மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

ஒரே நாளில் 244 மி.மீ. மழை கொட்டியது.நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டியது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
Published on

தஞ்சாவூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் குளிர்ந்த காட்சி வீசியது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டியது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.

பின்னர் இரவு முழுவதும் குளிர்ந்த காட்சி வீசி கொண்டிருந்தது.

இதே போல் வல்லம், திருவையாறு, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, வெட்டிக்காடு, திருவிடைமருதூர், அதிரா ம்பட்டினம் ,பேராவூரணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தன. ஒரே நாளில் 244.50 மி.மீ. மழை அளவு பதிவானது. இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு ;-

திருவிடைமருதூர்-16.60, வெட்டிக்காடு-16.40, ஒரத்தநாடு-15, திருக்காட்டுப்பள்ளி- 14.40, ஈச்சன்விடுதி - 10.20, கும்பகோணம் -9.60, தஞ்சாவூர் -8, திருவையாறு -7 ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com