search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவர்களின் நிதி சுமையை குறைக்கவே பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி- அன்பில் மகேஷ் பேட்டி
    X

    மாணவர்களின் நிதி சுமையை குறைக்கவே பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி- அன்பில் மகேஷ் பேட்டி

    • தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.
    • நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று ராம்ராஜ் புதிய காட்டன் ஷோரூமை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். இருந்தாலும் அதுவரைக்கும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் சிறப்பு பயிற்சி நடைபெறும்.

    ஏனென்றால் வெளியே பல லட்சம் கொடுத்து மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    இதனால் மாணவர்களின் நிதி சுமையை குறைப்பதற்காக பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் பணி நடந்து வருகிறது.

    நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இது தொடர்பாக பள்ளிகளில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தவறு இல்லை என்று நீதிமன்றமே கூறியுள்ளது. அரசு தங்களது கருத்துகளை இதுபோன்று வெளிப்படுத்துவதில் தவறில்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×