என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் வழங்கிய காட்சி.
அலங்காரபேரியில் கிராம உதயம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
- நெல்லை மாவட்டம் அலங்காரபேரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நெல்லை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பாக மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பாக மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி நெல்லை மாவட்டம் அலங்காரபேரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தொடங்கி வைத்தார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.
கிராம உதயம் தன்னார்வ தொண்டர் ராஜேஷ்வரி வரவேற்றார். பகுதி பொறுப்பாளர்கள் கார்த்திக், செந்தில் குமார், சுசீலா ஆகியோர் கருத்துரை வழங்கினர். முடிவில் தன்னார்வ தொண்டர் துர்கா நன்றி கூறினார். கிராம உதயம் சார்பாக சிவந்திபட்டி, முத்தூர், அலங்கார பேரி மற்றும் சுற்று வட்டாரப் அனைத்து பகுதிகளிலும் டெங்கு விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






