search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.198 கோடி மதிப்பில் தஞ்சாவூர்-மன்னார்குடி  மேம்படுத்தப்பட்ட சாலை
    X

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த தஞ்சாவூர்-மன்னார்குடி மேம்படுத்தப்பட்ட சாலை

    ரூ.198 கோடி மதிப்பில் தஞ்சாவூர்-மன்னார்குடி மேம்படுத்தப்பட்ட சாலை

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, நம்ம சாலை செல்போன் செயலியை தொடங்கி வைத்தார்.
    • சாலை தொடங்கும் இடத்தில் விளக்கு ஏற்றப்பட்டு சாலை பயனாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய, சாலையில் ஏற்படும் பள்ளங்களை பொதுமக்கள் துணையோடு கண்டறிந்து குறித்த காலத்தில் செப்பனிடும் திட்டத்திற்காக நம்ம சாலை என்ற புதிய மென்பொருள் மற்றும் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, நம்ம சாலை செல்போன் செயலியை தொடங்கி வைத்தார்.

    மேலும் ரூ.198 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் தஞ்சாவூர்- மன்னார்குடி செல்லும் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் - மன்னார்குடி சாலை தொடங்கும் இடத்தில் விளக்கு ஏற்றப்பட்டு சாலை பயனாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சென்னை கன்னியாகுமரி தொழில் தடத் திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தரராஜன், கும்பகோணம் கோட்டப் பொறியாளர் நாகராஜன், உதவிக் கோட்டப் பொறியாளர் ஜெயராமன், மன்னார்குடி உதவி பொறியாளர் வடிவழகன் மற்றும் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×