களக்காடு அருகே விவசாயியை தாக்கியதாக தந்தை- மகன் மீது வழக்கு

சுப்பையாவுக்கும், முத்துக்குட்டிக்கும் இடப் பிரச்சினை இருந்து வருகிறது.முத்துக்குட்டி, அவரது 16 வயது மகன் ஆகியோர் சேர்ந்து சுப்பையாவை தாக்கினர்.
களக்காடு அருகே விவசாயியை தாக்கியதாக தந்தை- மகன் மீது வழக்கு
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழதுவரைகுளம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது36). விவசாயி. இவருக்கும் மீனவன் குளத்தை சேர்ந்த முத்துக் குட்டிக்கும் (40) இடப் பிரச்சினை இருந்து வருகிறது.

இந்நிலையில் சம்பவத் தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முத்துக் குட்டி, அவரது 16 வயது மகன் ஆகியோர் சேர்ந்து சுப்பை யாவை தாக்கினர். இதனால் காயமடைந்த சுப்பையா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துக்குட்டியையும், அவரது மகனையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com