என் மலர்
தஞ்சாவூர்
- பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்களை கொண்டு பேராபிஷேகம் செய்யப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் 1038- வயது சதய விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சதய விழாவை முன்னிட்டு இன்று பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்களைக் கொண்டு பேராபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பேரபிஷேகம் செய்யப் பட்ட 48 அபிஷேக பொருட்களின் விவரம் வருமாறு:-
வில்வம் இலை, வன்னி இலை, நொச்சி இலை, பிச்சி இலை, அத்தி கொழுந்து, அரசன் கொழுந்து, ஆலம் கொழுந்து, மாங்கொழுந்து, பலாக்கொழுந்து , விளாக்கொழுந்து, ஜெர்மன் பச்சிலை, விபூதி அபிஷேகம், தைலகாப்பு அபிஷேகம், சாம்பிராணி தைலம் அபிஷேகம், நவகவ்ய அபிஷேகம், திரவிய பொடி அபிஷேகம், வாசனைப் பொடி அபிஷேகம், நெல்லி முன்னி பொடி அபிஷேகம், மஞ்சள் பொடி அபிஷேகம், அரிசி மாவு பொடி அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், தேன் அபிஷேகம், நெய் அபிஷேகம், பசும் பால் அபிஷேகம், பசுந்தயிர் அபிஷேகம், மாதுளை முத்து அபிஷேகம், பிலாச்சுளை அபிஷேகம், ஆரஞ்சு சுளை அபிஷேகம், அன்னாசி அபிஷேகம், திராட்சை அபிஷேகம், விளாம் பழம் அபிஷேகம், கொளிஞ்சி பழம் அபிஷேகம், நார்த்தம் பழச்சாறு அபிஷேகம், சாத்துக்குடிசாறு அபிஷேகம், எலுமிச்சை பழச்சாறு அபிஷேகம், கருப்பஞ்சாறு அபிஷேகம், இளநீர் அபிஷேகம், அன்னாபிஷேகம், சந்தன அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், ஏகதாரை அபிஷேகம், சகஸ்ரதாரை அபிஷேகம், சிங்கேதனம் அபிஷேகம், வலம்புரி சங்கு அபிஷேகம், சொர்ணாபிஷேகம், கங்கா ஜலம் அபிஷேகம், 108 ஸ்தாபன கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி ஆகிய 48 பொருட்களால் பெருவுடையாருக்கு பேரபி ஷேகம் செய்யப்பட்டன.
- தனி நபர்களும் 50 கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.
- ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக 1,038 பேர் பங்கேற்று நடனமாடினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா நேற்று தொடங்கியது.
இதில் நேற்று மாலையில் ஒரே நேரத்தில் 1038 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக கோவில் வளாகத்தில் மகா நந்திகேசுவரர் மண்டபத்தைச் சுற்றியுள்ள மேடையில் திறந்தவெளி அரங்கு அமைக்கப்பட்டது. இதில், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 25 குழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
தவிர, தனி நபர்களும் 50 கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.
சிறுமிகள் முதல் பெரியவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு கலைஞருக்கும் அடையாள எண் வழங்கப்பட்டது.
இதன்படி வரிசையாக நிறுத்தப்பட்டு, நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தவிர, பாட்டு, மிருதங்கம், தவில், வீணை உள்பட சுமார் 50 இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு இசைத்தனர்.
சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மொத்தம் 3 பாடல்கள் பாடப்பட்டன.
இந்நிகழ்ச்சியைக் காண ஆயிர த்துக்கும் அதிகமானோர் திரண்டு ரசித்தனர்.
இதேபோல, இக்கோயிலில் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆயிரமாவது ஆண்டு விழாவில் ஆயிரம் பரத நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.
ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இரண்டாவது முறையாக 1,038 பேர் பங்கேற்று நடனமாடியது குறிப்பிடத்தக்கது.
- தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று மாமன்னன் ராஜராஜசோழன் 1038-வது சதய விழா நடந்தது.
- காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று மாமன்னன் ராஜராஜ சோழன் 1038-வது சதய விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழ் தேசிய பேரியக்கம், காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது உடையா ளூரில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தமிழ் தேசிய பேரியக்கம் நிர்வாகிகள் வைகறை, பழ. ராஜேந்திரன், சீனிவாசன், தனசேகரன், பாலன், தீன் தமிழன், காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் சாமி கரிகாலன், வெள்ளா பெரம்பூர் ரமேஷ், செந்தில் வேலன், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 300 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கைப்பேசி செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் இன்று (புதன்கிழமை) 750 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் தங்களது ஊா்களுக்கு திரும்புவதற்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, மன்னாா்குடி, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்து றைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்க ளிலிருந்து சென்னைக்கு 450 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதேப்போல் கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து கோவை, திருப்பூருக்கும், மதுரை, தஞ்சாவூா், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய ஊா்களிலிருந்து திருச்சிக்கும் 300 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூா், ஜெயங்கொண்டம், அரியலூ ரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்து றைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூா், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
மேலும் கைப்பேசி செயலி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அசுரனை அழிக்கும் வைபவம் நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தெற்கு வீதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர்.
இந்த நிலையில் நேற்று விஜயதசமி விழாவை முன்னிட்டு காளியம்மன் அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அசுரனை அழிக்கும் வைபவம் நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை தரிசனம் செய்தனர்.
- மின்சாரம் தாக்கியதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே கரிக்குளம் எம்.ஆர்.எம் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55).
தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது திடீரென செல்வத்தை மின்சாரம் தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து திருவி டைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 3 சக்கர சைக்கிள் போட்டி நடைபெற்றது.
- 2,3,4,5-ம் இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
சுவாமிமலை:
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 3 சக்கர சைக்கிள் போட்டி நடைபெற்றது.
போட்டியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.
போட்டியானது 3 நிலைகளாக நடைபெற்றது.
போட்டியில் முதல் இடம் பிடித்த குழந்தைக்கு தங்க பதக்கமும், முறையே 2,3,4,5-ம் இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.
விழாவில் கார்த்தி வித்யாலயா பள்ளி தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
மேலும், கலந்து கொண்ட அனைத்து குழந்தை களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் கூறுகையில்:-
போட்டியானது குழந்தைகளை ஊக்கு விக்கும் வகையிலும், புத்துணர்ச்சி அளிக்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றார்.
முன்னதாக பள்ளி முதல்வர் அம்பிகாபதி அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெற்றது.
- சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் உடனுறை முல்லைவனநாதர் திருக்கோயிலில் நவராத்திரிவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெற்றது.
இதில் 23-ந்தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைள் நடைபெற்றது.
நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு மாலை சுவாமி சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும்.
அதனை தொடர்ந்து தெப்ப திருவிழாவும் நடைபெற்றது.
தெப்ப திருவிழா நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், கோயில் செயல் ,.அலுவலர் அசோக்குமார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
- யானை மீது திருமுறை நூல் வைக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, திருமுறை வீதி உலா பெரிய கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் 4 ராஜவீதிகளில் வலம் வந்தது.
- தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சதய விழாவில் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் மாமன்னர் ராஜராஜசோழன். இவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாகவும், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தனது ஆட்சி காலத்தில் கட்டிடக்கலை மட்டுமின்றி நீர் மேலாண்மை உள்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இந்நிலையில் மாமன்னர் ராஜராஜசோழன் முடி சூட்டிய நாளை அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 1038-வது சதய விழா அரசு விழாவாக தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சதய விழா ஆண்டை குறிக்கும் வகையில் மாலையில் 1038 பரத நாட்டிய கலைஞர்களின் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஜராஜ சோழன் பிறந்த சதய நட்சத்திரமான இன்று 2-ம் நாள் விழா தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்றது. முதலில் காலை 6.30 மணிக்கு அரண்மனை தேவஸ்தானம் நிஷாந்தி மற்றும் ஆறுமுகம் குழுவினரின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதையடுத்து கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார்.
இதையடுத்து பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யானை மீது திருமுறைகள் வைத்து வீதி உலா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து யானை மீது திருமுறை நூல் வைக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, திருமுறை வீதி உலா பெரிய கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் 4 ராஜவீதிகளில் வலம் வந்தது.
அடியார்கள், ஓதுவார்கள் திருமுறை பாராயணம் பாடியப்படி திருவீதி உலா வந்தனர். அப்போது பழங்கால கொம்பு உள்ளிட்ட பல்வேறு அரிய இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. இதில் பெரியகோவில் உருவம் பொறித்த பிரமாண்ட மாதிரி அரங்கம் வாகனத்தில் வைக்கப்பட்டு வீதி உலாவில் பின்தொடர்ந்து வந்தது.
தொடர்ந்து பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பால், மஞ்சள், தயிர், தேன், எலுமிச்சை சாறு, இளநீர், சந்தனம் உள்ளிட்ட 48 வகையான பொருட்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடந்த இந்த பேரபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மதியம் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து மங்கள இசை, நடனம், தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.
சதய விழாவையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சதய விழாவில் கலந்து கொண்டனர். இதனால் மாநகர் விழாக்கோலம் பூண்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த வர் குப்புசாமி மகன்ஆறு முகம் ( வயது 53).
இவர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி விடுதியில் வார்ட னாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள தொண்ட ராம்பட்டுக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்ககதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.5000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது .
இது குறித்து அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
- மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
- சாமந்தான் குளத்தில் முறையாக தண்ணீர் விட வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழராஜவீதியில் உள்ள நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார்.
மாநில மாணவரணி செயலாளர் நல்லதுரை, செயற்குழு உறுப்பினர் விருதாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாநகராட்சி 15 மற்றும் 25 ஆகிய வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கீழ்அலங்கம் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும்.
தெற்குவீதி, கீழவீதி, கீழ்அலங்கம், கொண்டிராஜபாளையம், ஏ.ஒய்.ஏ.நாடார் ரோடு, ராவுத்தர்பாளையம், டவுன் போலீஸ் நிலையம் ரோடு ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும்.
சாமந்தான் குளத்தில் முறையாக தண்ணீர் விட வேண்டும்.
அனைத்து சந்துகளிலும் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மாநகராட்சி கவுன்சிலர் கண்ணுக்கினியாள், ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமதாஸ், இலக்கிய அணி செயலாளர் ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் செந்தில், ஆர்.செந்தில் பொதுக்குழு உறுப்பினர் அய்யாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மணப்படையூர் கிராமத்தில் அரசு உரிமை பெற்று வெடி கடையை நடத்தி வருகிறார்.
- வெடி தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் அடுத்த திருவலஞ்சுழி ரெயில்வே கேட் சாலையில் வசிப்பவர் ஜேசுதாஸ் (வயது 45).
இவர் சுவாமிமலை அருகே மணப்படையூர் கிராமத்தில் அரசு உரிமை பெற்று வெடி கடையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் சட்ட விரோதமாக அவரது வீட்டில் வெடி தயாரிக்கும் பணி மேற்கொள்வதாக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்து வெடிகள் மற்றும் வெடி தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களை பறிமுதல் செய்து ஜேசுதாஸை கைது செய்தனர்.






