என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • மாமன்னன் ராஜராஜசோழன் 1,038-வது சதயவிழா தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்றது.
    • சதயவிழாக் குழு சார்பில் மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் விழா நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன் 1,038-வது சதயவிழா தஞ்சை பெரியகோவிலில் 2 நாட்கள் அரசு விழாவாக நடைபெற்றது.

    நேற்று மாலை நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, நாத சங்கம், மற்றும் சதயவிழாக் குழு சார்பில் மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    சதய விழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார்.

    விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு பேசினார்.

    விழாவில் மாமன்னன் ராஜராஜன் விருதினை மதுரை செந்தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் தட்சிணாமூர்த்தி, தஞ்சை டாக்டர் செல்வராஜ், முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் பழனியப்பன், புலவர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 பேருக்கு விருதுகள் வழங்கபட்டன.

    இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, சதய விழாக்குழு துணைத்தலைவர் மேத்தா, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் உதவி ஆணையர் கவிதா நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் பூத்கமிட்டி அமைப்பது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட அமைப்பாளர்கள் ராஜரத்தினம், பூண்டி கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, சண்முகபிரபு, சுவாமிநாதன், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தவமணி, தஞ்சை சட்டமன்ற தொகுதி செயலாளர் சத்தியராஜ், திருவையாறு சட்டமன்ற தொகுதி செயலாளர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் மணிகண்டன், கவன்சிலர் சரவணன், கரந்தை பகுதி துணை செயலாளர் தாஸ், மாவட்ட தொழில்சங்க இணை செயலாளர் வீரராஜ், குளிச்சப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், நிர்வாகி ராஜேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கீழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • சதயவிழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்தனர்.
    • மாற்று திறனாளி மாணவனை ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்க செய்து ஆசையை நிறைவேற்றி வைத்தார்

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் நேற்று சதயவிழாவை முன்னிட்டு மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி, இயக்கம், அமைப்பு, தன்னார்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அப்போது தஞ்சை அழகிக்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கல்லூரி மாணவர் ஆரவ் அமுதன் (19) மாலை அணிவிப்பதற்காக வந்தார்.

    ஆனால் அவரை சில போலீசார் தடுத்து நிறுத்தி அனுமதிக்கவில்லை.

    அனைத்து அமைப்பினரும் மாலை அணிவித்த பிறகு மாலை அணிவிக்க வேண்டும் என கூறி திருப்பி அனுப்பினர்.

    இதனால் மாணவர் ஆரவ் அமுதன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

    இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதனை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அந்த மாற்றுத்திறனாளி வாலிபரை அழைத்து வர நடவடிக்கை எடுத்தார்.

    மேலும் இந்த தகவல் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    உடனே அவர் மாணவர் ஆரவ்அமுதனை அழைத்து வந்து உதவிக்கரங்களோடு ஏற்றி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்க செய்து ஆசையை நிறைவேற்றி வைத்தார்.

    தொடர்ந்து அவரிடம் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தி ஊக்கப்படுத்தினார்.

    பதிலுக்கு மாணவரும் மேயருக்கு மனமார்ந்த நன்றி கூறினார்.

    போலீசாரும் மாணவரை பாராட்டி ஊக்கப்படுத்தி காவல்துறை உங்கள் நண்பன் என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்றப்படி செயல்பட்டனர்.

    மேயர் மற்றும் போலீசாரின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.

    • அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    நிர்வாகிகள் உமா, லோகநாதன் ஜீவா, வீராச்சாமி, சோமு, அன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமாரவேல், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் மாநில செயற்குழு சோமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் கள வாக்குறுதி படி முறையான காலமுறை ஊதியம், முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் நிர்வாகிகள் அன்பழகன், லூர்து சாமி, ஜார்ஜ் ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சங்கத்தின் 40 -வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.
    • போனஸ் விதிகளின்படி அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் அறிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சங்கத்தின் 40 -வது ஆண்டு பேரவை கூட்டம் சங்கத் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

    துணைத் தலைவர் சந்திரன் வரவேற்று பேசினார்.

    அஞ்சலி தீர்மானத்தை மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி வாசித்தார்.

    ஏஐடியூசி மாநில செயலாளர் தில்லைவனம் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார்.

    நடைபெற்ற பணிகள் குறித்து பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் வேலை அறிக்கை வாசித்தார்.

    பொருளாளர் ராஜமன்னன் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரவை புதிய நிர்வாகிகளாக தலைவர் சேகர், பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், பொருளாளர் ராஜமன்னன் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொருளாளர் நேருதுரை பேரவையை முடித்து வைத்து நிறைவுரை ஆற்றினார்.

    இந்த பேரவையில் திருத்தப்பட்ட போனஸ் விதிகளின்படி பஸ்பாடி கிளீனர், கேன்வாசர் உள்ளிட்ட அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் அறிவிக்க வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன், மாவட்ட தலைவர் சேவையா, தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், ஓய்வு பெற்றோர் சங்க பொருளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், தங்கராசு, தமிழ்மன்னன், ரெங்கதுரை, வீரையன், முருகவேல், சுமன், இளங்கோவன், சுகுமார், நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • துணைமின்நிைலயத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பிள்ளையார்பட்டி:

    தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின்நிைலயத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மருத்து வக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம் நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ் பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, மானோ ஜிப்பட்டி, ரெட்டிப்பாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப்நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.

    • ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடைகளில் விற்பனை செய்தனர்.
    • புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் ஊத்தமதானி கிராமத்தில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடைகளில் விற்பனை செய்வதாக சோழபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர் சர்மிளா, சப்-இன்ஸ்பெ க்டர்கள் சற்குணன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், போலீஸ் ஏட்டு தேவேந்திரன் மற்றும் தனிப்படை போலீஸ்காரர் சிலம்பரசன் ஆகியோர் உத்தமதானி கல்லூர் சாலையில் ஒரு வாடகை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலான அரசு தடை விதித்திருந்த புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர்.

    இதை தொடர்ந்து 2 ஆயிரம் கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அந்த வீட்டில் இருந்த கும்பகோணம் அருகே உள்ள துவரங்குறிச்சியை சேர்ந்த தட்சணாமூர்த்தி (வயது 28), கடிச்சம்பாடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (27) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் வாடகை வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரிய வந்தது.

    சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தட்சணாமூர்த்தி, ரஞ்சித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் 2 ஸ்கூட்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

    இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தனர்.
    • கார் எதிர்பாராத விதமாக பாலத்தில் மோதி கார் கவிழ்ந்தது.

    பேராவூரணி:

    மதுரை பழைய குயவர் பாளையம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜன் (வயது 50), இவரது மனைவி சகாயராணி (45), மகன் ஜெரோம் (15), மாமியார் சூசைமேரி(65) ஆகியோருடன் வேளாங்கண்ணி சென்று பேராலயத்தில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பி மதுரைக்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார்.

    காரை அந்தோணி ராஜன் ஓட்டினார்.

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் பிள்ளையார்திடல் சோதனை சாவடி அருகே சென்ற போது கார் எதிர்பாராத விதமாக பாலத்தில் மோதி கார் கவிழ்ந்தது.

    இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயம் அடைந்தனர்.

    பலத்த காயமடைந்த சூசைமேரி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா தஞ்சையில் 4-ந்தேதி நடக்கிறது.
    • பொதுக்கூட்டத்தில் எடப்பாடி. பழனிசாமி பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்ற உள்ளார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழக அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், கழகத்தின் சார்பில் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், வருகிற 4.11.2023 - சனிக்கிழமை மாலை 5 மணியளவில், தஞ்சை மாநகரில் நடை பெற உள்ள, அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்ற உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆழ் துளை கிணறு தண்ணீர் மூலம் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளது.
    • விவசாயிகள் தங்கள் வயல்களில் நடவு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆழ் துளை கிணறு தண்ணீர் மூலம் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளது.

    திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் ஆழ் துளை கிணறு வசதியுள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் சம்பா நடவு செய்ய தொடங்கி உள்ளனர்.நடப்பு ஆண்டு கால்வாய் பாசன வசதி பெறும் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ள முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை.

    மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு மற்றும் வரத்து வெகுவாக குறைந்தது.இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக மூடப்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து குடி தண்ணீருக்கு மட்டும் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.காவிரி பாசனபகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் கேள்விக்குறியாகி விட்ட நிலையில், திருக்காட்டுபள்ளி பகுதியில் ஆழ் துளை கிணறு வசதியுள்ள விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நாற்றங்கால் பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

    இதிலும் முன்னதாக நாற்றுவிட்டு விவசாயிகள் தங்கள் வயல்களில் நடவு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை நல்ல நிலையில் பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் சரிவு காணாமல் சரியாக சாகுபடி மேற்கொள்ள முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • சாய்ரகு இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார்.
    • ஆட்டம் பாட்டத்துடன் சாய்ரகு பட்டா கத்தியால் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சாய்ரகு (வயது 39). இவர் இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று தனது பிறந்தநாளை தஞ்சை-நாகை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கொண்டாடினார்.

    அப்போது ஆட்டம் பாட்டத்துடன் சாய்ரகு பட்டா கத்தியால் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். இந்த நிலையில் இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாய்ரகுவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுவனின் பெற்றோர் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யகலாவையும், உடந்தையாக இருந்த முருகனையும் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் சோழன்மாளிகை பகுதியை சேர்ந்த வீரசோழன். இவரது மனைவி சூர்யகலா (வயது 55). இவர் அதே பகுதியில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் கும்பகோணம் பேட்டை ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த முருகன் (52).

    அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டில் சமையல் செய்து அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த பெண்ணின் 15 வயது மகன் இரவு நேர உணவை முதியோர் இல்லத்திற்கு சென்று சூர்யகலாவிற்கு வழங்குவது வழக்கமாக இருந்தது.

    இந்நிலையில் சிறுவன் திடீரென உடல்நிலை சோர்வுற்று காணப்பட்டான். இதனை கவனித்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து விசாரித்தனர். அப்போது சிறுவன் கூறிய பதில் அவர்களை தூக்கி வாரி போட்டது.

    முதியோர் இல்லம் நடத்தி வரும் சூர்யகலா தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அதற்கு உடந்தையாக முருகன் செயல்பட்டார். இதனால் உடல்நிலை சரியில்லாமல் போனது என கூறினார்.

    இதையடுத்து சிறுவனின் பெற்றோர் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யகலாவையும், உடந்தையாக இருந்த முருகனையும் கைது செய்தனர்.

    பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவ சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×