வுக்கோவையை வெளியிட, அதனை பேராசிரியர் கண்ணன் நாராயணன் பெற்று கொண்டார். இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பல்வேறு கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஒருங்கிணைப்பாளர் சோனா கிறிஸ்டி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிராமிய கலை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் முருகவேல், பால்மோகன், சித்ரா, கிரேஸ் புஷ்பா ஜூலியட், பீட்டர் ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.
இதேபோல் கல்லூரியில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். அகதர மதிப்பீட்டு குழு துணை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார். யோகா பயிற்சியாளர் ஆனந்த குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளித்தார். சிறப்பான உடல் ஆரோக்கியத்திற்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறினார். பேராசிரியர் ராஜேந்திரன் ரவிக்குமார் நன்றி கூறினார்.
- கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோயில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் கணித விழா-2023 நடைபெற்றது.
- தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி இளங்கலை கணிதவியல் துறை மாணவிகள் வினாடி-வினா போட்டியில் முதலிடம் பிடித்தனர்.
வள்ளியூர்:
கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோயில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் கணித விழா-2023 நடைபெற்றது. இதில் பங்கேற்ற தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி இளங்கலை கணிதவியல் துறை மாணவிகள் வெங்கடேஷ்வரி, தில்லை அருந்ததி, அபிநயா ஆகியோர் வினாடி-வினா போட்டியில் முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன், கல்லூரி முதல்வர் ராஜன், கல்லூரிக்குழு உறுப்பினர் காமராஜ், ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை செல்வகுமார், துறைத்தலைவர் சபீனாரோஸ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.