search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா
    X

    நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா

    • நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியில் ஒரு மாணவர் ஒரு மரம் என்ற நோக்கில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகள் , ஆசிரியர்கள், அலுவலர்கள் 1,000 மரக்கன்றுகளை நட்டனர்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியில் ஒரு மாணவர் ஒரு மரம் என்ற நோக்கில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. முதல்வர் ராஜன், வரவேற்று பேசினார். நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் மற்றும் கல்லூரி தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார் தலைமை தாங்கினார். கல்லூரிச் செயலர் வி.பி.ராமநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக நெல்லை வன பாதுகாவலர் மற்றும் களஇயக்குநர் எ.எஸ். மாரிமுத்து கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் மாணவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார். நெல்லை கோட்ட வன அலுவலர் அன்பு சுற்றுச்சூழல் வனம் மற்றும் இயற்கை பாதுகாப்பு பற்றி சிறப்புரை வழங்கினார். நாங்குநேரி வனச்சரக அதிகாரி பலவேச கண்ணன், வனவர்கள், மற்றும் வன அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார். அதைத்ெதாடர்ந்து மாணவ, மாணவிகள் , ஆசிரியர்கள், அலுவலர்கள் 1,000 மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் இயக்குநர்கள், கல்லூரிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஹரிகிருஷணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி அகத் தரமதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், இயற்பியல் துறை தலைவர் பாலமுருகன், நாட்டு நலப்பணி திட்ட அணி எண். 35 மற்றும் 37 அலுவலர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×