என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • கைலாசநாதருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருள் மிகு ஆதி கைலாசநாதர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கைலாசநாதர் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர் மற்றும் 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்து நிறைவாக 108 கிலோ அன்னத்தால் அபிஷேகம் செய்தனர்.

    சிவனுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்ப ட்டது பின்னர் அபிஷேகம் செய்த சாதம் கலவை சாதம் ஆக தயார் செய்து பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. ஏராளமா ன பக்தர்கள் கலந்து கொ ண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடு ஆதி கைலாசநாதர் சேவா சபா அறக்கட்டளை மேலா ண்மை அறங்காவலர் சிவ விவேகானந்தன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை தென்றல் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா ( வயது 31). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது நள்ளிரவில் வீட்டின் மேல் மாடி வழியாக புகுந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து வளையல், மோதிரம், தோடு என 10 பவுன் தங்க நகைகளை திருடி கொண்டு தப்பி சென்றனர்.

    இந்த நிலையில் காலையில் எழுந்த பிரியங்கா பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் தான் வைத்திருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தட்கல் முறையில் விதிக்கப்படும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.
    • கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் இன்று மாநிலத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.

    பொதுச் செயலாளர் ராஜா வரவேற்றார். பொருளாளர் பொன்னுச்சாமி, இளைஞரணி தலைவர் ஜெயபாலன் , மாநில அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு தலைவர் தங்கராஜ், கௌரவ ஆலோசகர் சக்திவேல், உஜ்ஜையினி மாகாளியம்மன் திருப்பணிக்குழு செயலாளார் துரையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் 2023-ம் ஆண்டிற்கான சிறப்பு மலரின் முதல் பிரதியை வணிகப்பூஷனம் டாக்டர் வெள்ளைச்சாமி நாடார் வெளியிட மாநில அமைப்பு தலைவர் கணேசன் பெற்றுக்கொண்டார்.

    இதையடுத்து சேலம் நகர அனைத்து வணிகர் சங்கம் பொதுச் செயலாளர் ஜெயசீலன் சிறப்புரையாற்றினார். தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தீர்மானங்கள் விளக்க உரையாற்றினார்.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில் வருகிற டிச ம்பர் மாதம் சுதேசி, தொழில் பாதுகாப்பு மாநாடு நடத்த வேண்டும். அதில் கலந்து கொள்ள அரசியல் கட்சி தலைவர்களை அழைக்க வேண்டும். விதேசிகளை வளர்த்திடவும், சுதேசிகளை அழித்திடவும் முனைப்புடன் செயல்படும் தேச விரோத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . மின் கட்டணம் உயர்வை குறைத்திட வேண்டும். தக்கல் முறையில் விதிக்கப்படும் மின் கட்டண உயர்வினை கைவிட வேண்டும் . ஒருங்கிணைந்த தென் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் . கடைகளில் மாமூல் கேட்பதும், மறுக்கும் கடை உரிமையாளர்களை தாக்குவதுமான செயலுக்கு கடை உரிமையாளர்கள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் சமூக விரோதிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொடர்ந்து அந்நிய முதலீடு ஆன்லைன் வியாபாரத்தை தவிர்ப்போம். உள்ளூர் வியாபாரிகளை ஊக்குவிப்போம். நம் கடைகளில் பொருட்களை வாங்குவோம் என்று வலியுறுத்தப்பட்டன.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் துரையரசன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜ கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கங்கை பார்வதி தேவி சமேதராக சிவேந்திரர் மற்றும் சிவபெருமான் முழுஉருவத்தில் காட்சி அளிக்கின்றனர்.

    இங்கு பிரதி பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிவேந்திரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில், ஞானம் நகர், பைபாஸ் எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லுார், காந்தா வனம், சித்தர் காடு, ஆலங்குடி, நெல்லிதோப்பு, கடகடப்பை, தளவா பாளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகர், பனங்காடு, கீழவ ஸ்தாசாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம் , ஆனந்த் நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேதவள்ளி வீட்டுக்குள் திடீரென 4 அடி உயரம் உள்ள நல்ல பாம்பு புகுந்தது.
    • அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் முடுக்குத் தெருவில் வசித்து வருபவர் வேதவள்ளி. இவரது வீட்டுக்குள் 4 அடி உயரம் உள்ள நல்ல பாம்பு திடீரென புகுந்தது. இதுகுறித்து பாபநாசம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பாபநாசம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்புத்துறை படை வீரர்கள் விரைந்து வந்து வீட்டிற்கு புகுந்த 4 அடி உயர நல்ல பாம்பினை பிடித்து சாக்கு பையில் அடைத்து அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • ஒன்பத்துவேலி வான்மீகிநாதருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள கோவில்பத்து ஸ்ரீ ஆபத்சகேஸ்வரசாமி கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சுவாமிக்கு அன்னா பிஷேகம் நடைபெற்றது.கோவிலின் மூலவரான ஆபத்சகேஸ்வரசாமிக்கு அன்னம் வடித்து அன்னத்தை(சோறு) கொண்டும் பக்தர்கள் வழங்கிய காய்கறிகளை கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.

    பூஜைகளு க்கு பிறகு தீபாரதனை காண்பி க்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதே போல திருக்காட்டுபள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரசாமி திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ அக்னீஸ்வரசாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்துவேலி வான்மீகி நாத சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    அன்னாபிஷேகம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துகாட்டாள விளங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    பெரிய கோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கமும் என தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெருவுடையாருக்கு ஐப்பசி மாத பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும்.

    அதன்படி இன்று ஐப்பசி மாத பவுர்ணமி என்பதால் பிற்பகலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் வழங்கிய 1500 கிலோ அரிசி சாதமாக தயார் செய்யப்பட்டன. பின்னர் தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டன.

    இதையடுத்து 500 கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இரவில் லிங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட அன்னம் பக்தர்கள், கால்நடைகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இரவு 7 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு சந்திரகிரகணம் என்பதால் 8 மணிக்கே நடை சாத்தப்பட உள்ளது.

    • ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் தினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். .
    • சீர்வரிசைகளுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்ததை தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தெற்கு வீதியில் புகழ்பெற்ற கலியுக வெங்கடேச பெருமாள் அமைந்துள்ளது.திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் கலியுக வெங்கடேச பெருமாளாகவும் சதுர்புஜ வரதராஜ பெருமாளாகவும் காட்சி தருவதாக ஐதீகம். இத்தலத்தில் ஆண்டு தோறும் கும்பாபிஷேகம் தினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று 12-ம் ஆண்டு கும்பாபிஷேகம் தினவிழா விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதையடுத்து சீர்வரிசைகளுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்தார்கள். தொடர்ந்து திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தார்கள்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தார்கள்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டனர்.
    • அமைச்சருக்கு நினைவு பரிசாக கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்கம், கலியபெருமாள் நினைவு கிரிக்கெட் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தின. கடந்த 18-ம் தேதி தொடங்கிய போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் போட்டிகள் முடிந்ததையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் காளிதாஸ் வாண்டையார் வரவேற்று பேசினார்.

    விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சென்னை பிரியர் இன்டர்நேஷனல் அணிக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கி பாராட்டினார்.

    இதேப்போல் 2-ம் இடம் பிடித்த எடைமேலையூர் சுரேஷ் கிளப் அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம், கோப்பை, 3 மற்றும் 4-ம் இடம் பிடித்த சென்னை ஜி.எஸ்.டி கஸ்டம், தஞ்சை பேட் மெம்மோரியல் அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கினார்.

    மேலும் தொடர் நாயகன் பரிசாக ரூ.10 ஆயிரம், சிறந்த பேட்டர், சிறந்த பந்து வீச்சாளருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார்.இதையடுத்து அமைச்சருக்கு நினைவு பரிசாக கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், கவுன்சிலர்கள் மேத்தா, நீலகண்டன், தமிழ்வாணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணிகண்ணன், விளையாட்டு பயிற்சியாளர்கள் தமிழ்குமரன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய மாவட்ட இளைஞரணி மாநகர அமைப்பாளர் வாசிம்ராஜா நன்றி கூறினார்.

    • பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்
    • கட்சியினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆத்துப்பாலம் பள்ளிவாசல் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தஞ்சை தொகுதி தலைவர் முகமது ரபீக் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் அஜீஸ், எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்டத் தலைவர் தஞ்சை காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெ டுக்க இந்தியர்கள் அ னைவரும் ஒருங்கி ணை ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் தஞ்சை தொகுதி செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட தொண்டரணி தலைவர் முகமது சிராஜுதீன், தொகுதி இணை செயலாளர் முகமது தாஹிர், தொகுதி துணை தலைவர் முகம்மது சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கார்த்தி மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • கார்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் சாக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் கார்த்தி (வயது 41).

    இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி, கார்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×