என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு
- தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி மற்றும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சி இன்று நடந்தது.
- இதில் 75-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
இந்திய அரசு கலாச்சா ரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் ஏக் திவாஸ் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி மற்றும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் கோபால கிருஷ்ணன் முன்னிலையிலும் நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் தலைமையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 75-க்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் நல சங்கம் மாணவர்கள் கலந்து கொண்டு கலைஞர் நகரிலிருந்து தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு தேசிய ஒற்றுமைக்கான ஓட்டம் ஓடி வந்தனர்.
பின்னர் தென்னகப் பண்பாட்டு மையம் வந்தடைந்தவுடன் மாணவர்கள் மற்றும் தென்னகப் பண்பாட்டு மைய அலுவலர்கள் அனைவரும் ஏக் திவாஸ் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவர்களுக்கு தென்னக பண்பாட்டு மைய இயக்குநர் சான்றிதழ் வழங்கினார்.






