என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • ஜனவரி 11, 12-ந் தேதிகளில் மாநில அளவில் அணிகள் பங்கேற்க ஏற்பாடுகள்.
    • பங்கேற்கும் அணிகளுக்கு ஊக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    கும்பகோணம்:

    ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஆகியவை இணைந்து தேசிய இளைஞர் தினவிழாவை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி விவேகானந்தர் விளையாட்டு திருவிழா மற்றும் ஆண்களுக்கான மாநில அளவிலான இறகு பந்து போட்டியும், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் மாதம் 8-ந் தேதி பெண்களுக்கான மாநில அளவிலான இறகு பந்து போட்டியும் ஆடுதுறை அடுத்த நாவல்குளம் அருகே டாக்டர். அன்புமணி ராமதாஸ் எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    முதற்கட்டமாக ஆண்க ளுக்கான போட்டியில் ஜனவரி 10-ந்தேதி உள்ளூர் அணிகளும், 11, 12-ந் தேதிகளில் மாநில அளவில் 64 சிறந்த அணி களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி, ஜனவரி 10-ந் தேதி நடக்கும் போட்டிகளில் வெற்றிபெறும் முதல் 4 அணிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 999, ரூ.8 ஆயிரத்து 888, ரூ.7 ஆயிரத்து 777, ரூ.6 ஆயிரத்து 666 என்ற அளவிலும், மாநில அளவில் வெற்றிபெறும் அணிகளுக்கு ரூ.55 ஆயிரத்து 555, ரூ.44 ஆயிரத்து 444, ரூ.33 ஆயிரத்து 333, ரூ. 22 ஆயிரத்து 222 என்ற அளவிலும் முறையே பரிசு தொகை, கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கவும், பங்கேற்கும் அணிகளுக்கு ஊக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான ஆலோ சனை கூட்டத்தில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலின், துணை தலைவர் கமலா சேகர், தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், சென்னை வணிகம் கோர்ட்டு மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தி, ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத், திருப்பனந்தாள் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை, பேரூராட்சி கவுன்சிலர் பாலதண்டாயுதம், பொறியாளர் ரமேஷ், இறகுப்பந்து விளையாட்டு பயிற்சியாளர்கள் பால சுப்ரமணியன், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் உண்டியலை திருடப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    திருவோணம்:

    ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணத்தங்குடி மேலையூர் கிராமத்தில் காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி காலை பூஜை செய்து சாமி கும்பிட்டு விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார் .பிறகு வந்து பார்த்தபோது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு உண்டியலை யாரோ மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து உண்டியலை திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்.

    • மாவட்டத்தில் 10,25,988 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
    • 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்.

    தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிக ளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலானது இன்று காலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வெளியிட்டார். அக்டோபர் 2023 வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டு, உரிய திருத்தங்கள் மற்றும் நீக்கம் ஆகியவை மேற்கொள்ள ப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்ப ட்டுள்ளது.

    தற்போது வெளியிடப்ப ட்டுள்ள வரைவு வாக்களார் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 974896 ஆண் வாக்காளர்களும், 10,25,988 பெண் வாக்காளர்களும், 156 இதர பாலினத்தவரிகள் உட்பட மொத்த வாக்காளர்கள் 2001040 உள்ளனர்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் விவரம் வருமாறு :-

    திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் 1,27,433 ஆண் வாக்காள ர்களும், 1,30011 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,57,456 வாக்காளர்கள் உள்ளனர். கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் 1,28,382 ஆண் வாக்காளர்களும், 1,34,913 பெண் வாக்காளர்கள் மற்றும் 14 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,63,309 வாக்காளர்கள் உள்ளனர். (3) பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் 1,25,520 ஆண் வாக்காளர்களும், 1,31,058 பெண் வாக்காளர்கள் மற்றும் 18 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,56,596 வாக்காளர்கள் உள்ளனர். திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் 1,28,764 ஆண் வாக்காளர்களும், 1,34,869 பெண் வாக்காளர்கள் மற்றும் 20 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,63,653 வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் 1,29,254 ஆண் வாக்காளர்களும், 1,40,860 பெண் வாக்காளர்கள் மற்றும் 57 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,70:171 வாக்காளர்கள் உள்ளனர். ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 1,17,411 ஆண் வாக்காளர்களும், 1,24,146 பெண் வாக்காளர்கள் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,41.560 வாக்காளர்கள் உள்ளனர். பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,14,504 ஆண் வாக்காளர்களும், 1,24,053 பெண் வாக்காளர்கள் மற்றும் 24 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,38,581 வாக்காளர்கள் உள்ளனர். பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் 1,03,628 ஆண் வாக்காளர்களும், 1,06,078 பெண் வாக்காளர்கள் மற்றும் 8 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,09,714 வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த 05.01.2023 முதல் 26.10.2023 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களின் படிவங்கள் ஏற்கப்பட்டு 14.313 நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த, இடம்பெயர்ந்த வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளது. 56,389 நபர்களின் பெயர்களை விசாரணை அடிப்படையில்

    வெளியிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வட்டா ட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக வருகிற 26.12.2023 வரை வைக்கப்படும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தி லுள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், எதிர்வரும் 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய நான்கு நாட்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது மற்றும் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சா வடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க சார்பில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை , தஞ்சை மத்திய மாவட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, ஆற்காடு புண்ணியமூர்த்தி, அ.தி.மு.க சார்பில் மாநகர செயலாளர் சரவணன், காங்கிரஸ் சார்பில் பழனிவேல், தே.மு.தி.க. சார்பில் சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மாநகர துணை செயலாளர் முத்துக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பதி வேங்கடமுடையான் சுவாமிக்கு இணையாக பாடப்பெற்ற கோவிலாகும்.
    • கோவிந்தா.. கோவிந்தா.. பக்தி கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயிலில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 14-வது திவ்யதேச கோவிலாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் கல்கருட பகவான் மிகவும் பிரசித்தமானவர். இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. திருமங்கையாழ்வாரால் 100 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். திருப்பதி வேங்கடமுடையான் சுவாமிக்கு இணையாக பாடப்பெற்ற கோவிலாகும்.

    மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.

    முன்னதாக கடந்த 23-ந் தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 24, 25, 26-ந் தேதிகளில் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. இதற்காக ஆகம பட்டாச்சாரியார் கண்ணன், கோனேரிராஜபுரம் சம்பத் பட்டாச்சாரியார், கோவில் அர்ச்சகர்கள் லட்சுமி நரசிம்ம பட்டாச்சாரியார், வாசுதேவ பட்டாச்சாரியார், கோபி பட்டாச்சாரியார் ஆகியோர் தலைமையில் யாகசாலை பூஜைகளை நடைபெற்று வந்தது.

    தொடர்ந்து, இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கோவிலின் செயல் அலுவலர் பிரபாகரன் மூலவர் விமானத்திலிருந்து பச்சைக்கொடி அசைக்க அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா.. கோவிந்தா.. பக்தி கோஷம் விண்ணை பிளக்க தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    விழாவில் ராமலிங்கம் எம்.பி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதிமோகன், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஏ.வி.கே.அசோக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சுகுமார், தே.மு.தி.க. தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.மகேஷ், வசந்த மாளிகை பாத்திர கடை நெல்லை ரமேஷ் கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் கிருஷ்ணகுமார், செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்

    • முகாமில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
    • ரூ. 1 கோடி 12 லட்சத்து 23 ஆயிரத்து 425 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகா, வெங்கட் சமுத்திரம் அடுத்த கண்டமங்கலம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    இதில் வருவாய் துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, சுகாதார துறை, தொழிலாளர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை, ஊரக வளர்ச்சி துறை (மகளிர் திட்டம்) சார்பில் 150 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி 12 லட்சத்து 23 ஆயிரத்து 425 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், திருவையாறு ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொற்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் சரிதா, ஊராட்சி தலைவர் அமுதா மற்றும் தஞ்சை மாவட்ட அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தஞ்சை ஆர்.டி.ஓ. இலக்கியா அனைவ ரையும் வரவேற்றார். முடிவில் பூதலூர் தாசில்தார் பெர்ஷியா நன்றி கூறினார்.

    • பிற தடங்களில் 75 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வசதியாக இணைய முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் இன்று முதல் 4 நாள்களுக்கு 175 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    இதுகுறித்து போக்குவ ரத்துக் கழகத்தின் கும்பகோ ணம் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை ( சனிக்கிழமை), நாளை மறுநாள் ( ஞாயிற்றுக்கிழமை ) வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னை க்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதேபோல் சென்னை யிலிருந்து மேற்கண்ட ஊா்களுக்கு 100 பஸ்களும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய ஊா்களுக்கும், அந்த ஊா்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 75 பஸ்கள் என மொத்தம் 175 சிறப்புப் பஸ்கள் இன்றும், நாளையும் இயக்கப்பட உள்ளன.

    விடுமுறைக்கு வந்த பயணிகள் அவரவா் ஊா்களுக்கு திரும்பிச் செல்ல வரும் 29, 30 ஆம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 100 சிறப்புப் பஸ்களும், பிற தடங்களில் 75 சிறப்புப் பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூா், ஜெயங்கொ ண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறை ப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூா், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை ஆகிய ஊா்களில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊா்களில் இருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை, ஞாயிற்றுக்கி ழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வசதியாக இணைய முகவரியில் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதற்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
    • கட்சிக்கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம் இன்று இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும், அனுமதி இன்றியும் வைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள், வளைவுகள், மன்றங்கள், எட்டாத உயரத்தில் இருக்கும் கட்சிக்கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரிசி பொது வினியோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக விளங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலா டுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.

    அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் நிலைய ங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அங்கேயே அடுக்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சை, பிள்ளை யார்பட்டி, புனல்குளம், அம்மன்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

    இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொது வினியோ கத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்ப ப்படும். இந்தநிலையில் இன்று சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது. பின்னர் இந்த லாரிகள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தலா 1,000 டன் நெல் வீதம் கோவை, திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • பேச்சு போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் வள்ளல்பெருமான் வருவிக்கஉற்ற 200-வது ஆண்டு நிறைவு விழா, மாநில அளவில் நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா, நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    Vallalar 200th Anniversary Celebrationநிகழ்விற்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருவள்ளு வன் தலைமை தாங்கினார். பதிவாளர்(பொ) முனைவர் இளையாப்பிள்ளை முன்னிலை வகித்தார்.

    புலமுதன்மையர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வரவேற்புரை ஆற்றினார். தொ டர்ந்து அருட்பெருஞ்ஜோதி ஞானதீபத்தை துணைவேந்தர் திருவள்ளுவன் ஏற்றித் தலைமையுரை ஆற்றினார்.

    தொடர்ந்து தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக மருத்துவமனைகளின் இயக்குநர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி எழுதிய வைகுண்டர் வள்ளலார் ஓர் ஒப்பீட்டு நூல் வெளியிடப்பட்டது.

    நூலின் முதல் படியை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் இராமநாதன் வெளியிட துணைவேந்தர் திருவள்ளுவன் பெற்றுக் கொண்டார்.

    சிறப்பு விருந்தினராக நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் புதல்வர் ராஜாராமலிங்கம், வடலூர் சங்க கெளரவத் தலைவர் ராமதாஸ், வடலூர் தலைமைச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் வெற்றிவேல், மருத்துவர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாகக் காலையில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிப் பேச்சுப் போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேல் கலந்து கொண்டனர்.

    அதில் முதல் பரிசு 30,000, இரண்டாம் பரிசு 20,000, மூன்றாம் பரிசு 10,000 மற்றும் ஆறுதல் பத்துப் பரிசுகள் தலா 1000 என்கிற வகையில் வழங்கப்பட்டன.

    நிகழ்வின் ஏற்பாடுகளை வடலூர் தலைமைச் சங்க மாநிலத் தலைவர் மருத்துவர் அருள் நாகலிங்கம், பேராசிரியர்கள் குறிஞ்சி வேந்தன், மஞ்சுளா, சங்கரராமன், கவிஞர் வெற்றிச்செல்வன், கவிஞர் யோகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • டி.பி.சி ஊழியர்கள் மற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் டி.பி.சி ஊழியர்கள் மற்றும் சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயபால்,

    சுமைப்பணி சம்மேளன தலைவர் தலைவர் வெங்கடபதி , மாவட்ட பொருளாளர் பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணை செயலாளர்கள் அன்பு, சாய் சித்ரா, ஆட்டோ சங்கம் மாநில செயலாளர் ராஜா, நகர துணை தலைவர் செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.
    • கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்கின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ,திருவோணம், நம்பிவயல், ஊரணிபுரம், கரம்பக்குடி, உள்ளிட்ட பகுதியிலிருந்து தினந்தோறும் கல்லூரி, மற்றும் பள்ளி, மாணவ, மாணவிகள், கல்லாக்கோட்டை அரசு கல்லூரி, செவந்தான்பட்டி கல்லூரிகளில் படிப்பதற்கு பஸ்சில் பயணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கல்லூரி செல்ல மற்றும் மாலை வீடு திரும்பும் நேரத்தில் மாணவர்கள் கூட்டம் மற்றும் பொது மக்கள் அதிக அளவில் உள்ளதால் பஸ் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    மேலும் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

    இதனால் அவர்கள் ஆபத்தில் சிக்கி கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.எனவே பட்டுக்கோட்டையில் இருந்து நம்பிவயல், திருவோணம், ஊரணிபுரம், வழியாக கந்தர்வகோட்டைக்கு, மற்றும் திருவோணத்தில் இருந்து ஒரத்தநாடு கல்லூரிக்கு மாணவ மாணவிகள் செல்ல காலை மாலை நேரங்களில்

    கூடுதலாக பேருந்து இயக்கப்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

    • வயதான பின் வந்த விபரீத ஆசையால் முதியோர் இல்லம் நடத்தி வந்த சூரியகலா தற்போது சிறைக்கு பின்னால் கம்பி எண்ணி கொண்டு உள்ளார்.
    • பருவ வயதில் ஏற்படும் எண்ணங்களை நாம் சிறிது நேரம் சிந்தித்து செயல்பட்டால் நலமுடன் வாழலாம் என்பதே பொதுவான கருத்து.

    தமிழகத்தில் சிறுவர், சிறுமிகளின் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போக்சோ உள்ளிட்ட பல கடுமையான சட்டங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் சிறார்கள் மீதான பாலியல் தொல்லை பல்வேறு இடங்களில் அரங்கேறி வருகிறது. அதைப்போல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 15 வயது சிறுவனை மயக்கி 55 வயது பெண் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதன் பற்றிய விவரம் வறுமாறு:-

    கும்பகோணம் அருகே சோழன் மாளிகையை சேர்ந்தவர் வீரசோழன். இவரது மனைவி சூரியகலா (வயது55). இவர் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் முதியோர் காப்பகத்தை நடத்தி வருகிறார்.

    கும்பகோணம் பேட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் (52). இவர்கள் இருவரும் நண்பர்கள். முருகன் அந்த பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக வீட்டில் சமையல் செய்து அந்த பகுதியில் உணவு வழங்கி வந்துள்ளார். இவரது 15 வயதுகுட்பட்ட மகன் ஒரு பள்ளியில் படித்து வந்தான், மேலும் இரவு நேரங்களில் அம்மாவிற்கு உதவியாக இரவு உணவு தயார் செய்தும் அப்பகுதியில் வினியோகம் செய்து வந்தான். அவ்வாறு இரவு உணவை முதியோர் இல்லம் நடத்தி வரும் சூரியகலாவிற்கு கொடுத்து வந்துள்ளான். இந்நிலையில் தான் சூரியகலாவிற்கு விபரீத ஆசை உருவானது. அவர் பள்ளி மாணவனை தனது காதல் (காம) வலையில் வீழ்த்த நினைத்தார். அதற்காக அவர் அச்சிறுவனிடம் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியும், ஆபாச வீடியோக்களை காட்டியும் உள்ளார். பருவவயதில் எதையும் சிந்திக்காமல், பின்விளைவுகள் பற்றியும் அறியாமல் அந்த பள்ளி மாணவன் சூரியகலாவின் வலையில் சிக்கி கொண்டான்.

    இந்நிலையில் சுறுசுறுப்பாக சுற்றி திரியும் தனது மகன் சிலநாட்களாக ஒரு அறையில் தனிமையில் இருப்பதும், உடல் மெலிந்து காணப்படுவதும் அவரது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மகனிடம் விசாரித்த போது அவன் எதையும் கூறாமல் மறைத்து உள்ளார்.

    இதனால் மகனின் விபரீத நிலைமை உணர்ந்த பெற்றோர் அவனை உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அந்த பள்ளி மாணவன் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து டாக்டர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவனிடம் விசாரித்ததில் சூரியகலா தன்னிடம் தவறாக நடந்து கொண்டாக கூறினான்.

    இதைத் தொடர்ந்து இது குறித்து சுவாமிமலை போலீசாரிடம் சிறுவனின் பெற்றோர் புகார் அளிக்க சென்றனர்.

    அவர்கள் இந்த வழக்கை விசாரித்து பெண்ணால் பாதிக்கப்பட்ட சிறுவன் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்பதால் இந்த வழக்கை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

    அதன்படி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி இந்த வழக்கை விசாரித்து சிறுவனிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சூரியகலா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முருகன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தார். தொடர்ந்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் திருச்சி மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

    வயதான பின் வந்த விபரீத ஆசையால் முதியோர் இல்லம் நடத்தி வந்த சூரியகலா தற்போது சிறைக்கு பின்னால் கம்பி எண்ணி கொண்டு உள்ளார். பருவ வயதில் ஏற்படும் எண்ணங்களை நாம் சிறிது நேரம் சிந்தித்து செயல்பட்டால் நலமுடன் வாழலாம் என்பதே பொதுவான கருத்து.

    ×