search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grama Udayam"

    • நெல்லை மாவட்டம் அலங்காரபேரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பாக மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பாக மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி நெல்லை மாவட்டம் அலங்காரபேரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தொடங்கி வைத்தார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

    கிராம உதயம் தன்னார்வ தொண்டர் ராஜேஷ்வரி வரவேற்றார். பகுதி பொறுப்பாளர்கள் கார்த்திக், செந்தில் குமார், சுசீலா ஆகியோர் கருத்துரை வழங்கினர். முடிவில் தன்னார்வ தொண்டர் துர்கா நன்றி கூறினார். கிராம உதயம் சார்பாக சிவந்திபட்டி, முத்தூர், அலங்கார பேரி மற்றும் சுற்று வட்டாரப் அனைத்து பகுதிகளிலும் டெங்கு விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தொடங்கி வைத்து மரக்கன்று கள் வழங்கினார்.
    • கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவ லகம் மற்றும் கிராம உதயம் கோபால சமுத்திரம் இணைந்து பசுமை தீபாவளியை கொண்டாடும் வகையில் சேரன்மகாதேவி யில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் பராமரித்தல் மற்றும் 2 ஆயிரம் துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியை சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தொடங்கி வைத்து மரக்கன்று கள் வழங்கி சிறப்புரையாற்றினார். கிராம உதயம் வழக்கறிஞர் ஆலோசனை குழு உறுப்பினர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். கிராம உதயம் நிர்வாக மேலா ளர் மகேஷ்வரி முன்னிலை வகித்தார்.

    கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் முருகன், பாலசுப்ரமணியம், சசிகலா, குமாரி, ஆறுமுகத்தாய் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உதயம் உறுப்பினர்கள், பொதுமக்கள், கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்குதல், பராமரித்தல் விழா நடைபெற்றது.
    • கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கினார்.

    நெல்லை:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல், பராமரித்தல் விழா நடைபெற்றது. கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கினார்.

    கிராம உதயம் ஆலோ சனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்று பேசினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் செந்தில்குமார், பாலசுப்ரமணியம், ஆறுமுகத்தாய், குமாரி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கிராம உதயம் தனி அலுவலர் மீனாட்சி நன்றி கூறினார்.

    • முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் 500 துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் அப்துல் கலாமின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நெல்லை:

    நெல்லை கோபாலசமுத்திரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் 500 துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் அப்துல் கலாமின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகளை வழங்கினார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்று பேசினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் முருகன், பால சுப்பிரமணியன், கார்த்திக், சசிகலா, ஆறுமுகத்தாய் ஆகியோர் அப்துல்கலாம் பற்றி கருத்துரை வழங்கினர்.

    கிராம உதயம் தனி அலுவலர் கணேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் துணிப் பைகள் வழங்கப்பட்டன.

    • செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
    • முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனை, மகளிர் நல மருத்துவரின் ஆலோசனைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை காவேரி மருத்துவமனை மற்றும் மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பாக செய்துங்கநல்லூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். கிராம உதயம் மேல ஆழ்வார்தோப்பு கிளை அலுவலக மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    கலைநன்மணி விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பகுதி பொறுப்பாளர் முருகசெல்வி நன்றி கூறினார். முகாமில், காவேரி மருத்துவமனை மருத்துவர் சிந்துஜா குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர். அகிலன் முகாமை ஒருங்கிணைத்தார். இந்த முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனை, மகளிர் நல மருத்துவரின் ஆலோசனைகள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம், தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் வசதி குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    ×